(Reading time: 39 - 77 minutes)

 

யேசப்பா இப்பவே நிரு அண்ணிக்கு நிம்மதி தாங்க ஆமென்” என ஜெபித்தாள்.

சட்டென மொட்டுவிட்டது ஒரு அருமையான நட்பு அங்கே.

போர்களத்தில் தனியாளக நிற்பதுபோல் நின்றிருந்தவளுக்கு, தன் படை துணைக்கு வந்து சேர்ந்தது போல் ஒரு உணர்வு.

“என் பேர் ஆரணி, விரும்புறவங்க ‘ஆரு’ன்னு கூப்பிடுவாங்க. இது என் சின்ணண்ணா, சிரிக்க வைப்பதில் பி.எச்.டியோன்னு நினைக்கிற அளவுக்கு எல்லோரையும் சிரிக்க வைப்பான். இப்பதான் இவனை பார்த்து ஒருத்தங்க அழுது நான் பார்க்கிறேன். சாரி..”

இவள் கண்ணில் நீர் முட்டியதை கவனித்து வந்திருக்கிறாள்.

“ரொம்ப தேங்க்ஸ் ஆரு”

பேசிக்கொண்டே இருவரும் வந்து நின்றது நிமிடங்களில் அமைக்கபட்டிருந்த இரு சிம்மாசனங்களிட்டிருந்த அழகிய சிறு மேடைக்கு. ஆரணி ஆறுதலாக ஒரு பார்வை பார்த்தாள். அவள் சொன்ன வழிதான் ‘சரி’ என நிரல்யாவுக்குமே தோன்றியது. அப்பாவை இங்கு அவமதிக்க அவளால் முடியாது. ஆனால் திருமணத்தை தடுக்க மூன்று மாதம் அவகாசம் இருக்கின்றதே!

 நிச்சயவைபவம் தொடங்கியது.

“எங்கள் குடும்பத்திற்கு இவங்க மருமகளாக வர எங்களுக்கு பூரண சம்மதம். அதற்கு அடையாளமா இந்த மாலையை அவங்களுக்கு எங்க வீட்டு சார்பா எங்க அம்மா ஸ்தானத்திலிருந்து எங்க பெரியண்ணி அணிவிப்பாங்க.”

ஆரணி அறிவிக்க நிமிர்ந்து பார்த்த நிரல்யாவின் கையை ஆறுதலாக பற்றினாள் அவளது புதிய தோழி ஆரு.

 “ங்க வீட்டுக்கு சம்மதம்னுதான் சொல்றோம்..”

அந்த பெரியண்ணி மாலை அணிவிக்க மௌனம் காத்தாள் நிரல்யா. மணமகள் வீட்டாருக்கு என் அண்ணண் ரக்க்ஷத் மருமகனாக வருவதில் சம்மதம் என்பதை அறிவிக்கும்படி பெண்வீட்டாரின் சார்பில் மணமகளின் தந்தை இந்த மாலையை மணமகனுக்கு அணிவிப்பார்கள். ஆரணியின் அறிவிப்பை தொடர்ந்து அருகிலிருந்த ரக்க்ஷத்திற்கு அவள் தந்தை மாலை அணிவிக்க

“உங்க இரண்டு பேர் சம்மதத்தையும் இன்னும் மூனு மாசம் கழிச்சு கேட்ப்பாங்க, அப்ப சொல்லிக்கோங்க....” இவள் காதில் ஆறுதலான குரலில் சொன்னாள் ஆரணி.

மாலையை வாங்கியவன் இவள் புறம் திரும்புவதை உணர்ந்து விழிகளை தாழ்த்திக் கொண்டாள் நிரல்யா. வெட்க்கமில்லை, கடும் வெறுப்பு. கண்கள் அணிந்திருந்த மாலையின் மீது நிலைத்தது. ரோஜா மாலையின் இடையில் அலங்காரமாய் ஏதோ ஒருவகை மஞ்சள் பூ.

மஞ்சள்.......... அன்று ஜாஷ் தேர்ந்தெடுத்து தந்த மஞ்சள் நிற உடை ஞாபகம் வந்தது. ஏதோ ஒரு உணர்ச்சி வேகம் அடிவயிற்றிலிருந்து கிளம்பி நுரையீரலை நிறைத்தது. ‘அவனுக்கும் கல்யாணமாகியிருக்குமோ.... ‘ அதுவரை அனுபவித்துவந்த உணர்ச்சி போராட்டத்துடன் இந்த மரண அடியும் சேர அவ்வளவுதான் அந்த நினைவோடு மயங்கி சரிந்தாள் நிரல்யா.

மீண்டும் விழிப்பு வந்தபோது முதல் சில நொடி எங்கிருக்கிறாள் என புரியவில்லை. படிபடியாகத்தான் புரிந்தது அது அவளது படுக்கை அறை என. நடந்தது மெல்ல நினைவு வந்தது.ஏதோ மருந்து கொடுத்திருப்பார்களாக இருக்கும். சோர்வாக உணர்ந்தாள். மனமோ வெறுமையாய், வெற்றிடமாய். கடவுளை உணர முடியாத தருணம் இப்படித்தான் இருக்கும்.

“ஜீசஸ் ஃபில் மீ ப்ளீஸ், ஐ ஃபீல் எக்ஃஸ்ட்ரீமிலி லோன்லி...”

இவள் சொல்லி முடிக்கவும் அறையில் அசைவு, அறை விளக்கு உயிர் பெற்றது.

“ஆமென்”

“ஆரூ......”

“நான் தாங்க நிரு...”

முதன் முறையாக இவளது அறை இன்னொரு ஜீவனோடு பகிர்ந்துகொள்ளபட்டிருக்கிறது.

“இப்படி விழிக்கும் போது வெறுமையா ஃபீல் ஆகும், கூட யாராவது இருந்தாதான் நல்லாயிருக்கும்னு அண்ணா என்னை இங்க விட்டுட்டு போனாங்க.... உங்களுக்கொன்னும் அப்ஜெக்க்ஷன் இல்லையே....”

படுக்கையில் அமர்ந்திருந்த நிரல்யா அருகில் நின்றிருந்த ஆரணியின் இடையோடு இருகையால் அணைத்தவள் அவள் வயிற்றில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள்.

ஆரணி அம்மாவாக தெரிந்தாள் அவளுக்கு. அழுது கொண்டிருந்த நிரல்யாவின் முதுகை  ஆறுதலாக தடவி கொடுத்தாள் ஆரணி. இன்னும் பலத்தது அழுகை. சற்று நேரம் செல்ல தன்னை சமன் படுத்திக்கொண்டு விலகி அமர்ந்தாள் பெரியவள்.

வயதில் சிறியவளான ஆரணியோ படுக்கையில் அமர்ந்து நிரல்யாவை தன் மடியில் சாய்த்துக் கொண்டாள்.அம்மா இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருக்கும்.

 சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணுவது நலமாய் இருக்கும். அங்கு ஜீவனும் ஆசிர்வாதமும் தங்கி இருக்கும்னு படித்த பைபிள் வசனம் அனுபவமாக புரிந்தது. ‘சொந்த குடும்பம்ங்கிறது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்?’

“ஆரு நீ எனக்கு தங்கையா பிறந்திருக்கலாம்”

“இந்த கல்யாணம் நடந்தாலும், நடக்காட்டாலும் நான் உங்க தங்கைதான். சிஸ்டர், இல்லனா சிஸ்டர் இன் லா. எல்லாம் ஒன்னுதான்.”

“தேங்க்ஸ் ஆரு”

“தன் தங்கைக்கு தங்கையா இருக்கிறதுக்காக தேங்க்ஸ் சொன்ன முத அக்கா நீங்கதான்”

“ஐ டோண்ட் நோ வாட் இஸ் டூ ஹவ் அ சிஸ்டர்”

“இப்படி சுய பச்சாபத்தில புலம்புறதை முதல்ல நிறுத்துங்க நீங்க.. தனியா பிறந்தது தப்பு கிடையாது. இப்ப வரைக்கும் தனியாவே இருக்கீங்க பாருங்க அது யாரு தப்பாம்? உங்க ஃப்ரண்ட்ஸ்னு யாருமே வரலை.”

“எப்பவும் செக்யூரிட்டி காட்ஃஸ் துப்பாக்கியோட கூட வருவாங்களா, அதனால ஸ்கூல்ல கூட யாரும் என்ட்ட சேரமாட்டாங்க ஆரு....”

“ஓ........ இதை நான் யோசிக்கலைதான், ஸ்டில் காலேஜ் லைஃப் இருந்திருக்குது, சர்ச் ஃபெல்லொஷிப் இதெல்லாம்கூட இருந்திருக்குதே.....” அவள் வாய்விட்டு யோசிக்க,

தலையில் கொட்டு வாங்கியது போல் ஒரு உணர்வு நிரல்யாவிற்கு. அந்த காலம் முழுவதும் இவள் தன்னை சுய சிறையில் அல்லவா அடைத்திருந்தாள். காரணம் வெளி சொல்லமுடியாத காதல் சோகம்.

“நான், என் மனசு, என் வலி, என் லைஃபுன்னு சுயத்துக்குள்ளே சுழன்றிருப்பது இப்ப புரியுது ஆரு... அடுத்தவங்க மனசுல என்னன்னு கொஞ்சம் அக்கறை எடுத்திருந்தேன்னா கூட இப்ப எனக்குன்னு யாராவது......, இனிமேல் என்னை மாத்திகிறேன்பா...”

“ஹேய்.............. என் படைக்கு ஒரு ஆள் கிடைசாச்சு...... என் மனசையும் இனிமே கண்டுப்பீங்கதானே?....” கிண்டலாகத்தான் ஆரணி கூவியது.

“எதுனாலும் சொல்லு ஆரு, கண்டிப்பா ஹெல்ப் பண்றேன். அப்படி எதுவும் செய்ய முடியலைனா ப்ரேயர் பண்ணுவேன்...” மிகவும் ஆழ்ந்த அக்கறையுடன் கேட்டாள் நிரல்யா.

“இன்னைக்கு அழுவினி பாப்பா அவார்டு மொத்தமா உங்களுக்குதான். அதனால நான் நாட் டுடே.....” சிரித்தபடி சொன்னாள் ஆரணி, சூழ்நிலை இலகுவாக தொடர அவள் விரும்புவது நிரல்யாவுக்கு புரிந்தது.

“வாயாடி” சினுங்கினாள் நிரல்யா.

“நீங்க படுத்திருப்பது என் மடி” இது ஆரணி.

“அதனால?”

“என் மடியில படுத்துட்டு என்னையே குறை சொல்றீங்க...”

வாயாடின்னா புகழ்றது.. வஞ்சபுகழ்ச்சி அணி.

வாயாடி

என் மனதை

களவாடி

ஓடோடி

போனாயேடி.” நிரல்யா சொல்ல விழி விரிய கேட்டிருந்த ஆரணி

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.