(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

“சரிடா நீ சொல்றதும் சரிதான் நான் இன்னிக்கே 2 பொண்ணுங்களுக்கும் இந்த ஹாலை அழகு படுத்தற வேலையை சொல்றேன் செய்யட்டும் யாரு அழகா செய்றாங்களோ அவங்களுக்கு மார்க் போடறேன் இன்னியிலிருந்து வந்தனாவை சமைக்க சொல்றேன் வரட்டும் அவள்ட்ட நான் பேசிக்கிறேன் சரி அதைவிடு நீ சொல்லு இந்த முறை பெரிய லாபம் வந்திருக்கு. உனக்கு என்ன வேணும் சொல்லு”

   

“நந்தினி என்கிட்ட ஒரு விசயம் கேட்டா தாத்தா அதை அவளுக்கு தரனும் அதுக்கு உங்க உதவி வேணும்”

   

”சொல்லு என்ன வேணுமாம் அவளுக்கு”

   

“அர்ஜூனுக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வைங்க எனக்கு அண்ணி வேணும்னு கேட்டா நானும் உங்க மேல இருந்த நம்பிக்கையில சரின்னு சொல்லிட்டேன்”

   

“ஆனா வெண்ணிலாவோட அப்பன்தான் முடியாதுன்னு சொல்றானே”

   

“அவன்தான் சொல்றான் ஆனா வெண்ணிலா ஸ்டெடியா இருக்காளே”

   

“அப்ப ஒண்ணு பண்ணலாம் பேசாம அவளுக்கும் அர்ஜூனுக்கும் கல்யாணம் பண்ணி வைச்சிடலாம் அவளை வீட்டை விட்டு வர சொல்லு”

   

”அவளுக்கென்ன அவள் வந்துடுவா அதுக்கு அப்புறம் அவளோட அப்பன் செய்ற பிரச்சனையை யார் தீர்த்துவைப்பா” என கேட்க அர்ஜூனே அவ்விடம் வந்தான்

   

”அதை நான் பார்த்துக்கறேன்” என்று சொல்லிக்கொண்டே வந்து அமர்ந்தான்.

   

”நீயாடா வா வா உன்னைப்பத்திதான் பேசிக்கிட்டு இருந்தோம் நந்தினிக்கு அண்ணி வேணுமாம் கேட்டுக்கிட்டா நீ என்ன சொல்றா  கல்யாணம் செஞ்சிக்கிறியா எல்லா ஏற்பாடுகளையும் நானே கிட்ட இருந்து செய்றேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.