(Reading time: 41 - 81 minutes)

 

" ட கேளு புள்ள காலம் பூரா நீ பேச நான் கேட்கனும்னு தானே ஆசப் படுறேன் ? "

" சரி சரி .. எதுக்கு சின்ன பேத்தி கல்யாணத்தை மட்டும் ரெண்டு நாள் பிறகு வெச்சுருக்கிங்க ? மூணு பேருக்கும் ஒண்ணா கல்யாணம் பண்ணனும்னு தானே பெரியவன் சொன்னான்"

" அவன் சொன்னாந்தான் .. ஆனா மாப்பிளை வேற சொன்னாரே "

" என்ன சொன்னாரு ? "

( அதை நான் இப்போ சொல்ல மாட்டேனே  ..ஹா ஹா .. ஆனா கேஸ் பண்ண முடிஞ்சா பண்ணிக்கோங்க .. அனேகமா எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான்.. நான்தான் வேணும்னே பில்டப்ப்  தர்றேன் .. பழக்க தோஷம் .. ஹீ ஹீ )

" ரொம்ப நல்ல தம்பிங்க "

" ஆமா வள்ளி .. அவரு மட்டும் இல்ல ... மீரா, ஜானகி கூட ரொம்ப நல்ல புள்ளைங்க .. "

" நம்ம காலம் மாதிரி இல்லங்க .. இப்போ இருக்குற புள்ளைங்க எல்லாரும் உருப்படி இல்லன்னு சொல்லவே முடியாது .. சொல்ல போன அவங்க இன்னும் கொஞ்சம் தெளிவா இருக்காங்கன்னு தோணுது .. "

" ஒரு வகையில் நிஜம்தான் வள்ளி .. நம்ம காலத்துல ஆம்பள ஊதாரியா இருந்தா உடனே சட்டுபுட்டுன்னு கால்கட்டு போடணும் அப்போதான் பொறுப்பு வரும்னு சொல்வாங்க .. ஆனா இந்த காலத்து புள்ளங்க கடமையை முடிச்சுட்டுதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு இருக்குங்க "

" மொத்தத்துல நல்லதும் இருக்கு கேட்டதும் இருக்கு .. அவங்க காலத்து வாழ்கை முறை வேற நம்ம வாழ்கை முறை வேற .. ஆனா மனுஷங்க மனுஷங்கதான் ..... ஹப்பப்பா..... மனுஷங்களும்தான் எத்தனை விதம் ? "

வள்ளி பாட்டியை வாஞ்சையுடன் பார்த்தார் தாத்தா

" என்னங்க அப்படி பார்கறிங்க ? "

" இல்ல வள்ளி .. நீயும்தான் என்னைகட்டிகிட்டு எவ்ளோ மாற்றத்தை பார்த்துட்டே .. அப்போ நான் உன் கைய புடிக்கும்போது என் அய்யன் பேச்சை கேட்டுத்தான் உன்னை கட்டிகிட்டேன் .. மத்தபடி நான் பாட்டுக்கு வேலை வேலைன்னு இருப்பேன் .. அது ஏனோ கல்யாண வாழ்க்கையை அப்போ ஏத்துக்க முடில.. ஆனா நீ எவ்ளோ பொறுமையா இருந்த? எந்த நம்பிக்கையில வள்ளி நீ எனக்கு கழுத்து நீட்டின ? "

" அதை ஏங்க இப்போ பேசிக்கிட்டு .. கடல்ல இருந்து போற தண்ணி எல்லாம் மழையா மறுபடி வந்து சேருது ..அந்த மாதிரி தான் சந்தோஷமும் .. சந்தோசம் நம்ம விட்டு போறதும் கூட தற்காலிகம் தான் .. நிச்சயம் அது திரும்பி வரும் .. எனக்கு நீங்க வந்த மாதிரி " என்ற பாட்டியின் கண்கள் பனித்தது ..

" சரி சரி .. விடு வள்ளி .. நல்ல விஷயம் நடக்கும்போது இப்போ ஏன் அழுதுகிட்டு?? நான் மாறுனதுக்கு அப்பறம் நீ ஒரு பாட்டு பாடுவயே அதை கொஞ்சம் பாடேன் "

" ஐயோ போங்க ..அதெல்லாம் வேணாம் .."

" சும்மா கொஞ்சம் பாடு புள்ள "

( பாட்டி பாட போறாங்க .. பின் குறிப்பு .. சில  வருடங்களுக்கு முன்பு, நம்ம குடும்பத்துல குரூப் சிங்கிங் நடக்கும்போது  என் அம்மாவும் அப்பாவும் இந்த பாட்டுத்தான் பாடுவாங்க .. சோ அவங்களுக்காக இதை டெடிகேட் பண்ணிக்கிறேன் .. ஓகே பாட்டி ஸ்டார்ட் மியுசிக் )

தோட்டக்கார சின்ன மாமா

தோப்புக்குள்ள பாரேன் மாமா

தோட்டக்கார சின்ன மாமா

தோப்புக்குள்ள பாரேன் மாமா

காட்டு மாடு மேயுது பார் அங்கே

என் ஆசை மாமா

காவல் அழகா நடக்குதே அங்கே

என் ஆசை மாமா

காவல் அழகா நடக்குதே அங்கே  " - பாட்டி

" தோப்பில் மாடு மேய்ந்தால் என்ன?

தோட்டம் வீணா போனால் என்ன ?

தோப்பில் மாடு மேய்ந்தால் என்ன?

தோட்டம் வீணா போனால் என்ன ?

தோகை மயிலே எந்தன் கிட்டே வா

என் ஆசை மானே

சுகமும் பெறலாம் சும்மா கிட்டே வா

என் ஆசை மானே சுகமும் பெறலாம் சும்மா கிட்டே வா " - தாத்தா

" போதுமே .. வீட்டுக்கு விருந்தாளி வர்றதா சின்னவனும் பெரியவனும் சொன்னாங்களே . வாங்க போயி பார்ப்போம் " என்று பாட்டி தாத்தாவுடன் வீடு திரும்ப அங்கு காத்திருந்தனர் நம்ம பஞ்ச பாண்டவர்கள் அணியுடன், ஷக்தியும் - சங்கமித்ராவும் ! ( இதை யாரும் எதிர்பார்த்து இருக்கு மாட்டிங்கன்னு நானே நம்புறேன் ..ஹா ஹா ஹா .... பின்ன நம்ம மீராவுக்கு நண்பனாக இருந்துகிட்டு  ஷக்தி கல்யாணத்துக்கு வரலன்னா வரலாறு அவரையும் தப்பா பேசாதா ? அதான் என் செலவுலேயே துபாய்க்கு டிக்கெட் போட்டு அவரை கடத்திட்டு வந்தாச்சு .. ஹா ஹா ஹா)

அந்த துணிக்கடையில் இருந்த மொத்த கூட்டமும் நம்ம குடும்பம்தான் என்று சொல்லும் அளவிற்கு ஆரவாரமாக , குதூகலமாக அனைவரும் ஆடைகள் தேர்ந்தெடுத்து கொண்டு இருந்தனர் ... மணப்பெண்கள் மூவருக்கும் ஐந்து  பட்டு புடவைகளும் மற்ற பெண்களுக்கு மூன்று புடவைகளும் எடுப்பதாக  ஏற்கனவே முடிவு செய்து இருந்ததால், அனைவரும் தத்தம் விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்து கொண்டிருந்தனர்..

சஞ்சய் - புவனா

" என்னங்க சீக்கிரம்  எடுத்திட்டிங்க போல .. மத்த எல்லாரும் கடையையே திருப்பி போட்டுட்டு  இருக்காங்க "

" மூணு புடவை எடுக்க சொல்லி கிருஷ்ணன்  சார் எடுக்க சொல்லி ஒரே அடம் .. அப்பறம் திடீர்னு ரெண்டு எடுங்க ...ஒரு புடவை சஸ்பென்ஸ் ப்லான்னிங் நு சொல்லிட்டாரு .. ரெண்டு புடவை எடுக்க எனக்கு எவ்ளோ நேரம் ஆகாது ... பொதுவா எது புடிச்சிருக்கோ அதை சூஸ் பண்ணிட்டா நான் மத்தது பார்க்க மாட்டேன் "

" ஏன் அப்படி ? "

" தெரில சின்ன வயசுல இருந்தே அப்படித்தான்.. எனக்கேது புடிச்சிருக்கோ  அதை மட்டும்தான் பார்ப்பேன் .. அதே மாதிரி ஒன்னு சூஸ் பண்ண பிறகு மறுபடி யோசிக்க மாட்டேன் .. நம்ம தலைவர் ஸ்டைல் ல சொல்லனும்னா  லைப் ல ஒன்னை விட ஒன்னு பெட்டரா வந்துக்கிட்டேத்தான் இருக்கும் .. நாமதான் கிடைக்கிறதா வெச்சு சந்தோஷமா இருக்கணும் .. "

" அடேங்கப்பா என்னங்க ஒரு புடவை செலக்ஷன் ல கூட இவ்வளோ கருத்தா ?? சரி உங்க செலக்ஷனை நான் பார்க்கலாமா ? "

" வாய் நோட் " என்றவள் , தான்  தேர்ந்தெடுத்த புடவைகளை காட்டினாள்.... பிஸ்தா பச்சை நிறத்தில் ஒரு புடவையும், இளநீல நிறத்தில் ஒரு புடவையும் எடுத்திருந்தாள் அவள் .. அவளின் தெரிவிலேயே அவளுக்கு எளிமையான டிசைன்கள் கொண்ட புடவைத்தான் பிடிக்கும் என்று புரிந்து கொண்டான் அவன்.. " இருந்தாலும் நம்ம ஆளுக்கு இன்னும் கொஞ்சம் பெட்டரான புடவை எடுக்கலாமே" என்று யோசித்தான் சஞ்சய் ...

" என்னாச்சு ? "

" இல்ல இதுல நீங்க எந்த கலர் புடவை கல்யாணத்துல கட்டிக்க போறீங்க ? " என்றான் சஞ்சய் ..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.