(Reading time: 39 - 77 minutes)

 

ப்ப இப்பவே இடத்தை காலி பண்ணுங்க...” அழுகையுடன் வெடித்தாள்.

“கூல் டவ்ண் பட்டு.....நமக்குள்ள ஒரு டீல் வச்சுகலாம்.” குறும்பில்லாத முகபாவத்துடன் அவன் பேச நம்பிக்கை வந்தது அவளுள்.

“கோப படாம முழுசா கேட்கனும்.....” ‘தூங்க போறப்ப சாக்லேட் சாப்பிட கூடாது’ என்ற தகப்பனின் தொனி இருந்தது அதில்.

தலையாட்டினாள். நீ கேட்டுகிட்ட படி நம்ம கல்யாணத்தை பத்தி நான் உன்ட்ட கேட்க்க மாட்டேன், ப்ரெண்டாதான் பழகுவேன். ஆனால் நீயா மனம்மாறி நம்ம கல்யாணத்துக்கு சம்மதிக்கனும்னு இன்னும் மூனு மாசம் எதிர் பார்ப்பேன்...நீ...”

அவசர குடுக்கையாய் இடையிட்டாள் “அது வேஸ்ட்”

அமைதியாய் முறைத்தான். முழுசா கேட்ப்பேன்னு தலை ஆட்டியது ஜஸ்ட் அப்பதான் நிரலுக்கு  ஞாபகம் வந்தது.  அவள் முகபாவத்தில் ‘சாரி’ மொழியின்றி எழுதப்பட்டது.

“ஒரு மூனு மாசமாவது என் காதலுக்காக நானும் போராடிக்கிறேனே!, அதுவரையும் நம்ம திருமணத்துக்கு உனக்கிருக்கிற மறுப்பை நீ யார்ட்டயும் காண்பிச்சுக்க கூடாது. அப்படியும் நீ இப்ப இருக்கிற முடிவிலேயே இருந்தன்னா உன் ஆளை எங்க இருந்தாலும் நானே தேடி தள்ளி கொண்டுவாரேன்.”

“அது முடியாது ரக்க்ஷத், அவனை பத்தி எதுவுமே யார்ட்டயுமே சொல்லமாட்டேன், “என் உயிர் போனாலும் கூட” அழுத்தமாய் முடித்தாள்.

ஆச்சர்யமாய் பார்த்தான். “அப்புறம்?”

“அண்டார்டிகா கண்டம்”  கண் சிமிட்டி சிரித்தாள். இதே இது அவனா இருந்தால் X + Y + Z = A , இதுல எதுவும்,  எதோட வேல்யூவும் எனக்கு தெரியாது. ஆனால் ஆஅன்ஸர் வேணும்னு சொன்னால் சொல்லி முடிக்கிறதுக்கு முன்னால அந்த நாலு எழுத்த மட்டுமில்ல அதுக்கு நடுவுல இருக்கிறதையும் சேர்த்து கண்டு பிடிச்சு தந்துருவான்....”

“ஐ லைக் திஸ்” சுவரஸ்யமாய் பார்த்திருந்தவன் தொடர்ந்தான். தென் வாட் யூ வான்ட்?”

“நீங்க நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் செய்துக்கனும்” மடக்கிவிட்ட தொனியுடன் சொன்னாள்.

“அப்படிங்கிற,சரி, என் மாமா பொண்ணு ஒன்னு நீதான் மாப்பிள்ளனு ரொம்ப நாளா ஒத்த கால்ல நிக்றா, அவளுக்கு வாழ்க்கை கொடுத்துற வேண்டியதுதான்.” இதென்ன ரொம்ப சாதாரணம் என்பதுபோல் பேசினான்.

“முதல்ல போய் அவங்கள பாருங்க. எங்க இருக்காங்க அவங்க? பாவம் எங்கேஜ்மென்ட் ந்யூஸ் கேட்டு எவ்வளவு கஷ்டத்தில இருக்காங்களோ?” இவள் ஆர்வகோளாறாகி போனாள்.

“முதல்ல நீ டீலுக்கு ஓ.கே பண்ணு. அப்புறம் மூனு மாசம் முடிஞ்ச பிறகு அவள பார்க்க வேண்டிய தேவை வருதான்னு பார்க்கலாம். அதுவரைக்கும் அவள பத்தி நீ பேசாதே!” ‘அடங்க மாட்டியா நீ’ என்பது போன்ற பாவனை பேச்சிலிருந்தது.

சரி, சரி டீலில் இன்னொரு கண்டிஷனையும் சேர்த்துகோங்க, கடைசி வரை ரக்க்ஷத் நிரல்யாவுக்கு ஃப்ரெண்டா...”

ப்ரெண்டாவும் இருக்கனும்” இடை வெட்டினான் அவன்.

புரிய ஒரு நொடி அதிகமாக தேவைப்பட்டது அவளுக்கு. மாலையிட்டு மணந்து கொண்டாலும் நட்ப்பும் நமக்கு நடுவிலிருக்கும் என்கிறானாம். விதையிடாத தரிசு நிலத்துக்கு தண்ணீர் பாய்க்கிறான். தங்கம் விளையும் என்று எதிபார்க்கிறான்.

 “டீல் ஓ.கே ரக்க்ஷத்”

“எனக்கு டபுள் ஓ.கே சின்னு.”

இவர்கள் செய்த இந்த உடன் படிக்கை இவர்களது வாழ்க்கையை மட்டுமல்ல, இன்னும் சிலரது வாழ்க்கையையும் சேர்த்து பந்தாடப்போவதையோ, ஒரு ஜீவனை ‘மரிக்கும் வரை சிறை’ என்ற தண்டனைக்குள் தள்ள போவதையோ இவர்கள் இருவர் மட்டுமல்ல, இவர்களோடு களம்கண்டிருந்த கடவுளைத்தவிர யாரும் அறிந்திருக்கவில்லை.

ஆட்டநாயகன் ஆல்மைட்டி அவரல்லவா?

தொடரும்

Episode # 03

Episode # 05

{kunena_discuss:752}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.