(Reading time: 41 - 81 minutes)

 

" ப்ச்ச்ச்.. அப்போ சொல்லாமலே இருந்திருக்கலாம் ல .. இப்போ நான் விடியுற வரை இதையே யோசிச்சுகிட்டு இருக்கணும் "

" ஹா ஹா .. நீலாம்பரி .. வேற வழியே இல்லை .. நாளைக்கு நீயே தெரிஞ்சுப்பியாம்"

" ப்ச்ச்ச் போங்க .. அப்போ அந்த சஸ்பென்ஸ் தெரியுரவரை நான் உங்க பக்கத்துல வர மாட்டேன் "

" ஹா ஹா .. .... நீ வரலன்ன என்ன நான் வரேன்" என்றவன் அவளைத் துரத்திக்கொண்டு ஓடினான் ..

பெரியவர்கள் அனைவரும் திருமண ஏற்பாடுகளைப்  பற்றி கலந்துரையாடிக்கொண்டு இருந்தனர் ...தாத்தா பாட்டி இருவரும் திருமணத்திற்கு நல்ல நாள் குறிக்க நாளை செல்வாதாகவும், மற்றவர்கள் அனைவரும் அருகில் இருந்த பட்டணத்தில் புது துணிமணிகள் வாங்கிவிட்டு வருவதாகவும் முடிவெடுத்தனர் .

  இளையவர்கள் அனைவரும் ஆகாஷின் " திருமணத்திற்குப் பின் " கதைகளைக் கேட்டுகொண்டே அவரவரின் ஜோடிகளை அவ்வப்போது பார்வையால் தழுவிக்கொண்டு இருந்தனர் ... வருண் மட்டும் மீராவிடம் தனியாக பேசிக்கொண்டு இருந்தான் ..

"  நல்ல படிக்கிறியா வருண் ?"

" ரொம்ப நல்லா படிக்கிறேன் அக்கா... நாந்தான் போன பரிட்சையில கிளாஸ் பர்ஸ்ட் ... அம்மா அப்பாவுக்கு ரொம்ப சந்தோசம் .. அக்கா, அப்பா அம்மா உங்க கிட்ட ஒன்னு கேட்டாங்க ? "

" என்னடா ? தயங்காம கேளு"

" அதுவந்து .. கல்யாணம் முடிஞ்சதும் நீங்களும் மாமாவும் எங்க வீட்டுக்கு விருந்துக்கு வரணும் அக்கா " என்றான் வருண் தயக்கத்துடன் ..

" அட இதுல என்ன இருக்கு டா ? அவசியமா வரோம் .. இதுக்கா நீ தயங்கி தயங்கி சொன்ன ? "

" இல்ல அக்கா ..உங்க  வசதிக்கு விருந்து வைக்கிற அளவுக்கு நாங்க வசதி இல்லக்கா.. அதுவும் அம்மா அப்பா என்கிட்ட சொல்லி  சொல்ல சொன்னாங்க..அதை நீங்க எப்படி எடுத்துப்பிங்கன்னு "

" அடடா .. நான் முதன் முதலில் பார்த்த என் தம்பியா இது ? ரொம்ப வளர்ந்துட்ட பெரிய மனுஷா நீ .. ஆனா அக்காகிட்ட மட்டும் இப்படி  இருக்காத ... நீ முதன்முதலில் பார்த்தா மீரா அக்காத்தான் இப்பவும் இருக்கேன் .. அதுவுமில்லா விருந்து வைக்க பெரிய வீடு அவசியம் இல்ல டா. பெரிய மனசுதான் இருக்கு .. நீ எனக்கு தம்பின்னா  உன் அம்மா அப்பா எனக்கும் அம்மா அப்பாதானே ? நம்ம வீட்டுக்கு வர்றதுக்கு என்னை யாருடா முறையா அழைக்கணும் சொல்லு ?? உங்க மாமாவோடு நான் கண்டிப்பா வருவேன் .. இன்னொரு தடவை வசதி அது இதுன்னு பேசி என்னைத்  தள்ளி வைக்காத .. ஏற்கனவே என் சுயநலத்துக்காக உன்னை கூட பார்க்காமல் சென்னைக்கு போயிருந்தேனேன்னு குற்ற  உணர்வில்  இருக்கேன் ... எனக்கொரு பிரச்சனைன்னு வந்ததும் அதை சந்திக்காமல் ஓடி போக பார்த்து உன்னையும் விட்டு போயிட்டேன் பார்த்தியா ? " என்றாள் மீரா  வருத்தத்துடன் ..

" ஐயோ  என்ன அக்கா இப்படியெல்லாம் பேசுறிங்க ? "

" நிஜம்தானே வருண் .. எனக்கொரு பிரச்சனைன்னு வந்ததும் நான் அதைதானே பார்த்துகிட்டு இருந்தேன் .. உனக்கு படிப்பு செஞ்ச உதவியை கூட முழுசா செய்யல .. உனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும் "

" அச்சோ அக்கா மாமா உங்க கிட்ட சொல்லலியா? "

" என்னடா ? "

" அக்கா உங்களை பார்க்குறதுக்கு முன்னாடியே மாமா என்கிட்ட முதலில் பிரண்ட் ஆனாரு .. அப்போவே எதாச்சும் உதவி என்னை கேளுன்னு அவருடைய கார்ட் கொடுத்தாரு .. அவரு உங்களை கூட்டிகிட்டு சென்னை போறதுக்கு முன்னாடி அப்பா அம்மாவை  பார்த்து என் படிப்புக்கான பணத்தை கொடுத்து என் அண்ணாவையும் கண்டிச்சு அவனை அவருடைய நண்பர் கம்பனிலேயே வேலைக்கு வெச்சிட்டாரு .. வாரத்துக்கு ஒரு தடவையாவது என் படிப்பை பத்தி தவறாமல் விசாரிப்பாரு  அக்கா " என்றான் மகிழ்வுடன் ..

மீராவிற்கு அவன் சொல்லச் சொல்ல ஆச்சர்யம் தாங்கவில்லை .. ஆனந்தத்தில் கண்களில் நீர் கோர்த்தது ...எப்படித்தான் இவனால் இப்படி இருக்க முடிகிறது ? இவனின் அன்பிற்கு நான் என்னத்தான் செய்ய போகிறேன்  என்று கேட்டு வியந்து போனாள்.... இப்படி ஒரு துணைவனை கொடுத்ததற்கு இறைவனுக்கு நன்றி சொன்னாள் மீரா .....

மறுநாள்,

" ஹெலோ "

" ..."

"எங்க இருக்கீங்க ?"

"...."

" ஓ அப்போ மதியம் ஆகிடுமா ? "

"...."

" நோ ப்ரோப்ளம்  .. அதுக்குள்ள நாங்க ஷாப்பிங் முடிச்சிட்டு வந்திடுவோம் "

"..."

" ஓகே பை " என்று சிரித்தபடி போனை வைத்தான் கிருஷ்ணன் ..

" எங்க இருக்காங்க அவங்க கிருஷ்ணா? " - சூர்யா

" கொஞ்சம் லேட்டாகுமாம் அப்பா .. நாம முதல்ல போகலாம் .. எல்லாரும் ரெடி ஆயாச்சா? " என்று கேட்டபடி வீட்டினுள் நுழைந்தான் கிருஷ்ணன் .. அன்று ஒருநாள் சுபத்ரா கேட்டதற்காக ஒரே மாதிரியாக ரகுராம் வாங்கிய சுடிதாரைத்தான் அணிந்திருந்தனர் பெண்கள் நால்வரும் .. ( நித்யா, சுபி, ஜானு, மீரா ) ..புவனாவும் சுப்ரியாவும் கிட்ட தட்ட ஒரே மாதிரியான ஊதா நிற புடவை அணிந்திருந்தனர் ..

தன் மனைவியின் அழகை ரசித்துக் கொண்டிருந்த ஆகாஷ், அருகில் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்

" ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் " என்று பாடி சுப்ரியாவின் முறைப்பை பரிசாய் பெற்றுக் கொண்டான் ..

" ஆமா ரகு எங்க ?" - அர்ஜுன் ..அதே நேரம் தனதறையிலிருந்து வந்தான் ரகுராம் .. பெண்கள் நால்வரும் ஒன்றாய் நிற்பதை பார்த்து ரசித்து அதை வாய்விட்டே பாராட்டினான் ..

" ஹே ..... நாலு பெரும் ட்வின்ஸ் மாதிரி இருக்கீங்க "  உடனே சுபத்ராவோ

" லூசு .. ட்வின்ஸ் நா ரெண்டு பேருதான் " என்றாள்...

" ஐயோ என் லூசு சுபா ...  ட்வின்ஸ் ஐ செராக்ஸ் காப்பி எடுத்து மாதிரி இருக்கிங்கன்னு சொல்ல வந்தேன் .. அதுக்குள்ள அவசரம் உனக்கு "

" மச்சான் அர்ஜுன் நீ பாவம் பா " என்று போலியாய் பெருமூச்சு விட்டான் ..

" ஹ்ம்ம் எதோ எங்களுக்கு ஒரே மாதிரி டிரஸ் எடுத்து கொடுத்ததினால உன்னை திட்டாமல் விடுறேன் .. ஓடிடு " என்று மிரட்டினாள் சுபத்ரா..

" சின்னம்மா எல்லாரும் ஆளுக்கொரு குடையை எடுத்துக்கோங்க " என்றான் ரகு சிவகாமியிடம் ...

" குடை எதுக்கு மாப்பிளை ? "- பானு

" அதுவா அத்தை , என் செல்ல  பிசாசு  முதல் தடவையா என்னை அடிக்காமல் விட்டு வைக்கிறாளே " என்றவனை  நன்றாக மொத்தி அவனின் மனக்குறையைத் தீர்த்து வைத்தாள் சுபத்ரா ..

" நம்ம பஞ்ச பாண்டவிஸ் எப்போ வராங்க ராம் ? " -ஜானு

" மதியம்தான் சகி .. அதுக்குள்ளே நாம போயிட்டு வந்திடலாம் .. அதே நேரம் பூஜை அறையில் இருந்து வெளிவந்தனர் வேலுச்சாமி தாத்தாவும் வள்ளி பாட்டியும் ... அனைவரையும் ஒருமுறை பார்த்தவர்

" வீடே இப்போத்தான் நிறைஞ்சிருக்கு வள்ளி ?" என்றார் ஆத்மார்த்தமாய்....

" ஆமாங்க ... அதுவும் தங்கமாட்டம் இருக்குதுங்க நம்ம புள்ளைங்க .. "என்றார் கரிசனையுடன்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.