(Reading time: 41 - 81 minutes)

 

" ம்ம்ம் இன்னும் டிசைட் பண்ணலையே .. "

" நான் ஒன்னு சொல்லட்டுமா ? "

" ம்ம்ம்ம் சொல்லுங்க "

" நான் உங்களுக்கு புடவை செலக்ட் பண்ணுறேனே " என்று மெதுவாய் சொன்னவன் அந்த ஒரு நொடிக்குள் உலகில் இருக்கும் அத்தனை தெய்வங்களையும் துணைக்கு அழைத்தான் .. எங்கே அவள் கோபித்து கொள்வாளோ என்ற பயம்தான் ! அவனின் முகத்தை கூர்ந்து நோக்கினாள் புவனா ... அவனின் தயக்கம் அவளுக்கு சிரிப்பை மூட்டியது ... இதுவரை அவளுக்காக என்று யாரும் புடவை தேர்ந்தெடுத்து தந்ததில்லை .. அது அவள் ரசனை மீது உள்ள எண்ணமா அல்லது அவளுக்கே தனக்கு என்ன வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியுமே என்று விட்ட சுதந்திரமா ? பதில் அவளுக்கும் தெரியாது .. ஏனோ அவளால் அவனை எதிர்த்து பேச முடியவில்லை .. இப்போது மட்டுமில்லை.. இந்த இரண்டு நாட்களாக அவன் சொன்ன எதற்குமே அவளால் மறுப்பு கூற முடியவில்லை .. அனைவருக்கும் நிழல்தந்த அந்த பாவைக்கு தோள் சாய்ந்துக் கொள்ள அவன்தான் ஆதாரமோ ???

" சாரி புவனா .. நீங்க இவ்வளவு யோசிப்பிங்கன்னு தெரியாது .. இட்ஸ் ஓகே " என்று நகரப்போனவனை  அவசரமாய்

" ஜெய் ..!! " என்று அழைத்து நிறுத்தினாள் புவனா

பின்னாடி திரும்பிப் பார்த்தவன் " என்னய்யா கூப்டிங்க என்றான்.. ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தவள் " இல்லையே, அதோ எங்க இருக்குற தாத்தாவைத் தான் கூப்பிட்டேன் " என்று நிலைக் கண்ணாடியை காட்டினாள்... அவள் விரல் நீட்டிய திசையில் தன்  பிம்பத்தை பார்த்தவனுக்கு இதழோரம் புன்னகை மலர்ந்தது..ஒரு பக்கம் அவளின் குறும்பான பதில் இன்னொரு பக்கம் அவள் , சஞ்சயை " ஜெய் " என்று அழைத்தது , இரண்டும் அவனின் ஔன்னகையை விரிதாக்கியது..

கையை கட்டிக் கொண்டு " சரி தாத்தாவை எதுக்கு கூப்பிட்டிங்க ? " என்றான் ..

" ஹா ஹா இல்ல அவர் எனக்கு புடவை சூஸ் பண்றேன்னு சொன்னாரு " என்று இழுத்தாள்... அவள் கைகளில் இருந்த இளநீல நிற புடவையை எடுத்தவன் அவளுடன் புடைவைகளை தேர்ந்தெடுத்தான் .. அவளின் மாநிறத்திற்கு பொருத்தமாக ஊதா வண்ணத்தில் அதிக வேலைபாடுகள் இல்லாமல் அதே நேரம் மிக எளிதாகவும் இல்லாமல் பச்சை நிற குட்டி குட்டி இலைகள் போல் வடிவம் பதித்த அந்த புடவையை எடுத்தான்.

கண்ணாடிமுன் நின்று தன் மீது வைத்து அழகு பார்த்தாள் புவனா .. மிக அழகாய் அவளுக்கு பொருந்தியது அந்த புடவை.. அவனின் ரசனையை மெச்சிக் கொண்ட நேரம் பின்னால் நின்ற சஞ்சய்

" பிடிச்சிருக்கா ?" என்றான் .. அவன் இதழ்கள் கேட்டது புடவையைத்தான் .. ஆனால் கண்கள் சொன்னதோ அவனை ... அது அவளுக்கும் புரிந்ததோ இல்லை புரியவில்லையோ

" ம்ம்ம்ம்ம் புடிச்சிருக்கு " என்றாள் அழகாய் ...

ரகு - ஜானகி

" ராம் அத்தை எங்க ? "

" அவங்க அப்பாவுக்கு ஷர்ட் எடுக்க போயிருக்காங்க .. ஏண்டா ? "

" இல்ல எனக்கு 3 இல்ல 4 புடவை போதுமே .... 5 எதுக்கு ? " என்றாள்... அவளை செல்லமாய் தலையில் தட்டியவன்

" ஹே அசடே, இது என்ன சாதாரண நாளா ? நமக்கு கல்யாணம் நடக்கப்  போகுது டா .. இங்க நான்தான் ஹீரோ .. நீ ஹீரோயின் ...  அதுனால ஒன்னுக்கு பத்து டிரஸ் எடுத்தாலும் தப்பில்ல .. "

" அதில்ல ராம் ... "

" எது இல்ல .. கல்யாணம்னா சும்மாவா ? நலுங்கு வைப்பாங்க, மோதிரம் மாத்த சொல்லுவாங்க, முகுர்த்த நேரம் வரும், அப்பறம் " என்று கண் சிமிட்டிவிட்டு

ஜானகி முறைக்கவும்

" அடடே மறுவீட்டுக்கு போகணும்னு  சொல்ல வந்தேன் டா. ... நீ என்ன நினைச்ச ? " என்றான் அப்பாவியாய் ...

" நான் ஒண்ணுமே நினைக்கல ராம் .... "

" சரி சரி வா நானும் செலக்ட் பண்ணுறேன் " என்றவன் அவளுக்காக புடவைகள் எடுத்து தந்தான் ..

கிருஷ்ணன் -மீரா

" அண்ணா , அந்த புடவையை காட்டுங்க .. இல்ல இது சரி இல்ல  அதை காட்டுங்களேன் " என்றபடி அந்த கடையையே தலைக்கீழாய் போட்டு கொண்டு இருந்தான் கிருஷ்ணன் .. அவ்வளோ ஆர்வமா புடவை எடுக்குறாரான்னா இல்லவே இல்லை .. ஒவ்வொரு புடவையையும் பார்க்கிறேன் என்று பெயர் செய்துகொண்டு மீராவை தீண்டித் தீண்டி வம்பிழுத்து கொண்டு இருந்தான் கிருஷ்ணன் .. மீரா அடிக்குரலில்,

" கிருஷ்ணா ... ஏன் இப்படி அநியாயம் பண்ணுறிங்க ? " என்றாள்

" நான் என்னம்மா பண்ணேன் ? "

" கொஞ்சம் தள்ளி நில்லுங்களேன்.. எல்லாரும் நம்மளை பார்க்குறாங்க  "

" சான்ஸ் ஏ இல்லை .. என் கண்ணம்மாவை நான் மட்டும்தான் வெச்சக் கண் வாங்காம பார்ப்பேன் "

" ஷாபா " என்று அவள் ஏதோ சொல்ல வருவதற்குள் அபிராமியே

" டேய் கிருஷ்ணா, நீ புடவை எடுக்குறேன்னு அந்த தம்பி தலையை உருட்டினது போதும் .. போ  போயி உங்க அப்பா, பெரியப்பாவுக்கு உதவி செய் " என்று அதட்டி அவனை அனுப்பி வைத்தார் ..

அதே நேரம்,

" அத்தை இந்த மாம்பழ கலர் புடவை உங்களுக்கு ரொம்ப நல்ல இருக்கும் பாருங்க .... "

" உனக்கு முதலில் பார்க்கலாம் சுபிம்மா "

" அச்சோ எனக்கு அப்பறம் பார்த்துக்கலாம் அத்தை " என்றபடி பானுவிற்கு புடவைகளைத் தேர்ந்தெடுத்தாள் சுபத்ரா.. மாமியாரும் மருமகள் நடத்திக் கொண்டிருந்த பாசப்போராட்டத்தை கன்னத்தில் கை வைத்தப்படி ரசித்துக் கொண்டு நின்றான் அர்ஜுனன் ..

" அர்ஜுன் , சீக்கிரம் எடுத்து முடிச்ச நாமே வீட்டுக்கு சீக்கிரம் போயி தாத்தா பாட்டிக்கு ஹெல்ப் பண்ணலாம்ல ... உனக்கு வேண்டியதை போயி பாரு கண்ணா " என்று அவனை அனுப்பி வைத்தார் பானு ..

" ஓஹோ மருமகள் கிடைச்சதும் என்னை கலட்டி விடுறிங்களா ? "  என்று போலியாய் அலுத்துக் கொண்டவன், சுபத்ராவை மீண்டும் காதலுடன் பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றான் ..

" டேய் கிருஷ்"

" வா மச்சான் .. உன்னையும் துரத்தி விட்டுடாங்களா ? "

" என்னயும்னா ... அப்போ உன்னையும் அபி அத்தை துரத்தி விட்டுட்டாங்களா ? ஹா ஹா ஹா "

" சிரிக்காத மச்சான்"- கிருஷ்ணன்

" ஹா ஹா.. சரி சரி வா நம்ம ஒரு சிக்ரெட் பர்சேசிங் பண்ணனும்"

" எங்கடா ....... டேய் மறுபடியும் புடவை பக்கமா ? " என்று கேட்டுகொண்டே முன்னால் சென்ற அர்ஜுனனை தொடர்ந்தான் கிருஷ்ணன் ..

சிறிது நேரத்திற்கு பிறகு பெரியவர்கள் அனைவரும் அங்கு வந்துவிட,

" சரி இப்போ முகுர்த்தப் பட்டு எடுக்கலாம் " என்றார் அபிராமி .. மூன்று பேருமே ஒரே மாதிரியான புடவை அணிய வேண்டும் என்று ஆசைப் பட்டனர் .. இருந்தாலும் ஜானகி, மீரா அதை சொல்லத் தயங்க சுபத்ராதான்

" பெரியப்பா எங்க மூணு பேருக்கும் ஒரே மாதிரி புடவை ப்ளீஸ் " என்றார் ..

" ஒரே மாதிரி இருந்தா யுனிபார்ம் மாதிரி இருக்கும் சுபாம்மா " என்றார் சந்துரு ..

" அப்பா ப்ளீஸ் அப்பா "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.