(Reading time: 39 - 77 minutes)

 

குழந்தையோ புதிய நபரை கண்டு மிரள்வது போல் மிரளாமல் இவளது கன்னத்தை தன் கையால் தடவிப்பார்த்தான். பின் தடவிய இடத்தை எச்சில் படுத்தினான். குழந்தையின் ஸ்பரிசம் நிரல்யாவை எங்கோ கொண்டு சென்றது. தாய்மை எத்தனை அழகான விஷயம்? ஞ்ங்கா..ன்னாஆ” அவனறிந்த பாஷையில் அவன் பேச இவள் மனதில் மாருதமாக, மருத சாரலாக ஒரு உணர்வு அலை.

இவள் மூக்கை மெல்ல தடவிய பிள்ளை அவள் காதணியை சட்டென இழுத்துப்பார்த்தான்.

“ஷ்..ஆஅ” வலியில் நிரல்யா இயல்பாக முகம் சுழிக்க, அவன் மூக்கில் தொடங்கிய சுழிப்பு உதடு கன்னங்கள் நெற்றி என பரவி அந்த குட்டி கருண் “ம்மாஆ......” என அழ ஆரம்பித்தான்.

“அச்சோ சித்திக்கு வலிக்குதுன்னு நீயும் அழுறியாமா?” அரண்யா கேட்க்க,

அதற்குள் நிரல்யாவோ தன் கன்னங்கள் குழிய பல்வரிசை தெரிய சிரித்தபடி தலையை இடமும் வலமுமாக ஆட்டினாள்.

“வலிக்கலையே செல்லம் எனக்கு.....”

இப்பொழுது அவள் கன்ன குழியில் கை வைத்த குழந்தை, மெல்ல அவள் உதடுகளை தடவியவன், பொக்கை வாய் பொங்க கண்ணில் கண்ணீரோடு சிரித்தான். உள்ளே உருகியது நிரல்யாவிற்கு.

“இந்த குழந்தை கூட அடுத்தவர் உணர்வை யோசித்து பார்க்குதே! என்னால முடியலையே!’

மெல்ல நிமிர்ந்து ரக்க்ஷத்தை பார்த்தாள். அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது காதல்.

இதற்குள் அவள் முன்பு வந்தமர்ந்தது உணவு தட்டு. கருண் தன் தாயிடம் தாவிச்சென்றான். உணவு பரிமாறபட, தர்மசங்கடமாய் உணர்ந்தாள் இவள். அவன் கண்பார்வையில் அமர்ந்துகொண்டு சாப்பிட விரும்புகிற அவனைவிட்டு எப்படி சாப்பிட? ஆனால் இவள் அவனை அழைத்தால் அது வேறு விதமாக தோன்றுமே!

ருசியறியாது விழுங்கினாள் உணவை.

ற்று நேரம் கழித்து அரண்யா அவனை சாப்பிட அழைத்தபின்புதான் இவளுக்கு இயல்பு நிலை சாத்தியபட்டது. அவனோ மறுத்தான். ஆரணிதான் வலு கட்டாயமாக இழுத்துவந்து நிரல்யாவுக்கும் தனக்கும் இடையில் அமர்த்தினாள்.

 “ரொம்ப பண்ணாம சாப்பிடு....அப்படி ஒன்னும் நிரு சாப்பிடாம ஓடிட மாட்டாங்க” என்றவள் என்னதிது.......... அலறினாள் ரக்க்ஷத்தின் கையை காண்பித்தபடி.

“ச்சு, ஒன்னுமில்ல ஆரு, இதுக்குபோய் தேவைக்கு மேல சீன் போடாத...” அவன் ஆறுதலாய் அதட்ட

நிரல்யாவின் கண்கள் இயல்பாய் அவன் கைகளை பார்த்தது. சின்ன சின்ன பொட்டுகளாய் தடுத்திருந்தது சருமம் சில இடங்களில்.

“சின்ன ஸ்கின் அலர்ஜி, அப்பப்ப வரும் போயிரும், ஆரு” என்னமோ நிரல்யாவுக்குதான் பதில் என்பதுபோல் இவள் முகத்தை பார்த்தபடிதான் சொன்னான்.

‘உன் ப்ரச்சனைக்கு ஏன் எனக்கு விளக்கம் சொல்றன்னு’ ஏனோ இப்ப நிரல்யாவால் நினைக்க முடியவில்லை. காரணம் சற்றுமுன் கருணிடம் கற்ற பாடம்.

ஆரணி இதற்குள் அழ ஆரம்பித்திருந்தாள்.

‘இது ஒன்னுமே இல்ல ஆணி, இதுக்கு போய் அழுதுகிட்டு......... சும்மாவே உன்ன பார்க்க ஒரு தைரியம் வேணும், இதுல இப்படி மூக்க வேற கோணிகிட்டு.....பயமா இருக்குல்ல.....” அழுதவளை ரக்க்ஷத் ஆறுதல்படுத்திய விதத்தில் இவள் அசந்துபோக,

“போடா ரச்சு” என்றபடி சாப்பிட்டு கொண்டிருந்த கையால் ஒரு அடி வைத்தாள் ஆறுதல் படுத்தப்பட்டவள்.

“சாப்பிடுற கையால அடிக்காதன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்...” அதட்டியது அக்க்ஷத்.

“விடண்ணா சும்மதானே செய்றா...” வக்காலத்து வாங்கியது அடி வாங்கிய அண்ணன்தான்.

அதான இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விட்டு கொடுக்க மாட்டீங்களே....இதே பழக்கம் போற வீட்டிலும் வரும்தானே...........”

“அதுக்கென்ன அத்தனை அடியையும் வாங்கிட்டு, அடிக்கிற கைதான் அணைக்கும்னு நம்பிக்கையோடு இருக்கிற நம்பிக்கை நட்சதிரத்தைதான் நம்ம ஆருக்கு பார்க்கனும்..” ரக்க்ஷத் சொல்ல “போடா இவனே” என்றபடி எழுந்து போனாள் ஆரணி.

“தட்டில வச்சதை சாப்பிட்டு முடிக்க மாட்டியா? இப்படிதான் சின்னபிள்ளை மாதிரி மீதி வைப்பியா?’ அக்க்ஷத்தின் திட்டை “போண்ணா” என்ற ஒரு வார்த்தையில் அலட்சியம் செய்தவள் வாஷ் பேசினில் கை கழுவினாள்.

“நோட் திஸ் பாய்ண்ட் நிரு, உன்னோட அத்தனை அடியையும் வாங்க சார் தயாரா இருக்காராம்......” அரண்யா சொல்லி சிரித்தாள்.

“ம், அடிக்கிற கைதான் அணைக்கும்ங்கிற கொள்கையின் அடிப்படையில் இந்த டீல் எனக்கு டபுள் ஓ.கே” ரக்க்ஷத்தின் பதிலில் நிரல்யா எழுந்துவிட்டாள். “உங்கட்ட கொஞ்சம் பேசனும். வெளியே வர்றீங்களா?”

ரு நொடி அமைதிக்குபின் ஒருவர் பின் ஒருவராக கைகழுவிக் கொள்ள, தோட்டத்தை பார்த்து நடந்தான் ரக்க்ஷத். அவன் பின் நிரல்யா.

முல்லை கொடி பந்தலுக்குள் நால்வர் அமர்ந்து அளவளாவும்படி அமைக்கப்பட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றில் இவள் அமர எதிரில் அவன்.

“நான் கல்யாணமே செய்றதா இல்ல ரக்க்ஷத்.” வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்பது போல் எடுத்தவுடன் வெட்டினாள்.

“ஏன் பொய் சொல்ற? நீ விரும்றவனை தவிர யாரையும் கல்யாணம் செய்றதா இல்லைனு சொல்லு” அவன் இவள் வெட்டை இடைமறித்தான்.

உண்மைதானே! அவன் இப்பொழுது வந்தாலும் இந்த நொடி அவனை மணக்க இவள் தயார் தானே! அவன் வரமாட்டான் என்ற நம்பிக்கை கல்யாணமே கிடையாது என இவள் வாயில் வருகின்றது. இவள் மனம் இப்படி யோசித்து கொண்டிருக்க.

உங்கப்பா உன்னை கண்காணிக்காம இருந்திருக்க மாட்டாங்க நிரல், அவங்களுக்கே தெரியாத ஒரு காதல் உனக்கு இருக்குன்னா ஒன்னு அவன் உயிரோட இல்லையா இருக்கும்......” குழந்தைக்கு புரிய வைக்கும் தொனியில் அவன் சொல்லிக்கொண்டு போக

“ரக்க்ஷத்................”.அலறாய் அதட்டினாள்.

“அல்லது அவன் எங்கே இருக்கான்னே உனக்கு தெரியாதா இருக்கும்.” இவள் அலறலை பார்வையால் மட்டும் விழி உயர்த்தி சட்டை செய்தவன், சொல்ல வந்ததை சொல்லிதான் நிறுத்தினான்.

“இப்ப எதுக்கு இந்த தேவையில்லாத ஆராய்ச்சி, எது எப்படியோ நீங்க தேவையில்லாம கற்பனையை வளர்க்காம கல்யாணத்தை நிறுத்திட்டு விலகிடுங்க...” உணர்ச்சியை அடக்கிக்கொண்டு இவள் பேச,இவள் எதிர்பாராவண்ணம் குழைந்தது அவன் குரல்.

 “எம்.எச்  பேபி..............உண்ர்ச்சி வசப்படுறப்ப ஒரு பிங்க் ஷேட் வந்து போச்சு பார் உன் முகத்தில்.....செல்லம்ஸ்  கல்யாணத்துக்கப்புறம் இப்படின்னா சட்டுனு  கட்டி....” அவன் சொல்லிகொண்டிருக்கும் போதே வேகமாக எழுந்துவிட்டாள் நிரல்யா.

“அசிங்கமா பேசுறதை மொதல்ல நிறுத்துங்க...”

“அசிங்கமாவா?   இப்படி முகம் சிவக்க கோபபட்டன்னா கட்டில்ல உட்காரவச்சு தண்ணி கொடுப்பேன்னு சொல்ல வந்தேன். நீ என்ன நினைச்சே?.......அப்பாவியாய் கேட்டவன், எனக்கு மனசு சுத்தமாத்தான் இருக்குது என்றான் மென்குரலில் மௌன சிரிப்புடன்.

‘அப்படின்னா அவளுக்குதான் சுத்தமில்லையாமா???!!’

“சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன், மூனு மாதம் கழித்து கல்யாணம்னு ஊர் கூட்டி உலகம் முன்னாடி அவமானபடனும்னா வாங்க. யாருக்காகவும் ஏன் என் அப்பாவுக்காக்கூட நான் இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்கிறதா இல்லை.” எரிச்சலும், கோபமும், குமுறலுமாக வெடித்தவள்,

சட்டென திரும்பி வேகமாக நடக்க, முன் சென்ற வேகத்தில் பின்னிழுக்கபட்டு அவன் மேல் சரிந்தாள். காரணம் தூக்கி போட்டிருந்த முந்தானை, முல்லை கொடியை தாங்கியிருந்த கம்பிதூண் ஒன்றின் கொக்கியில் மாட்டி இழுத்திருந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.