(Reading time: 39 - 77 minutes)

 

ஹேய் லயாமா,” என்றபடி அவளை தூக்கி நிறுத்திய ரக்க்ஷத்தின் கன்னத்தை பதம் பார்த்திருக்கும் அவளது கை, அவன் அவள் ஓங்கிய கையை உணர்ந்து நொடியில் பிடிக்காதிருந்திருந்தால்.

அதன் பின்புதான் புடவையை இழுத்தது அவனில்லை என புரிய அதிர்ச்சியும் அவமானமுமாக பார்த்தாள். “சாரி”

“அடிச்சிட்டோம்னு வருத்தபடுவியேன்னுதான் தடுத்தேன் குட்டிமா, மத்தபடி நீ என்னை தனியா இருக்கிறப்ப தாராளமா அடிக்கலாம் செல்லம்ஸ்....நம்ம டீல் ஞாபகம் இருக்குதானே?..... அடிக்கிற கைதான்............. “

அதன் பின் அவன் சத்தம் அவள் காதில் விழவில்லை. அத்தனை தூரம் தள்ளி வந்திருந்தாள் அவள்.

‘சொன்னால் புரிந்துகொள்ளாதவன் பட்டுதான் புரிஞ்சிகிடனும்’ மனம் கொதித்தது. அன்றே கிளம்பி கோயம்புத்தூர் வந்துவிட்டாள்.

று நாள் அலுவல அறையில் இவள் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தபோது அனுமதியின்றி யாரோ உள்ளே வர எரிச்சலுடன் நிமிர்ந்தால் எதிரில் நின்றது ரக்க்ஷத்.

“என்னதிது? சொன்னால் புரியாதா? கெட் அவுட் ஆஃப் மை ப்ரிமிஸிஸ்” இதுவரை அவளே அறிந்திராத அளவு எரிச்சலுடன் எரிந்து விழுந்தாள்.

“ஈகிள் டவர்ஸ்-ல இருந்து வர்றேன் ஜெ.சி.டி ப்ராஜக்ட்டை நான்தான் செய்யப்போறேன்.” அறிமுகமில்லாத அலுவலக அதிகாரியின் தொனியில் பதில் வந்தது அவனிடமிருந்து.

ஈகிள் டவர்ஸ்ஸுடன்தான்  இந்த ஜெ.சி.டி வளாக கட்டிடங்கள் நிர்மாணிப்பது குறித்து அப்பா உடன்படிக்கை செய்திருக்கிறார் என இவளுக்கு தெரியும்.

“உங்க பாஸை பேச சொல்லுங்க......” வேலையில் கவனம் போல் மடிக்கணிணிக்குள் மண்டையை நுழைத்துகொண்டு இவள் சொல்ல

நிமிர்வாய் பதில் வந்தது எதிரில் நின்றுகொண்டிருந்தவனிடமிருந்து. “நான்தான் ஈகிள் டவர்ஸ் சி.இ.ஓ, எதுனாலும் நீங்க என்ட்டதான் பேசனும்”

ஈகிள் டவர்ஸ்ஸுடன் உடன்படிக்கை செய்திருப்பது அவளது தந்தை. இப்பொழுது மாற்றவேண்டுமென்றால் நிச்சயம் அவர் ஒத்துகொள்ளமாட்டார். இந்த தொல்லையை இவள் இப்போதைக்கு அனுபவித்துதான் ஆகவேண்டும்.

“டேக் யுவர் ஸீட் மிஸ்ட்டர்...........” உறவு வெறும் அலுவலக ரீதியானது என காண்பிக்கும் பொருட்டு அப்படி தொடங்கினாள்.

“மிஸ்ட்டர். ஜாஷ்வா ரக்க்ஷத். நைஸ் மீட்டிங் யூ மேம்.” அவனும் அதே தொனியில் பதில் சொல்ல முகத்திலிருந்த அத்தனை ரத்தமும் வடிந்துவிட்டது கேட்டிருந்தவளுக்கு.

‘இவனுக்கும் பெயர் ஜாஷ்வாவா?’ மனது ஆயிரம் அணுகுண்டால் அடிபட்டதுபோல் அதிர, ‘இல்லை இவனுக்குதான் பெயர் ஜாஷ்வா’ மூளை இடித்தது. அவன் பெயர் என்னவென்றே இவளுக்கு தெரியாதே! உண்மை உறைக்க ஏனோ  ஏ.சி அறையிலும் வேர்த்தது. மீள முடியாத புதைகுழிக்குள் மாட்டிகொண்டது போல் உணர்ந்தாள். ஒருதலை காதல் எனும் புதைகுழி.

அவ்வளவு பயங்கரமாவா இருக்குது என் பேர்...?இவ்வளவு வெளிரிட்ட...? என விளையாட்டாய் ஆரம்பித்தவன் அவள் வியர்ப்பதை பார்த்ததும் நாற்காலியைவிட்டு வேகமாக எழுந்து வந்தான். “லயாமா.....என்னடா?.....உடம்பு முடியலையாமா? சாரிடாமா இந்த நேரத்தில் நான் வேற டிஸ்டர்ப் பண்றனோ?” கேட்டுகொண்டே அவள் புறமாக கையை நீட்டியவன் சட்டென தன் கையை பின்னிழுத்துக்கொண்டான்.

‘தொட்டால் பின்னிவிடமாட்டாளா?’

“வீட்டுக்கு கிளம்பு லயா, உடம்பு சரியான பிறகு....”

“என் உடம்புக்கு ஒன்னும் இல்ல” அவன் பாதி பேசிக்கொண்டிருந்த போதே எரிந்து விழுந்தாள்.

ஏனோ மௌனமாக சலனமற்று அவளை பார்த்தவன் “ஜெ.சி.டி ப்ராஜக்ட் நாமதான் சேர்ந்து பண்ணியாகனும்” என்றுவிட்டு திரும்பி நடந்தான்.

“ஐ வில் ஷோ யூ த சைட் நவ்” என்றபடி அவனை பின்தொடார்ந்தாள் பெண். வேலையை தள்ளிபோடுவதில் என்ன லாபம் என்பது அவளுக்கு.

ன்று முழுவதும் அவனுடன் வேலை செய்யும்படியாயிற்று. அடுத்தவர்களிடம் அவன் பழகியவிதம் அவளுக்கு பரமதிருப்தி..பிறர் முன் இவளிடமுமே உடன் வேலையாள் என்பதுபோல்தான் பேசி பழகினானே தவிர ஒரு கொஞ்சல், கெஞ்சல் உரிமை மீறல் என எதுவும் செய்யவில்லை.

இந்த கல்யாணம் காதல் என பினாத்தாமல் இருந்தால் பழக அருமையான மனிதன் என அவள் நினைக்கும்படி நடந்துகொண்டான்.

மாலை வீட்டிற்கு சென்றால் மனமெங்கும் ஒரு சோர்வு. தனிமையை தனிமையாய் உணர்ந்தாள். அதுவரை பழகியிருந்த தனிமை அந்நியமாய்பட்டது. அவளை சுட்டது.

‘எல்லோரும் எவ்வளவு கலகலப்பா இருக்காங்க தன் குடும்பத்தோட, எனக்கு........என மனம் ஓடியது.

பார்த்த ரக்க்ஷத் குடும்ப சூழல்தான் இப்படி உணரவைக்கிறது என அவளுக்குமே புரிந்தது.

அவள் காதல் நிறைவேறியிருந்தால் இப்படி ஒரு குடும்பத்தைதான் கட்டியிருப்பாளோ? இத்தனை வருடத்தில் இவளுக்கு கலகலப்பாக இருப்பது எப்படி என்றே தெரியாமல் போய்விட்டது. ஜாஷ்வா கலகலக்க வைத்திருப்பான். அப்படியா? தெரியவில்லையே! ஆனால் அவன் இவளுக்கு கிடைத்திருந்தால் இவள் இப்படி மௌனியாகி இருக்கமாட்டாள். மௌனமாக வாழ்ந்திருந்தால் கூட மகிழ்ச்சியாகத்தான் இருந்திருப்பாள். அவனது அருகாமை இவளுள் எத்தனை இன்பத்தை ஏற்படுத்தியது. இப்பொழுதும் அவனது இவளுக்கான காதலை விளக்கும் ஒற்றை வார்த்தையில் உயிர்தெழுந்து விடமாட்டாளா? இவளது அன்பை அங்கீகரிக்கும் அவனது சிறு புன்னகை போதுமே இவளை உலகத்தை ஜெயித்ததாக உணரவைக்க. அவனது ஒவ்வொரு செயலும் இவளுள் கோடி ரசிகைகளை உண்டுபண்ணுமே! என்றுமில்லாத அளவுக்கு இப்பொழுது அவனின் நினைவுகள் இவளை பந்தாடின.

‘அவன் உயிரை பணயம் வைத்து இவளை பாதுகாத்தானே! பின் ஏன் வராமல் போனான்?

மன நேர்மையின் நிமித்தம் இவளை காப்பாற்றி இருப்பான், மற்றபடி இவள் அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல. அப்படியே இவளை கண்டுகொள்ளாதவனாக இருந்திருந்தால்கூட இவள் இத்தனை வருடம் காத்திருப்பதை உணர்ந்து கரம் பிடிக்க வந்திருக்கமாட்டானா?

அவன் இறந்திருப்பானோ? அல்லது வேறு ஒரு பெண்ணை மணந்திருப்பான்.

மனம் வலிக்க வலிக்க அனைத்து சாத்திய கூறுகளையும் ஆராய்ந்தாள். எப்படி பார்த்தாலும் இனி அவன் வரப்போவதில்லை. இனி இவள் வாழ்க்கை???? இதே வெறுமையான தனிமையில் அவனை எண்ணி வெந்து தணிய வேண்டுமா?’

ஏனோ இத்தனை வருடங்களை விட இப்பொழுது தனிமை பெரும் கொடுமையாக தோன்றியது. எதையெல்லாம் இவள் இழக்க வேண்டியதாயிருக்கிறது? குழந்தை கருணை கையிலேந்திய நினைவு வந்து போனது.

‘தெய்வமே! ஏன் ஜாஷ்வாவை தராது போனாய்? அவன் எனக்கானவன் இல்லை என்றால் அவன் நினைவை என்னிலிருந்து ஏன் எடுத்தெரியாமல், உன் விருப்பம் எதுவென்றும் தெரிவிக்காமல் ஏன் என்னை அவன் நினைவிற்குள் சிறை செய்திருக்கிறாய்?’ இந்த ஒருதலை காதலென்னும் புதைகுழியில் மூச்சடைக்கிறதே!

அவனை எனக்கு எப்படியாவது கொண்டுவந்து தாரும், அல்லது அவன் மீதிருக்கும் என் காதலை நீக்கிப்போடும். அது பூமியில் நானிருக்கும் வரை முடியாதெனில் என்னை கொன்றாவது போடும். உயிர்த்தெழுதலில் காதலும் கல்யாணமும் மறந்திருக்கும் என்றிருக்கிறீரே......’

“யேசப்பா உலகம் தரமுடியாத சமாதானத்தை தருவேன்னு சொன்னீங்களே தாங்கமுடியலையே, அப்பா தாங்கமுடியலையே, சமாதானம் தாங்க.....” கதறி அழுதாள். எவ்வளவு நேரம் அழுதாளோ? இதற்கு ஒரு முடிவு தெரியாமல் எழும்பபோவதில்லை என உபவாசத்தில் அமர்ந்தாள். சத்யநாதனிடம் ஒரு சத்யாகிரகம்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.