(Reading time: 41 - 81 minutes)

 

"நான் எதுவுமே பண்ணல ..அதுக்குள்ள நீ பாட்டுக்கு முகம் சிவந்தா என்ன அர்த்தம் "

" ம்ம்ம்ம் இன்னும் ஒரு வார்த்தை நீங்க ஏடா கூடாமா பேசினா நான் ஓடி போயிருவேன்னு அர்த்தம் " என்றாள்..அவளின் முகத்தை பார்த்து ரசித்து சிரித்தவன் அவளுக்கு மீண்டும் கார் கதவு திறந்து அமரவிட்டு பிறகு காரை எடுத்தான் ..

" பாட்டு  போடவா செல்லம் " என்றவன் சாதாரணமாய் கேட்டாலும்,  அதில் ஏதோ இருக்கிறது என்று நம்பியவள்

" இல்லை வேணமே " என்றாள்...

" நீ வேணாம்னு சொன்னாதான் ப்ளே பண்ணும்னு நெனச்சேன் டார்லிங் .. " என்றவன் கொஞ்சம் இடைவெளி விட்டு " உனக்கிந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் .. இது நம்ம பாட்டு .. நமக்கு மட்டும் சொந்தம் " என்றான் .. ( அது சினிமா பாட்டுத்தான் .. ஆனா இவங்களே சொந்தமா உரிமம் வாங்கிக்கிட்டாங்க .. உரிமையை தந்தது காதல்தான் ! சரி வாங்க அப்படி என்ன பாட்டு கேட்போம் )

வைத்த கண் வைத்தது தானோடி அப்படியே நிற்கின்றாய்

தைத்த முள் தைத்தது தானோடி சொக்கியே போகின்றாய்

அர்ஜுனன் உன்னை பெண் பார்க்க

அவசரம் நீயும் பூ பூக்க

யுத்தங்கள் செய்திட யுவதியும் வந்தாளே ...... 

அது அவர்களின் பாடல்தான் .. இதோ அவளின் அர்ஜுனனும் வந்துவிட்டானே பெண் பார்க்க மட்டுமல்ல, அவளை தன்னோடு அழைத்து செல்லவும்தான்... அவள் இனிய கற்பனையில் ஆழ்ந்தாள் .. அவள் முகம் பார்த்த அர்ஜுனனுக்கு அது புரிந்துவிட, அவளின் கற்பனையை கலைக்காமல் அமைதியாய் காரோட்டினான் .. பாடல் தொடர்ந்து .. அவளின் கற்பனை அந்த அழகிய தோட்டத்தில் நின்றது .. வெள்ளை ரோஜாக்கள் எங்கும் பூத்திருக்க, இளஞ்சிவப்பு நிற புடவையில் அவளும் அவளுக்கும் ஜோடியாய் அர்ஜுனனும் அங்கு இருந்தான் .. காரில் இருந்தாலும் கற்பனையில் அவள் எங்கோ பறந்து கொண்டு இருந்தாள்.... பாடல் தொடர்ந்தது

யாரோ எந்த மனசின் நடுவிலே ரோஜாத்தோட்டம் வைத்தது

ஊற்றுப்பார்த்தேன் அந்த பகுதியில் உந்தன் கால் தடம்

யாரோ எந்தன் உயிரின் அறையிலே கவிதை புத்தகம் படித்தது

தேடிப்பார்த்தேன் அந்த இடைத்திலே உன் வாசனை

உன் பேரழகு கொஞ்சம்  உன் பேச்சழகு கொஞ்சம்

என் பருவத்திற்குள் வந்து என்னை பஸ்பம் செய்யுதடா

உன் தன்னழகு கொஞ்சம் உன் முன்னழகு கொஞ்சம்

என் இரவுக்குள்ளே வந்து  துளியாய் இறங்கி கடலாய் மாறியதே

தந்திரா கண்களில் என்னென்ன தந்திரம் செய்தாயோ

சுந்தரா பெண்ணிவள் நெஞ்சுக்குள் பத்திரம் ஆனாயோ

இதழோரம் புன்னகையை தவழ விட்டு கற்பனையில் லயித்திருந்தாள் சுபத்ரா .. சிவந்த வலது கன்னங்களோ  அர்ஜுனனை " இன்னும் என்னடா பார்த்து கொண்டே இருக்கிறாய் " என்று எள்ளி நகையாடியது .. இனியும் தாங்காதுடா சாமி என்று காரை சடன் ப்ரேக் போட்டு அவன் நிறுத்த பதட்டத்தில் அவன் கரத்தை பற்றி கொண்டாள் சுபத்ரா..

" என்னாச்சு அஜ்ஜு " என்று கேட்டவளை அழுத்தமாய் பார்த்தான் அவன் .. என்ன மாதிரி பார்வை இது ?? என்னவனே உன் காந்தப்பார்வையிடம் சொல்லிவிடு நான் ஏற்கனவே உன் பால் ஈர்க்கப்பட்டுவிட்டேன் என்று  என்று மனதிற்குள் சொல்லி கொண்டவள் தலை குனிய அவளது முகத்தை ஏந்தி கன்னங்களில் இதழ் பதித்தான் அர்ஜுனன் .. பாடல் தொடர்ந்தது...

இந்த சிரிப்பு இந்த சிரிப்புதான் என்னை கொள்ளை கொண்டது

இந்த கண்கள் இந்த கண்கள்தான் கலகம் செய்தது

இந்தச் செழுமை இந்தச் செழுமைதான் எந்தன் அணுவில் நுழைந்தது

இந்தச் சிணுங்கள் இந்தச் சிணுங்கள் தான் வயசை ஈர்த்தது

நீ முத்தம் மொத்தம் வைத்தே என் கன்னம்  பள்ளம் ஆச்சு

உன் அத்துமீறல் பார்த்து என் பெண்மை திண்மை ஆச்சு

நீ என்னைத் தீண்டித் தீண்டி என் ஸ்வாசப்பையில் ஏனோ

ஒரு வெப்பப் பந்து நின்று மெதுவாய் மெதுவாய் சூடாக சுழலுதடி

" தந்திரா கண்களில் என்னென்ன  தந்திரம் செய்தாயோ

சுந்தரா பெண்ணிவள் நெஞ்சுக்குள் பத்திரம் ஆனாயோ " என்று வாய்விட்டு பாடினாள்.... பதத்தில் அவள் நெற்றியில் பூத்த வியர்வை துளிகளைத் துடைத்தவன்

" வெண்ணிலா வேர்க்குது பாரம்மா

வேர்வரை பூக்குது ஏனம்மா?

சிப்பியில் சமுத்திரம் சிக்கியது என்னம்மா ? " என்று பதிலுக்கு பாடினான் .. அன்பினால் இணைந்த இதயங்கள் இரண்டும் மன நிறைவோடு பயணத்தை  தொடர்ந்தனர் ..

" என்னங்க "

" என்ன வள்ளி "

" நீங்க எடுத்த முடிவு எனக்கு புரியல "

" முதல் விஷயம் கல்யாணத்துக்கு இன்னும் மூணு நாளிலே ஏற்பாடு பண்ணி முடிக்க முடியுமா ? "

" அட கிறுக்கு பய புள்ள "

" இப்போ எதுக்கு என் அப்பாவை திட்டுறிங்க ? "

" ஹா ஹா .. லட்டு மாதிரி பொண்ணை தந்துருக்காரு அவரை நான் ஏண்டி திட்ட போறேன் " என்றபடி தாத்தா பாட்டியை காதலை பார்த்தார்..

" ம்ம்ம்கும்ம் இன்னும் 3 நாளுல உங்க பேரனுக்கு கல்யாணம் ஞாபகம் இருக்கா ? ...மனசுல இன்னும் ஜெமினி கணேசன்னு நெனப்புதான் உங்களுக்கு "

" அப்போ உன் கண்ணனுக்கு நான் ஜெமினி கணேசன் மாதிரி இப்போ தெரியுறேன்னா வள்ளி "

" அய்யா என் சாமி .. தப்பா கேட்டுபுட்டேன் .. நான் கிறுக்கு பய மவதான .. இப்போவாச்சும் எனக்கு பதில் சொல்லுங்க "

" வள்ளி , இந்த ஊருக்கும் நமக்கும் எவ்ளோ உறவுன்னு உனக்குன்னே தெரியும் .. நமக்கொரு சின்ன காய்ச்சல்னா கூட பெரியமுத்து தொடங்கி சின்ன முத்துவின் பேரன் வரை எல்லாரும் வீட்டு வாசலிலே நிப்பானுங்க .. அப்படி இருக்கும்போது நம்ம வீட்டு புள்ளங்களுக்கு கல்யாணம்னா தெரியாத மாதிரி இருக்க இதென்ன பட்டணத்து வாழ்க்கையா ? கல்யாணம் தேதி குறிச்சிட்டு வெளில வரும்போது இந்த சங்கரன் பையனை பார்த்து நல்ல விஷயத்தை சொன்னேன் .. அய்யா கவலைய விடுங்க நம்ம பயங்க எல்லாரையும் அனுப்பி வைக்கிறேன் கூட மாட உதவட்டும் இது எங்க அய்யா வீட்டு கல்யாணம்னு சொல்றானவுங்க ... அப்படி இருக்கும்போது நமக்கென்ன கவலை " என்று  மீசையை முறுக்கி கொண்டார் ..

அவரின் தோரனையை பாட்டி மனதிற்குள் ரசித்தாலும் வெளியில் போலியாய், " நீங்க சொன்னா சரிதான் சாமி .. " என்றார் ..

" ஹா ஹா ஹா " - என பெரிதாய் சிரித்தார் தாத்தா ..

" ரெண்டு கேள்வி கேட்கனும்னு சொன்னேனே ? "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.