பண்றேன்னு அடிமையாயிடாத முடிஞ்சா பாரு முடியலைன்னா வந்துடு அண்ணன் நான் இருக்கேன் சரியா” என அர்ஜூன் சொல்ல அதற்கும் நந்தினி சரியென தலையாட்டவும் ரிஷிக்கு மண்டை காய அவன் நந்தினியிடம் சென்று அவளை நிறுத்தினான்
”ஏய் போதும் நிறுத்துடி முடியலை நேத்துலிருந்து பேசிக்கறீங்க பேசிக்கறீங்க இன்னுமா ஓயலை.”
“அத்தான் அண்ணா பாவம் தனியா இருப்பாரு அதான்”
“அவன் எங்க தனியா இருக்கான் கூட வெண்ணிலா இருக்காளே அப்புறம் என்ன நாம என்ன லண்டன்லயேவா தங்கிட போறோம் ஹனிமூன்தானே போய்ட்டு 6 மாசத்துல வந்துட போறோம் அப்புறம் என்னம்மா” என ஆறுதல் சொல்ல அர்ஜூன் ரிஷியிடம் பேச ஆரம்பித்தான்
”அண்ணா என் தங்கச்சி பாவம்ணா அவளுக்கு அப்பா அம்மா யாரும் இல்லை ஏதாவது கோபம் வந்தா கூட அடிச்சிடாதீங்கண்ணா அவளை நான் என் கண்ணுக்குள்ள பார்த்துகிட்டேன்ணா”
“டேய் இதைதான் 3 நாளா சொல்றியேடா இன்னுமாடா முடியலை நிப்பாட்டுடா நான் அவளை நல்லா பார்த்துக்குவேன்” என காலில் விழாத குறையாக கெஞ்சினான் ரிஷி
”என் தங்கச்சியையே உங்க கிட்ட ஒப்படைக்கிறேன் அவள் கண்ல ஆனந்த கண்ணீர் மட்டும்தான் வரனும்”
“டேய் போதும்டா எனக்கு ரத்த கண்ணீர் வந்துடப் போகுதுடா பாவி 1 மாசமா உன் தொல்லை தாங்க முடியலை. வெண்ணிலாவோட குடும்பம் நடத்தற வழியை பாரு நீ பாட்டுக்கு மாணிக்கவேல் பொண்ணை தூக்கிட்டு வந்து தாலிகட்டிட்ட அந்தாளு உன்மேல கொலை வெறியில இருக்கான். அந்தாள்கிட்ட மாட்டிக்காத”
“இல்லைண்ணா எனக்கு ஒண்ணும் ஆகாது ஆனா அண்ணா என் தங்கச்சி ஒரு குழந்தை அவளை பத்திரமா பார்த்துக்குங்கண்ணா”