அடுக்கினாள். அனைத்தும் அடுக்கிய பிறகு நோட்புக்கில் டைம் டேபிள் போல் வரைந்து அதில் ஒவ்வொரு கட்டத்திலும் மளிகை செலவு, காய்கறி செலவு, போன் செலவு, கரண்ட் செலவு என தனித்தனியாக கட்டத்தில் எழுதினாள்.
இப்போது ஒவ்வொரு பில்லாக எடுத்து சரிபார்த்து கால்குலேட்டர் மூலம் கணக்கு போட ஆரம்பித்தாள். வந்தனாவோ நந்தினி என்ன செய்கிறாள் என பார்ப்பதற்காகவே அவ்விடம் விட்டு செல்லாமல் நின்றுக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தாள்.
நந்தினியும் ஒவ்வொரு பில்லையும் ஆழமாக பார்த்து கவனமாக சரிபார்த்து கணக்கு போட ஆரம்பித்தாள்.
தாத்தாவின் யோசனைப்படி பில்கள் சிலது ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு கலந்து வைக்கப்பட்டிருக்க அதை தனியாக எடுத்துவிட்டு கணக்கு போட்டாள்.
ஒரு சில பில்களில் அர்ஜூன் வேண்டுமென்றே பணத்தின் தொகையை மாற்றி மாற்றி எழுதி அதிகமான பில் பணமாக எழுதியிருக்க அதைப்பார்த்த நந்தினி அதையும் தனியாக வைத்தாள். பாதிக்கு மேல் தப்பும் தவறுமாக இருந்த காரணத்தால் கணக்கு போடாமல் நந்தினி தாத்தாவிடம்
”தாத்தா இந்த பில்கள் தப்பா இருக்கு” என சொல்ல வந்தனாவிற்கு தூக்கிவாரிப்போட்டது
”என்னம்மா சொல்ற”
“ஆமாம் தாத்தா இங்க பாருங்க பில்களை ஜெராக்ஸ் எடுத்து இதுல கலந்து வைச்சிருக்காங்க. ஏற்கனவே இந்த ஒரிஜினல் பில்கள் இங்க இருக்கு பாருங்க” என அவள் காட்டினாள். அதைப் பார்த்தார் தாத்தா
அடுத்து அவளே
”இந்த பில் பாருங்க தாத்தா அடித்தல் திருத்தலா இருக்கு யாரோ பொய் கணக்கு எழுதியிருக்காங்க தாத்தா இது சரியான பில்கள் கிடையாது. இதை வெச்சி கணக்கு போட