(Reading time: 39 - 77 minutes)

 

ளவு செய்ய

காத்திருப்பவன்

கண்டு கொண்டால்

திருப்பி என்னை

உன்னிடத்தில்

அனுப்ப மாட்டான்

அறியாயோ நீ?” குறும்பாய் சொல்லியபடி எழுந்தாள். புன்னகையுடன் நிரல்யாவும் எழுந்து அமர்ந்தாள்.

“சூப்பர் நிரு,  இப்ப சாப்பிட்டு படுங்க, கவிதை அரங்கம் இனி நிதம் தொடரும்.....”

“இல்ல உன்ட்ட கொஞ்சம் பேசணும் ஆரு.....”

“ம், சொல்லுங்க”

“அது வந்து.....உன் அண்ணா ஏன்பா இப்படி திடுதிப்புனு.......என்ட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம் தானே...”

“உங்களுக்கு சம்மதம்னு உங்க அப்பா சொன்னாங்களாம்...........அண்ணா உங்களை பெண் கேட்டு ஜஃஸ்ட் ரெண்டு நாள்தான் ஆகுது. உங்கப்பாதான் சம்மதம் உடனே நிச்சயதார்த்தம்னு சொல்லிட்டாங்க...........”

“பெண் கேட்டு............?”

“பொண்ணுன்னு இருந்தால் கேட்க்கதானே செய்வாங்க” என்றவள் இவள் கண்களை பார்த்தபடி

 “அண்ணா உங்களை ரொம்ப சின்சியரா லவ் பண்றான்ங்கிறது என் கணிப்பு. அம்லு அண்ணிட்ட கேட்டா தெரியும். அண்ணியும் அவனும் திக் ஃப்ரண்ட்ஸ்.” என்றாள்

“உனக்கு அண்ணி ஃப்ரண்ட் இல்லையா?”

“ம்கூம். எனக்கு அவங்க அம்மா! எனிவே பேச்சை மாத்துறது புரியுது. சாப்பிடுங்க தூங்கலாம்.”

றுநாள்.

காலை நிரல்யா விழித்தபோது ஆரணி படுக்கையில் அந்தபுறம் தூங்கிக்கொண்டிருந்தாள்.

‘தினமும் யாராவது இப்படி கூடஇருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்? தெய்வமே! செய்து தருவாயா?’

பல் துலக்கி இவள் ஜெபித்து முடித்து வரும்போது ஆரணி அறை ஓரமாக அமர்ந்து ஜெபித்துக்கொண்டிருந்தாள். இவள் வந்ததே தெரியாமல் தெய்வத்திடம் சிரிப்புடன் மனதை கொட்டிக்கொண்டிருந்தாள்..

“யேசப்பா சும்மா சொல்ல கூடாது, இந்த நிரு ஒரு சூப்பர் பீஸ்..... எப்பவும் சிரிக்க வைக்கிற சின்ணன்ணாவுக்கு, சிரிச்சு பழக்கமே இல்லாத இந்த நிரு ஒரு சூப்பர் காம்போ. சிரிக்க வச்சு அவன் சந்தோஷ படுவான், சிரிச்சு சிரிச்சு நிரு ஜாலியா இருப்பாங்க...

 லொட லொடன்னு பொரியிற அவனுக்கு, இரண்டு வரி பேச இருபது நிமிஷம் யோசிக்கிற இந்த நிருவை விட யாரு குட் லிசனரா இருக்க முடியும்? ம்.., எப்பவும் இன்ட்ராவெர்ட்ஸ்க்கு எஃஸ்ட்ராவெர்ட்ஸ் மேல ஒரு அட்ராக்க்ஷனாமே?....அப்படியா?.... ஆமா அது அப்படித்தான்... எனக்கே தெரியுமே!... அப்படின்னா நிருக்கு ரச்சுட்ட ஒரு.. ஒரு இது.. அதான்பா ஒரு இது... அதிகமா இருக்கும்ல.. பாவம் என் அண்ணா ஏற்கனவே நிருட்ட  ரொம்பவும் கவுந்துட்டான். அதனால இதுல அண்ணி கவுந்தாதான் ஸ்டேட்டஸ் கோ மெயின்டன் ஆகும்.

அப்புறம் அந்த கவிதை தமிழ். கலக்கல் காம்பினேஷன்பா இது. ரச்சுவோட கிச்சடி தமிழுக்கு இந்த யாப்பிலக்கணம் தான் சரி...நீங்க என்னப்பா நினைக்கிறீங்க...

எல்லாத்துக்கும் மேல, அருவி மாதிரி கொட்டுற ஒரு அன்பை அவனுக்குள்ள ஊத்தி வச்சிருக்கீங்க, நிரு பாலைவனத்தில நிக்குற படகு மாதிரி காஞ்சு ஓஞ்சு நிக்றாங்க. படகை தூக்கி அருவியோட ஆத்து தண்ணியில விட்டீங்கன்னா நாங்களும் கூடசேர்ந்து ஜாலியா போட்டிங் போவோம்தானே! அப்புறம் நிருட்ட வெளிகாட்டாத அன்பு நிறைய இருக்குங்கிறது என் அன்டர்ஸ்டன்டிங்க், அதை அண்ணாட்ட செலவு செய்வாங்கதானே.....ரக்சு எப்பவும் அடுத்தவங்கட்ட அன்பா இருந்தாலும், அம்மா அப்பாக்கு பிறகு அவனுக்குள்ள......ஏதோ ஒரு...ஒரு...ஆன்..,தேவை  இருக்கிறாப்பல ஏனோ எனக்கு தோணுது... 

ரொம்பவும் முக்கியமான விஷயம்,  நிருக்கு..... அது....வந்து...... அவங்களுக்கு எ...எதுவும் ப்ரச்சனை இல்லனு தோணுது, அதனால தான் இவ்வளவும் சொன்னேன். அப்படி எதுவும் இல்லதானேப்பா........அப்படியே பெரிசா எதுவும் இருந்தால் கூட ரச்சு கிடைச்சா அவங்க வாழ்க்க சொர்க்கமாதான் மாறிடும், ஆனால் நிருவுக்கு அத புரிய வைக்க யாராலயும் முடியாதே..... வெயிட்ட மினிட்....... உங்களால முடியும் தானே. என் ஆசைய நான் சொல்லிட்டேன், உங்களோட ஆசையும் இதுவா இருந்தால் இந்த நிரு அண்ணிட்ட ரச்சு பத்தி அவங்களுக்கு புரியிறமாதிரி ரெகமென்ட் பண்ணுங்க......இல்லனா ரச்சு மனச மாத்திருங்க.... ஹான்!...அப்புறம்... நிருவை எனக்கு ரொம்ப பிடிக்குது, அலட்டல் இல்லாம..அவ்வளவு சிம்பிளா.....இந்த ஃப்ரண்ட்ஷிப் தொடர ஹெல்ப் பண்ணனும் சார் நீங்க.....அது..”

நிரல்யா நகர்ந்து போய்விட்டாள். மனதிற்குள் பாலாறுடன் பத்து டன் பச்சமிளகாயை சேர்த்து அரைத்த உணர்வு.

நீராடி, ஒரு முழு நீள ஸ்கர்ட்டும்,டாப்ஸும் அணிந்து நிரல்யா வெளி வந்தபோது, குளித்து உடை மாற்றி தலையிலிருந்து நீர் சொட்ட சொட்ட தொலை பேசியுடன் துள்ளிக் கொண்டிருந்தாள் ஆரணி.

“நீதான், அர்த்த ராத்திரியில், டிரஸ் கொண்டு வந்து குடுத்தியே, குளிச்சு கிளம்பியாச்சு...”

“....................”

“அண்ணி சமையல்னா ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு வர்றேன், இல்லனா நேர லன்ச்சுக்கே வர்றேன்.”

“..............................”

“ஹையோ சூப்பர், அப்பனா இப்பவே வர்றேன்,”

கேட்டிருந்த நிரல்யாவின் முகம் சுருங்கியது. அதை கவனித்த ஆரணி

“நீ எதுக்கும் எனக்கு எடுத்து வை நான் மதியமே பார்த்துகிறேன்”

“.......................”

“போடா, பை, பை”

“..................”

“வந்துருவேண்டா ரச்சு, நீ ஃபோனை வை முதல்ல. பை”

பேசி முடித்து இவளிடம் புன்னகையுடன் திரும்பினாள் ஆரணி,

“கிளம்புறியா ஆரு? இவ்வளவு நேரம் இருந்ததுக்கு தேங்க்ஸ்.” செயற்கை புன்னகையுடன் சொன்னாள் நிரல்யா. மீண்டும் தனிமைக்குள் செல்ல தயங்கியது மனது.

“நிரு நீங்க என் அண்ணாட்ட எப்படியும் பேசனும் தானே.......குறஞ்சபச்சம் சண்டை போடவாவது.... இன்னைக்கு அவன் வீட்டிலதான் இருக்கான்.....வாங்களேன்....”

“.....................”   “சரி வர்றேன்.”

“இப்பவே கிளம்புவமா நிரு.............வீட்டில் நெய்பணியாரம்....அண்ணி கை பக்குவம் கலக்கலா இருக்கும்”

உச்சி வெயிலில் ஐஸ்க்ரீமை பார்த்த குழந்தையாய் குதித்த ஆரணியை பார்க்க சிரிப்பு வந்தது நிரல்யாவுக்கு.

“சரி இப்பவே கிளம்பலாம்” என கிளம்பியது நிரல்யாதான். உள் நோக்கம் நிச்சயமாக ரக்க்ஷத்திடம் நாக்கை பிடுங்குவதுபோல் நாலு கேள்வி கேட்ப்பதுதான்.

“ஹை ஜாலி நிரு.......”

“ஜஸ்ட் ஃப்யூ மினிட்ஸ்.........” உள்ளே சென்று புடவை மாற்றி வந்தாள் நிரல்யா. வெற்று வெண்ணிற புடவையில் அதே வர்ண சமிக்கி வேலைப்பாடு முந்தானையில் மட்டும் .முடியை கொண்டையிட்டு காதில் மட்டுமாக அணிகலன் ஆடியது. ரொம்பவும் எளிமையாய் அணிய வேண்டும் என்பதுதான் உள்நோக்கம். இருந்ததில் இதுதான் இவள் எதிர்பார்ப்பிற்கு அருகில் வந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.