(Reading time: 41 - 81 minutes)

 

" ஹா ஹா இதெல்லாம் எங்க கிராமத்து பாஷை மச்சி .,. அப்பபோ மின்னல் மாதிரி வந்துட்டு போகும் நீ ஷாக் ஆகிடாதே "

" ம்ம்ம்"

" ஆமா  அதெப்படி நீ ஷாக் ஆகுவ ? ஆல்ரெடி காதல்ல விழுந்தாச்சு ... இனி இடியே உன்மேல விழுந்தாலும்  எருமை மாடு  மேல மழை பெய்ஞ்ச மாதிரிதானே நிற்ப நீ ?

" ச்ச லவ் எல்லாம் இல்லடா.. அவ ரொம்ப நல்ல பொண்ணு .. அவளுக்கு நிறைய பொறுப்புகள் கனவுகள் இருக்கு .. அதுக்கு எல்லாம் உறுதுணையா நின்னு என் லைப் ஐ அவக்கூட ஷேர் பண்ணிக்க விரும்புறேன் "

" ..."

" என்னடா இப்படி பார்க்குற ? "

"மச்சான் இதுக்கு பேருதாண்டா லவ்வு... சரி உன் மனசை சொல்லிட்டியா ? "

" இல்லடா .. அவளுக்கு கல்யாணம் பண்ணிக்கிறதுல இஸ்டம் இல்ல .. கல்யாண வாழ்க்கையோடு அவளால இப்போ செய்யுற கடமைகளை  சரியா செய்ய முடியாதுன்னு பீல் பண்ணுறா ! "

" நீ  அப்படி இல்லன்னு புரிய வைக்கலாமே "

" ம்ம்ம் வைக்கலாம்..... பட் கொஞ்ச நாள் போகட்டும் .. முதல்ல அவளுக்கு என்மேல அடிப்படை நம்பிக்கை வரட்டும் .. அதுக்கு பிறகு பேசலாம் .. "

" ஹா ஹா ஹா ஹா "

" என்னடா சிரிக்கிற? "

" உன் மேல நம்பிக்கை இல்லாமதான் இந்த நைட் ல உன்னை நம்பி இங்க வராங்களா ? " என்று கேள்விகேட்டு  அவளின் மனதையும் கோடிட்டு காட்டினான் கிருஷ்ணன் .. அவன் சொன்னதும் சரிதானோ என்று யோசிக்க ஆரம்பித்தான் சஞ்சய் ..

தே நேரம் ரகுராம் - ஜானகி இருவரும் அனைவருக்கும் அருந்துவதற்கு தண்ணீர், காப்பி கொண்டு வந்தனர் ... ( இவங்களை பார்த்தா அவ்வளோ  நல்லவங்க மாதிரி தெரிலையே .. எங்கயோ இடிக்குது.. வாங்க ஒரு 10 நிமிஷம் முன்னாடி என்ன நடந்துச்சு பார்ப்போம் )

" ஜானு "

ரகுராம் சமையலறையில் வந்து அழைத்த வேகத்தில் தம்ளரை கீழே போட்டாள் ஜானகி ..

" ஹே பயந்துட்டியா ?? சாரி டா சகி "

" ராம் .. நீங்க இங்க எதுக்கு வந்திங்க ? எல்லாரும் அங்க இருக்காங்க .. நாம மட்டும் தனியா இருக்குறதை பார்த்தா கேலி பண்ணுவாங்க "

" பண்ணா பண்ணட்டும் .. எனக்கு உரிமை  இல்லையா ? "

" ஆஹா உரிமை பாராட்டுற நேரத்தை பாரு .. அநியாயம் ராம் இது " என்று விரல் நீட்டி பேசினாள்....

" ஹே செல்லம் .... டைலி புடவைக்கு  ஏற்ற கண்ணாடி வளையல் போடுற போலிருக்கு .. சோ நைஸ் ... இதுக்காகவே இன்னும் டசன் டசன்னா உனக்கு வளையல் வாங்கி போடணும் "

" அச்சோ ராம் .. நான் எவ்வளவு முக்கியமா பேசிகிட்டு இருக்கேன் " என்று  ஜானகி சொல்லும்போதே சிவகாமி குரல் கொடுத்தார் ..

" ஜானும்மா, அத்தை வரவா டா ? உதவி வேணுமா ? "

" இல்ல .. பரவாயில்லை அத்தை இதோ வந்துட்டோம் "

என்றவள் ரகுராமின் கைகளில் இரண்டு தம்ளரை  தந்து அனுப்பி வைத்தாள்.... ஜானகிக்கு உதவ மீராவும் எழுந்து சமையலறை போக, கண் இமைக்கும் நேரத்தில் அக்கம் பக்கம் பார்த்துவிட்டு அவளை வேறு புறம் இழுத்து வந்தான் கிருஷ்ணன்....

" கிருஷ்ணா ? என்ன இது ? விடுங்க யாராச்சும் வந்திடுவாங்க "

" ஹேய் நீலாம்பரி .. முதலில் என் கேள்விக்கு பதில் சொல்லு சர்ப்ரைஸ் புடிச்சிருக்கா? " 

அவன் கண்கள் மின்ன கேட்ட கேள்வியில் ஏனோ அவனை சீண்டி பார்க்கத் தோன்றியது அவளுக்கு ..

" சர்ப்ரைஸ் ஆ ? என்ன சர்ப்ரைஸ் ? "

" அடிப்பாவி என்ன சர்ப்ரைஸ் ஆ ?  உனக்காக பிளான் போட்டு எல்லாரையும் இங்க வர வெச்சு,கூட வருணையும் அழைச்சிட்டு வர ஏற்பாடு பண்ணா  என்ன சர்ப்ரைஸ் நு அசால்ட்டா கேட்டு வைக்குறிங்க ? சரிதான் இது எனக்கு தேவைத்தான் .. இது சரி பட்டு வாராது .. நான் போறேன் பா " என்று திரும்பி நடக்க போனான் ..

" பின்ன பண்ணுறதை எல்லாம் பண்ணிட்டு , அதென்ன பிடிச்சிருக்கான்னு ஒரு கேள்வி வேற ? "

".."

" அதுனாலத்தான் அமைதியா இருந்தேன் "

" ...."

" அச்சோ என் கிருஷ்ணாவுக்கு கோவமா ? "

" ..."

" இப்படி கோபப்பட்டா என் மனசுக்குள்ள இருக்குற வார்த்தைகளை நான் சொல்ல முடியாது போல இருக்கே .என்ன பண்ணலாம்? " என்று நெற்றி பொட்டில் ஒற்றை விரலால் தட்டி யோசித்தாள் மீரா ... அவளின் பாவனையை ரசித்தவன் அவளை தன்னோடு இறுக்கி கொண்டான் ..

" சொல்லு செல்லம் சொல்லு ... உன் மனசுல இருக்குற எல்லாத்தையும் சொல்லு .. ஆனா மொத நின்ன மாதிரி தள்ளி நின்னு சொல்லாதே" என்றான் சன்னமாய் .. அவன் கண்களுக்குள் விழி கலந்தவள் என்றோ எழுதிய கவிதையை அவனுக்காக சொன்னாள்...

ப்ரியமானவே ,

என்ன மாயம் செய்கிறாய் நீ?

தெளிவாய் இரு என அறிவுரைகூறி

பார்வையால் மயங்க வைக்கிறாய்

சிக்கனமாய் இரு என சொல்லிவிட்டு

முத்தத்தை வாரி கொடுக்கிறாய்

விரல் படாமல் அகம் தொட்டுவிட்டு

ஏதும் அறியாதவன்போல் இறுக அணைக்கிறாய்

மயிலறகால் இதயம் வருடிவிட்டு

உன்னை காயப்படுதுகின்றேனா என கேள்வி கேட்கிறாய்

என் புன்னகையை சேமித்து வைத்து

வெட்கத்தை ஏன் செலவளிக்கிறாய்

உயிரே நீதான் என சரணடைந்துவிட்டேன்

இதயம் தருவாயா என கேள்வி கேட்கிறாய்?

" ஐ லவ் யு கிருஷ்ணா " என்றவள் அவனை  கட்டிக் கொண்டாள்....

" ஹே கண்ணம்மா.. இதுக்கே இப்படி நாளைக்கு எனக்கு டபுள் ட்ரீட் வேணும் "

அவனை அண்ணார்ந்து பார்த்தவள் "ஏன் " என்றாள்....

" நாளைக்கு உன் லைப் ல ரொம்ப முக்கியமான இன்னொருத்தர் வரார்... அவர் வந்ததும் நீ என்னையே மறந்தா கூட ஆச்சர்ய படுறதுக்கு இல்ல " என்று கண்சிமிட்டினான் ..

" அது சஸ்பென்ஸ் "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.