(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

“ஆனா நீ இங்க மருமகளாதானே வந்திருக்க அது உன் பொறுப்புதானே”

   

“உங்களுக்கே இங்க எந்த மரியாதையும் இல்லை. பாட்டிகிட்ட நீங்க வெறும் பொம்மை போல அடிமையாதானே இத்தனை வருஷமும் வாழறீங்க அப்புறம் என்ன.” என கேட்கவும் பவித்ராவால் தாங்க முடியவில்லை

   

”நான் என் அத்தைகிட்ட அடிமையா இல்லை. அந்த மாதிரி அவங்களும் என்னை நடத்தல நான் அவங்களை மதிக்கிறேன் மரியாதை கொடுக்கிறேன். அவங்களும் என்னை ஒரு மருமகளா இல்லை மகளா பார்க்கறாங்க. எங்க நான் எதையாவது செய்து தப்பாயிடுமோன்னு எல்லா பொறுப்புகளையும் அவங்களே பார்க்கறாங்க புரியுதா“

   

”நீங்க பொய் சொல்றீங்க இந்த போட்டியில நான் ஜெயிச்சி ரிஷியை நான் கல்யாணம் பண்ணாலும் சரி உங்களை மாதிரியே என்னையும் அடிமையா வேலைக்காரியாதான் பாட்டி மாத்துவாங்க எனக்கு தெரியும்” என சொன்னாள் வந்தனா. சரியாக அந்நேரம் வெளியில் இருந்து வந்த பாட்டியும் ரிஷியும் வீட்டில் ஹாலில் நடந்த உரையாடலைக் கேட்டனர். அதில் பாட்டியின் மனது மிகவும் நொந்து போனது. அவர் ரிஷியை பார்த்து கண்கலங்க ரிஷியோ பாட்டியை சமாதானம் செய்தான்.

   

”பாட்டி என்னாச்சி பாட்டி விடுங்க வாங்க உள்ள போலாம்” என அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

   

வந்தனாவோ பாட்டி வந்ததை கூட கவனிக்காமல் பேசிக்கொண்டே போனாள்.

   

”பாட்டி ஒரு திமிருபிடிச்சவங்க அவங்களுக்கு எப்பவுமே மத்தவங்க சந்தோஷமா இருந்தாலே பிடிக்காது. மிருதுளாவை போல ஒருத்தியை அவங்க கூட்டிட்டு வந்தப்பவே உங்களுக்கு புரிஞ்சிருக்கனும் பாட்டி எப்படிப்பட்டவங்கன்னு ஏதோ நான் நல்லவள் அதனால நீங்க என்னை கூட்டிட்டு வந்தீங்க இல்லைன்னா மிருதுளாதான் இந்த வீட்டு மருமகளா மாறி பாட்டியும் மிருதுளாவுமா சேர்ந்து உங்களையும் இந்த வீட்ல அடிமையா ஜெயில் போல நடத்தியிருப்பாங்க. ஆனா நான் அப்படியில்லை என்னை நீங்க மருமகளா ஏத்துக்கிட்டீங்கன்னா 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.