(Reading time: 41 - 81 minutes)

 

" நீங்க சங்கமித்ரா தானே ? "

" அதென்ன நீங்க வாங்க நு ? நீ நு சொல்லுங்க நானேதான் ..."

" ஹை நான் ஷக்தி " என்று கை நீட்டினான் ஷக்தி அவளிடம்..

" டேய் குரங்கு .. கொழுப்பா ? " என்று கேட்டவள் இயல்புநிலைக்கு வந்திருந்தாள்...

" அதை நான் கேட்கணும் மேடம் .. கல்யாண கலை வந்ததும் என்னை மறந்துட்டியா ? அப்படியே பேயை பார்த்தா மாதிரி நிற்குற ? "

" ஓஹோ அப்போ நீ பேயில்லையா ஷக்தி ? " என்று கேட்டது மித்ராவேதான் ...

" என் அத்தை பொண்ணே ..என்னதான் நீ எனக்கு அத்தை பொண்ணாக இருந்தாலும் நீயும் நானும் ஒன்னாகிட முடியுமா ? " என்றான் ..

" ஹே அதிருக்கட்டும் .. நீ எப்போ துபாய் ல இருந்து வந்த ? " - மீரா ...

" நான் வந்து மூணு நாள் ஆச்சு லூசு  "

" அப்போ  ஏன் எனக்கு கால் பண்ணல ? "

" மேடம் முதலில் உன் போன் எங்க இருக்கு காட்டு ? " என்றதும் கிருஷ்ணன் தன் பாக்கெட்டில் இருந்து எடுத்தான் ..

" இங்க நீ வந்தாலும் வந்த போனை கூட மறந்துட்ட.. கிருஷ்ணன் தான் போன் பண்ணி இன்வைட் பண்ணாரு .. "

" ஹே சாரி டா... " என்றவளின் குரல் உள்ளே போய்விட ..

" இட்ஸ் ஓகே பேபி.. ஷக்திகாக இவ்ளோ பீலிங்க்ஸ் காட்ட வேணாம்... அவன் எப்படியும் இதெயெல்லாம் பெருசா எடுத்துக்க மாட்டான் " என்று அவளை சமாதனப்படுத்தினாள் மித்ரா...

" ஆமாடி அவ  ஏற்கனவே என்னை ரொம்ப மதிப்பா .. இதுல நீ வேற சொல்லிக் கொடு " என்றான் ஷக்தி ..

" ஹா ஹா விடு ஷக்தி ,... இதெல்லாம் உனக்கென்ன புதுசா ? " என்ற மித்ரா ..அவனிடம் இருந்து முறைப்பை பரிசாய் பெற்று கொண்டாள்.... ஒரு வழியாய் அறிமுகப்படலம் முடிய, அந்த வீடே விழா கோலம் பூண்டது ..

மதிய உணவிற்குப் பிறகு ஏற்கனவே தாத்தா பாட்டி ஏற்பாடு செய்தது போல, அனைவரும் நதிக்கரைக்கு செல்ல முடிவெடுத்தனர்,..

" தாத்தா ரெடியா? " - மது

" இதோ வந்துட்டேன் ஹனி "

தாத்தா ஹனி என்று சொல்லிக்கொண்டே அங்கு வரவும் " அஹெம் அஹெம் " என்று தொண்டையை செருமிக் கொண்டார் பாட்டி ...

மது ரகசியக் குரலில் " தாத்தா பாட்டிக்கு இந்த வயசுலயும் பொசசிவ்னஸ் ஜாஸ்தியா இருக்கே ... கொடுத்து வெச்சவர் நீங்க" என்றாள்..பெரியவரும் அதே குரலில்,

" அதென்ன பேத்தி பொஸ் பொஸ்சு ?"

" ஹா ஹா பொஸ் பொஸ்சு இல்ல தாத்தா .. பொசசிவ்னஸ் .. அப்படின்னா உரிமை உணரவில வர்றா பொறாமை "

" அட ஆமா மா " என்றவரின் முகம் சட்டென வாடியது

" அச்சோ மை டியர் ஹென்சம் ..என்னாச்சு தாத்தா ? "

" ஆமா நீ பாட்டுக்கு கெளம்பி போயிடுவே .. அப்பறம் உன் பாட்டிகிட்ட நான்தானே மாட்டிக்கணும் ... "

" சரியா போச்சு .. இந்த மீனுவும் மலரும் பேசிக்கிட்டது உண்மைதான் போல "

" அதென்ன உண்மை ? "

" மீனா கேட்டா, தாத்தா மீசைக்கே எல்லாரும் அடங்கிடுவாங்களே அப்போ தாத்தா யாருக்கும் பயப்பட மாட்டாங்களான்னு... அதுக்கு மலர் சொன்ன நம்ம வீட்டை பார்த்தா மதுரை ஸ்டைல்ல இருக்கு அப்போ கண்டிப்பா மீனாட்சி அதாவது பாட்டி ராஜ்யம் தான்னு"

" சரியாத்தான் சொல்லிருக்காங்க ,... ஆமா இந்த ப்ரியாப்பொண்ணு ஏன் கொஞ்சம் சோகமா இருக்கு ? "

" அவ ஒரு கனவுக் கன்னி தாத்தா "

" என்னம்மா சொல்லுற ? "

" ஆமா தொங்கும்போதும் சரி விழிச்சிருக்கும்போதும் சரி அவளுடைய ஹீரோவை நெனைச்சு கனவு கண்டுகிட்டே இருப்பா .. நம்ம கீர்த்தானவை பத்தி  ஒரு நியுஸ் சொல்லவா ? "

" சொல்லு சொல்லு "

" கூடிய சீக்கிரம் அவளுக்கும் டும் டும் டும் தான் " என்று சிரித்தாள் மது ..

அங்கு வந்த சூர்யா, " மதுகிட்ட பேசினா டைம் போறதே தெரியாதே .. அப்பா எல்லாரும் காத்திருக்காங்க வாங்க போகலாம் " என்றார் ....

நதிக்கரை,

சில்லென்ற காற்று தாலாட்ட, இயற்கையின் மனமும் பாய்ந்தோடும் நதி ஓசையும் அனைவரையும் கிறங்கடித்தது... நம்ம ஹீரோயின்கள் அணிந்திருந்த கொலுசுச் சந்ததமும் நதியோடு போட்டி போட்டது .. ஒருவர் கை ஒருவாறாகப் பிடித்துக் கொண்டு , நதியோரம் இருந்த பாதையில் நடந்து வந்தனர் ...

நித்யா பேசிக்கொண்டிருக்க, மித்ரா கன்னம்குழி அழகாய் தெரிய சிரித்து கொண்டு இருந்தாள்...

பெண்ணே அடிக்கடி சிரிக்காதே

அருவிகளுக்கு அதன் புன்னகையே மறந்துவிடுகிறதாம்!

என்று மனதிற்குள்ளேயே சொன்னான் ஷக்தி .. ஏதோ உறுத்த அவள் அவன் பக்கம் திரும்பி " என்ன ? " என்பதுபோல புருவம் உயர்த்திப் பார்த்தாள்..

" ம்ம்ம்ம் ஒன்னுமில்லையே " என்று சத்தமில்லாமல் செய்கையில் சொன்னவனை மீராவும் கண்டுகொண்டாள்... அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்

" நேற்று இல்லாத மாற்றம் என்னது " என்று பாடினாள்...அவளைப் பார்த்து போலியாய் முறைத்தான் ஷக்தி .. அதன் பிறகு நண்பர்களிடையே சில ரகசியாமான  பேச்சு வார்த்தையும் நடந்தது .. ( அது என்னனு பிறகு சொல்றேன் )

ஆண்கள் அனைவரும் ஒரு பக்கமாய் பேசிக்கொண்டே நடக்க, பாட்டியின் பின்னே பெண்கள் அனைவரும் சென்றனர் ..

" பாட்டி " - கீர்த்தனா

" சொல்லும்மா  "

" அப்படியே எங்களை பம்பு செட்டுக்கு கூட்டிட்டு போனால் ஜாலியா ஒரு குளியல் போடலாம்ல? "

எப்போதடா அவள் கேட்பாள் என்று காத்திருந்த மற்ற பெண்களும்

" ஆமாம் பாட்டி.. போலாம் போலாம் ... இதுவரை படத்துலேயே பார்த்தது... ப்ளீஸ் ப்ளீஸ் போலாம் " என்றனர் ..

" போகலாம் டா .. ஆனா அவங்க எல்லாரும்ம் ?? "

" ஐயோ அவங்க கிடக்குறாங்க பாட்டி ..சின்ன பசங்களா எல்லாரும் ? எங்க கிட்ட செல்போன் இருக்கு .. நம்மளை காணோம்னு அவங்க தேடினா  நமக்கு போன் பண்ணட்டுமே ..எங்களை கூட்டிடு போங்க ... "  - நித்யா ..

" நீங்க என்ன நினைக்கிறிங்க மா ? " என்றார் பாட்டி தனது மருமகள்களிடம் ..

" போலாமே அத்தை " என்று அவர்களும் சொல்ல, பெண்கள் அனைவரும் பம்பு செட்டுக்கு சென்றனர் பாட்டியுடன் ..

அங்கு நடக்கும் லூட்டிகள், சேஷ்டைகள் மற்றும் நம்ம அர்ஜுன்- கிருஷ்ணாவின் ப்ளான் இதையெல்லாம் சுவைபட எழுத விரும்புகிறேன் .. ஆனா எனக்கு இன்னைக்கு பரிட்சை இருக்கு .. நேரம் போதவில்லை சோ அடுத்த வாரம் அவர்களின் சந்தோஷக்  கடலில் நாமளும் மூழ்கி போவோம் .... லைட்டா திட்டிட்டு என் எக்ஸாம் கு  விஷ் பண்ணுங்க நண்பர்களே :)

தொடரும்

Episode # 22

Episode # 24

{kunena_discuss:734}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.