”சுந்தரம் கேசவா ரெண்டு பேரும் கருணாவுக்கும் தினாவுக்கும் பொண்ணுங்களை தேடுங்க. உங்க பொறுப்புல விட்டிருக்கேன். ஆளுக்கு ஒவ்வொரு வேலைகள் செய்தாதான் அடுத்த மாசம் கல்யாணத்தை முடிக்கலாம். எந்த சின்ன சின்ன மீட்டிங்கையும் ஒத்துக்காதீங்க ஒரு 2 மாசம் ஆற போடுங்க பெரிய மீட்டிங் வந்தா மட்டும் ரிஷியை அனுப்பிடலாம். மத்தபடி வீட்ல வேலைகளை செய்ங்க புரியுதா” என கேட்க அவர்களும் சுறுசுறுப்பாகி சரியென தலையாட்டி வேகமாக சாப்பிட ஆரம்பித்தனர்.
தாத்தா கருணா மற்றும் தினாவை பார்த்து
”கருணா, தினா ரெண்டு பேரும் உன் அப்பாவோட போங்க கல்யாண புரோக்கரை பாருங்க பொண்ணுங்களை செலக்ட் பண்ணுங்க இந்த முறை உங்க முடிவுதான். சரியான பொண்ணா 4, 5 பாருங்க அதுல ஒண்ணை என் பையன்கள் முடிவு எடுப்பாங்க அப்படியே அர்ஜூனை கூட்டிட்டு போங்க. அவன் பொண்ணுங்களை பத்தி நல்லாவே விசாரிச்சிடுவான். அவன் துணையிருக்கட்டும் சீக்கிரம் சாப்பிட்டு கிளம்புங்க” என சொல்ல அவர்களும் வந்தனாவை மறந்து தங்களுக்கு வரப்போகும் மனைவிகளை நினைத்து சீக்கிரமாகவே சாப்பிட்டு எழுந்தார்கள்.
அனைவரும் சாப்பிட்டபின் தாத்தா சொன்ன வேலைகளை முடிக்க அவரவர்கள் சென்றுவிட வீட்டில் இப்போது தாத்தா சுசித்ரா பவித்ரா மற்றும் வந்தனா நந்தினி இருந்தார்கள்.
அவருக்கு இது வசதியாகிவிட்டது. அவர் வீட்டில் இருந்தவர்களை ஹாலுக்கு அழைத்தார். தாத்தாவின் பக்கத்தில் சுசித்ராவும் பவித்ராவும் இருந்தார்கள். தான் செய்யச் சொன்ன வேலையை அர்ஜூன் செய்துக்கொண்டு வந்து கொடுத்த பைலை எதிரே இருந்த நந்தினி மற்றும் வந்தனாவிடம் தந்தார். கூடவே கால்குலேட்டரும் கொடுத்தார்.
”வந்தனா நந்தினி இது போட்டி சரியா நீங்க படிச்சவங்க உங்க படிப்பை நான் பரிட்சை வைக்கறேன் ஒண்ணுமில்லை இந்த பைல் போன மாசம் இந்த வீட்டோட வரவு செலவு பில்லுங்க நீங்க இந்த மாசம்தானே வந்தீங்க அதனால போன மாசம் பில்கள் எல்லாம் அதுல இருக்கு சரியா கணக்கு பண்ணி கொடுங்க. ஏற்கனவே நாங்க கணக்கு பார்த்தாச்சி.