(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

வேற ஏதோ திட்டம் போடறா எப்படியும் தன்னால ஜெயிக்க முடியாது. அதனால ஏன் இந்த வீட்டை விடனும் ரிஷியில்லைன்னா கருணாவை பிடிச்சிக்கலாம் அவன் இல்லைன்னா அடுத்து தினாவை பிடிச்சிக்கலாம்னு நினைக்கறா. எப்ப பாரு கருணா வந்தாலே அவன்கிட்ட போய் பேசறா அவனும் வேலையா வெளிய போனா அடுத்து தினாவை பிடிக்கறா சரியில்லை தாத்தா சரியில்லை தப்பாயிருக்கு எனக்கு தெரிஞ்சி எனக்கு கல்யாணம் பேசி முடிக்கறது அப்புறம் நான் நந்தினி கல்யாணத்துக்கு முதல் நாள் கூட கல்யாணம் பண்ணிக்கிறேன் எனக்கு பொண்ணு ரெடியாயிருக்கு ஆனா கருணாவும் தினாவும் வந்தனாகிட்ட மாட்டவே கூடாது. 

   

தாத்தா ப்ளீஸ் இந்த வீட்டு உப்பு திண்ணவன் அந்த முறையில உங்ககிட்ட கேட்கறேன் கருணாவுக்கும் தினாவுக்கும் பொண்ணை தேடுங்க சீக்கிரமா தேடுங்க இந்த போட்டியெல்லாம் வேணாம் இப்பதான் பாட்டியோட நடவடிக்கையும் மாறி ஒரு மூலையில முடங்கிட்டாங்க இனிமே அவங்க ஆட்சி இங்க நடக்காது. அதனால தைரியமா நீங்க அடுத்தடுத்த வேலைகளை ஆரம்பிக்கலாம்.”

   

“சரிடா ஆனா இங்க போட்டியிருக்கே அதை நான் கவனிக்கனுமே”

   

“அந்த பொறுப்பை பாட்டிகிட்ட விடுங்க”

   

“என்னடா சொல்ற”

   

”உண்மையை சொல்றேன் பாட்டிதானே இந்த வீட்டுக்கு சுசித்ரா பவித்ரான்னு ரெண்டு அருமையான மருமகளை தேடிப்பிடிச்சாங்க. நீங்க ஒண்ணும் தேடலையே. அதனால அவங்களே போட்டி வைக்கட்டும் பாட்டியோட கெடுபிடியில நந்தினி வேணா தாங்குவா ஆனா வந்தனாவால முடியாது”

   

“இல்லை வேணாம்டா வேணாம் இந்த போட்டி ஆரம்பிச்சி வைச்சது நான்தானே நானே இந்த போட்டியை முடிக்கறேன். அதுவும் இன்னிக்கே முடிக்கிறேன் நீ ஒரு காரியம் பண்ணு நான் சொல்றதை செஞ்சி எடுத்துட்டு வா இன்னிக்கே அவளை விரட்டறேன்” என அர்ஜூனிடம் ஏதோ சொல்ல அவனும் அந்த காரியத்தை செய்ய கிளம்பி விட்டான். அடுத்து சுசித்ராவை 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.