(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

”கண்டிப்பா செய்ங்க ஆனா ஒரு விசயம் இந்த போட்டி முடியட்டும் வெண்ணிலாவை இப்ப கூப்பிட்டா கூட அவளோட அப்பனை எதிர்த்துட்டு வந்துடுவா அவளால பிரச்சனையில்லை தாத்தா ஆனா உங்க வீட்ல இப்ப நிறைய பிரச்சனை இருக்கு”

   

“எதை சொல்ற”

   

“வந்தனா அவள் ரிஷியில்லைன்னாலும் இந்த வீட்டை விட்டு போவாளான்னு சந்தேகமா இருக்கு தாத்தா”

   

“என்னடா சொல்ற”

   

“உண்மையை சொல்றேன் தாத்தா ரிஷின்னு இல்லை கருணா இருக்கான் தினா இருக்கான் அவங்களையும் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுவா ஆனா அவள் இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா இந்த வீடு தாங்காது”

   

“ஏன்டா அப்படி சொல்ற”

   

“அவள் நடவடிக்கைகளை முதல்ல இருந்து நான் கவனிக்கிறேன். இதுல அவங்க வீட்டு பக்கத்து வீட்ல கூட அவளை பத்தி விசாரிச்சிட்டேன் நல்லவிதமாவே கருத்து சொல்லலை. எப்படியோ இந்த வீட்ல நுழைஞ்சிட்டா. எதையாவது கெட்டியா பிடிச்சிக்கிட்டு இங்கயே நிப்பாளே தவிர போக மாட்டா”

   

”இந்த போட்டி முடிஞ்சதும் போயிடுவா” என்றான் ரிஷி

   

”இல்லைண்ணா சத்தியமா இல்லை அவள் போகமாட்டா. இந்த 5 நாளா அவளை நான் கண்காணிக்கிறேன் சமையல் வேலை முழுக்க நந்தினி செய்றதால அவள் கருணா தினா கிட்ட பேச ஆரம்பிச்சிருக்கா அவனுங்களும் அவள்கிட்ட பேசறாங்க. நீங்களே சொல்லுங்கண்ணா இத்தனை நாள்ல ஒரு நாள்கூட உங்ககிட்ட இணக்கமா பேசி நான் பார்க்கல அவளோட எண்ணம் மாறிடுச்சி. 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.