(Reading time: 39 - 77 minutes)

 

நிரு நீங்க வர்றதா வீட்டில சொல்லலை. அப்பதான் இயல்பா எங்க வீடு எப்படி இருக்கும்னு நீங்க தெரிஞ்சிக்க முடியும்....”

“ம்”

‘உங்க வீடு எப்படி இருந்தா எனக்கென்ன?’ என்ற மனதின் மறுகலை ‘ம்’ என்ற ஒற்றை ஒலியில் மறைத்தாள்.

இவர்கள் காரை, கேட்டிற்குள் நுழைந்ததும் நிறுத்திவிட்டு, வீட்டை நோக்கி நடந்தனர்.

“உங்க வீடு கனடாலன்னு அப்பா சொன்னாங்க?”

“ம், எட்மான்டன்லதான் மெயின் ஹவுஸ், லாஸ் ஏஞ்சலிஸிலும்  தங்குவோம், கோயம்புத்தூரிலும் இருப்போம், இங்க இப்பதான் ஃபஸ்ட்டைம்...”

“ஓ..”

வீட்டில் நுழைந்த போதே அந்த காட்சி கண்ணில் தெரிந்தது. அங்கேயே இவளை நிறுத்திக்கொண்டாள் ஆரணி.

“அம்லு ப்ளீஸ், ப்ளீஸ், சிட்டப்னு பெரிய மனசு பண்ணி மாத்திடேன்” என்றபடி அந்த பரந்து விரிந்திருந்த வரவேற்பறையின் ஒரு மூலையில் ஏறத்தாழ குதித்து கொண்டிருந்தான் ரக்க்ஷத். ஒரு ஷாட்ஸும் ஸ்லீவ்லெஸ் பனியனும் உடை.

உள்ளிருந்து வரவேற்பறைக்குள் நுழைந்த அம்லு என்றழைக்கபட்ட அவனின் அண்ணி அரண்யாவோ “அதெல்லாம் முடியாது ஏ.எம். கண்டிப்பா இன்னைக்கு இதுல எந்த மாற்றமும் கிடையாது, இந்த இடத்தை விட்டு அசையாம நிக்கனும்” என்றபடி அவன் முன் ஒரு கோடு கிழித்தாள் லிப்ஸ்டிக்கால்.

“ஏ.எம். ஆள் மயக்கியின் ஷார்ட் ஃபார்ம்” கமண்ட்ரி கொடுத்தது ஆரணி நிரல்யாவுக்கு.

“இல்ல அம்லு நெய்பணியாரமெல்லாம் சுட சுட சாப்பிட்டாதான் சூப்பரா இருக்கும்...” மூலையில் நின்றிருந்தவன் பரிதாபமாக காரணம் சொன்னான்.

“அதுக்காக.......... சமைக்கிறப்பவே எடுத்து சாப்பிடுறது கெட்ட பழக்கம்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்........அதுவும் கனுவையும் கூட்டணி சேர்த்துகிட்டு.... குழந்தைக்கு கெட்ட பழக்கம் சொல்லி குடுக்கோம்னு ஒரு உறுத்தல் இல்ல...........” அதட்டியபடி கோடிட்டு நிமிர்ந்தாள் அரண்யா.

“கனுங்கிறது பெரியண்ணா பையன் கருண்.” ஆரணி முனுமுனுத்தாள்.

“தப்புதான் அம்லு, இனிமே செய்யமாட்டேன்பா, ப்ளீஸ் ப்ளீஸ் பனிஷ்மெண்டை மாத்து அம்லு......கடந்த காலத்தில நான் உனக்காக செய்த தியாகத்தையெல்லாம் நினைச்சுபாரு அம்லு.”

“ஹான், அது என்னங்க அப்படி ஒரு தியாகம், ?”

ஒன்னு இல்ல நிறைய...., அச்சுவை முன்னாடி பிறக்கவிட்டுட்டு நான் பின்னாடி பிறந்தது முதல் தியாகம், இல்லனா அவனுக்கு நீ அக்காவா போயிருப்ப. அடுத்ததுதான் ரொம்ப முக்கியமானது. உன்னை என் ஃப்ரெண்டுனு ஏத்துகிட்டு என் ஸ்கூல் டேஸ் சந்தோஷத்தையெல்லாம் தொலைச்சபிறகும் அச்சுட்ட வேற உன்னை காமிச்சேன் பாரு, நினைச்சு பாரு தாயே...”

“அச்சு என் பெரியண்ணா அக்க்ஷத்.” நிரல்யாவிடம் சொன்னது ஆரணி.

“நினைச்சுட்டேன், உன்   பனிஷ்மெண்டை மாத்தியாச்சு. உனக்கு நோ நெய் பணியாரம் டு டே.” அமர்க்களமாய் அறிவித்தாள் அரண்யா.

“ஹே....ஹே என்னதிது அடாவடி,முதலுக்கே மோசமாகுது...”

“ஸ்கூல்ல நீ செய்த அட்டகாசத்தையெல்லாம் தாங்கின பிறகும் உனக்கு அண்ணியா இருக்க சம்மதிச்ச என்  பெருந்தியாகம் ஞாபகம் வந்துடுச்சு...”

“ச்சு, போ அம்லு, அதுக்கு நான் இப்படியே நின்னுகிடுறேன்.......ஹூம் இன்னும் எத்தனை நிமிஷம் நிக்கனும்னு சொல்லு...”

“இன்னும் 10 நிமிஷம்...,”

“ஹே இது கள்ளாட்டம்......ஏற்கனவே 3 நிமிஷம் 17 செகன்ட்ஸ் நின்னாச்சு..”

“தனியா நிக்கனும்னுதான் தண்டனை, நீ என்ட்ட பேசினல்ல அதான்.. யுவர் டைம் ஸ்டாட்ஸ் நவ் ஒன்லி.’

“அப்ப நான் நின்னுட்டே இருக்க போறேன்னு சொல்லு, எப்படியும் உன்னால என்ட்ட பத்து நிமிஷமெல்லாம் பேசாம இருக்க முடியாது அம்லு...”

“ஆமா ஏ.எம் என்ன செய்ய, இப்படி உன்னை கட்டி போடலன்னா, உன் பின்னால நடந்து நடந்து பேசனும், அதுக்கு இது பிரவாயில்ல...”

நிரல்யாவின் கை பிடித்தபடி உள்ளே நுழைந்தாள் ஆரணி. 

“அம்லு, நீ பணியாரம் தராம விழிச்சிருக்கப்பவே கனவு கனவா வருது.” குறும்பாய் சொன்னாலும் ரக்க்ஷத்தின் முகம் நிம்மதியோடு மலர்வதை நிரல்யாவால் கவனிக்க முடிந்தது.

 ‘இவள் உடல் நலத்தை குறித்தா அல்லது அவன் வீட்டிற்கு இவள் வந்ததைபற்றியா எதை பற்றி இந்த நிம்மதி? இவள் நிம்மதியை குழி தோண்டி புதைத்துவிட்டு, இவனுக்கு மட்டும் நிம்மதியாம்....இருக்கட்டும் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்துக்கொள்கிறேன்.’மனம் வைராக்கியம் பாராட்டியது.

“ஓடிச்சென்று அவனை கிள்ளினாள் ஆரணி, கனவில்லடா ரச்சு, நிஜம்”

“ஹே, எம்.எச் நிஜமாவே நீதானா, எங்க பார்த்தாலும் உன் உருவமா தெரியுதா, அதான் இதையும் கனவுன்னு நினைச்சுட்டேன்..... வெல்கம் ஹோம் பேபி....”

‘எம்.எச்-ஆ அது என்ன?’ ஒரு மனம் ஆராய, மறு மனமோ ‘பேபியாம்’ என எடுத்து கொடுத்தது.

சுள்ளென்று ஏறியது எரிச்சல் இவளுள். கடு கடு என இவள் முகம் மாறும் போதே “வா வா நிரு, வாட் எ சர்ப்ரைஸ்! , உடம்பு இப்ப பிரவாயில்லையா? லோ பி.பி, ஸ்லீப்லெஸ் டிராவல், ஃபங்க்ஷன் டென்ஷன்னு டாக்டர் ஒரு லிஸ்ட் சொன்னார்.  சீக்கிரமா ரச்சுட்ட வந்திரு, பி.பி  பிக்கப் ஆயிரும்.” என வரவேற்றது அண்ணி அரண்யா. வந்து இவளின் இரு கரத்தையும் பற்றி கொண்டாள்.

பிங்க் நிற பெடல் புஷ்ஷரும் அதே நிற டாப்ஸும் அணிந்து ஒல்லியாய், சற்றே குட்டையாய் நின்றிருந்த அவளை பார்க்க ஒரு குழந்தைக்கு தாய் என நம்பமுடியவில்லை நிரல்யாவுக்கு.

புன் சிரிப்புடன் “ஐ’ம் ஃபைன், உங்க பையன்....?.” என நிரல்யா தொடங்க

“அந்த ஜுனியர் ஏ.எம் இப்ப வந்துடுவானே.......” சொல்லி முடிக்கவில்லை, ரக்க்ஷத்தின் அண்ணண் கையில் ஒரு குழந்தையுடன் வந்தான். “வாங்க நிரு, இப்ப உடம்பு பிரவாயில்லையா?” என்றபடி.

“ம்” என்றபடி ஒரு புன்னகை நிரல்யாவிடமிருந்து பதிலாக வந்தது.

இவர்தான் வீட்டின் சீனியர் ஏ.எம், மூலையில் நிக்கிறாரே அவர்தான் ஏ.எம், இவர் ஜுனியர் ஏ.எம் என்றபடி அந்த ஆறு மாத குழந்தையை எடுத்து நிரல்யாவிடம் நீட்டினாள் அரண்யா.

சிரிப்பு பொத்து கொண்டு வந்தது நிரல்யாவிற்கு. இந்த குழந்தை ரக்க்ஷத்தை பார்த்து பழக்கம் பழகுமாம். அதற்காக அவனுக்கு தண்டனையாம். குழந்தையை கையில் வாங்கிக்கொண்டாள். எங்காவது உட்கார வேண்டும். நின்றபடி குழந்தையை வைத்து சமாளிக்க முடியாது என தன்னைபற்றி ஒரு அவநம்பிக்கை. இவ்வளவு சிறு குழந்தையை இதற்கு முன்னால் தூக்கியதே இல்லையே!

ஆரணி முன் செல்ல இவள் பின் தொடர ரக்க்ஷத் நின்றிருந்த மூலையை கடக்கும் போது “எம்.எச்ஐ பத்தின விளக்கம் நம்ம ஃப்ர்ஸ்ட் நைட்டில் சொல்றேன்டா, இப்போதைக்கு அது மது ஹனியோட ஷார்ட் ஃபாம்னு மட்டும் ஞாபகம் வச்சுகோ என்று கிசு கிசுத்தான்.” குப்பென வியர்த்தாள் பெண். ‘இவன் எங்கெல்லாமோ போறானே?’

அவனிற்கு அருகிலிருந்த சாப்பட்டு அறையின் நாற்காலியை நிரல்யாவிற்கு காண்பித்த ஆரணி, அடுத்த நாற்காலியில் சென்று அமர்ந்துகொண்டாள். குழந்தையுடன் இவள் அமர ஆரணியின் கவனம் நெய் பணியாரத்திடம் சரணடைந்திருந்தது. நிரல்யா குழந்தையை கண்ணோக்கினாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.