(Reading time: 41 - 81 minutes)

 

" டியே ஏன் இப்படி அடம் பிடிக்கிற ? " - சிவகாமி

"  ச்ச சின்னப்பொண்ணை ஏன் திட்டுற சிவா ? " என்ற அபிராமி

" செல்லம் மூணு பெரும் ஒரே டிசைன்ல வெவ்வேறு கலர்  எடுத்துக்கங்க ..சரியா ? " என்று அந்த பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்தார் .. இரண்டு மூன்று புடவைகளுக்குப் பிறகு அந்த கடைக்காரர் காட்டிய முகுர்த்தப் பட்டு  அனைவருக்கும் பிடித்துப் போனது .. மணமகன் மணமகளின் கை பற்றி இருப்பது போல நெய்து, சின்னஞ்சிறு மணிகள் அங்கங்கு கோர்த்து  மிக அழகாக இருந்தது  அந்த புடவை .

மீராவிற்கு பச்சை மற்றும் நீல நிறம் கலந்த புடவையை எடுத்தான் கிருஷ்ணன்.

" உனக்கிது ரொம்ப நல்ல இருக்கும் கண்ணம்மா  " என்றான் காதலுடன் .. சுற்றி அனைவரும் நிற்பதை பார்த்தவள் வெட்கப் புன்முறுவலுடன்  தலைகுனிந்தாள்....

" பிடிச்சிருக்கா? " என்று விடாமல்  அவன் கேள்வி கேட்க, அவளை காப்பாற்ற வந்தான்  சஞ்சய் ..

" டேய் பாவம்டா என் தங்கச்சி .. இப்படி எல்லாரு முன்னாடியும் கேட்டு கேட்டு அவளை நிமிர்ந்து பார்க்க விடாம கழுத்து வலி வர வெச்சிடுவ போல .. பிடிக்கலன்னா  இந்நேரம் சொல்லி இருப்பாளே " என்று உரிமையை பேசியவனை நிமிர்ந்து பார்த்தாள் மீரா..

" என்ன தங்கச்சி இப்படி பார்குற ? உன் பாஸ் சஞ்சய் வேற ,,, இந்த சஞ்சய் வேற " என்று நாடகபாணியில் சொன்னவனை பார்த்து இதமாய் சிரித்தாள் மீரா .. புவனாவின் கண்களோ சஞ்சயின் புன்னகையை படமெடுத்து கொண்டிருந்தது .

அங்கு வந்த நித்யா

" கிருஷ்ணா அண்ணா, நானும் நீங்க என்  பக்கம் திரும்புவிங்கன்னு பார்த்தா நீங்க இந்த நீலாம்பரியை விட்டு நகர மாட்டிங்க போல " என்று அலுத்துக்  கொண்டாள் நித்யா ....

" ஆஹா ... யாரு செல்லம் சொன்னது ..என் தங்கச்சியை நான் எப்படி மறப்பேன் " என்றான் கிருஷ்ணன் ..

" இல்ல இல்ல நீங்க என்னை மறந்துட்டிங்க "

" அப்படியா ? எங்க இந்த புடவையை பார்த்துட்டு சொல்லு பார்ப்போம்"

அவன் காட்டிய புடவை கிட்ட தட்ட மீராவின் புடவையின் கலரின் இருந்தது ... திருமண மேடையை தானும் மீராவும் ஒரே நிறத்தில் புடவை அணிய வேண்டும் என்று என்றோ ஒருநாள் பேச்சின் ஊடே  நித்யா சொல்லி இருந்தாள்..அதை ஞாபகம் வைத்து  அவளுக்கும் அதே மாதிரி புடவை வாங்கி இருந்தான் .. கிருஷ்ணனின் அன்பில் நெகிழ்துதான் போனாள் நித்யா ..

" சரி சரி ... ஜானகி உனக்கு இந்த சந்தனமும் நீளமும் சேர்ந்த நிறம் நல்ல இருக்கும் நீ என்ன சொல்லுற ரகு ? " என்று இருவரையும் கேட்டார் அபிராமி ..

" நானும் அதையேதான் நெனச்சேன் மா " என்றவனப் பார்த்து ":சரியான அம்மாப் புள்ள"

 என்றார் சூர்யா ..

" சுபி உனக்கு இந்த ஊதா கலர் ரொம்ப அழகா இருக்கும் " என்றார் பானு .. மலர்ந்த முகத்துடன் அர்ஜுனனை அவள் பார்க்க " என் ஆசையும் அதுதான் இளவரசியே " என்று கண் சிமிட்டினான் ..

இப்படியாய் அனைவரும் தங்களுக்கு பிடித்தவைகளை வாங்கிவிட்டு, வீடு திரும்ப அங்கு தாத்தாவின் சிரிப்பு சத்தம் வாசல் வரை கேட்டது ..

" நல்லவேளை நீங்க சென்னைக்கு வரல தாத்தா " -மது

" ஏன் ஹனி ? "

" பின்ன அப்பறம் பொண்ணுங்க எல்லாம் உங்க பின்னாடி தான் கியூ ல நிற்பாங்க"

" ஹா ஹா ஹா .. வள்ளி கேட்டியா ?? "

" அந்த பொண்ணே ஏதோ விளையாட்டுக்கு சொல்லுது " 

இவர்களின் குரல் கேட்டதும் பெரிதாய் புன்னகைத்தான் ரகுராம்....

" அண்ணா நம்ம ஆபீஸ் ஏஞ்சல்ஸ்  எல்லாரும் வந்துட்டாங்க போல " என்று கிருஷ்ணனிடம் சொல்லிவிட்டு வீட்டினுள் நுழைந்தான் .. அவனுடன் முகமெல்லாம் புன்னகை பூசிக்கொண்டு ஜானகியும் வந்தாள்... அவளை கண்டதுமே

மீனா, கீர்த்தனா, மது, ப்ரியா, மலர் ஐவரும்

" மணமகளே மருமகளே வா வா

உன் வலது காலை எடுத்து வைத்து வா வா

குணம் இருக்கும் குலமகளே வா வா

தமிழ் கோவில் வாசம் திறந்து வைத்தோம் வா வா " என்று பாடினர் .... ஏற்கனவே திருமணக் கலையில் பிரகாசித்த அவள் முகத்தில் இப்போது வெட்கம் குடிக்கொண்டது.

" ஹே போதும்பா .... என் ஆளை இப்படி ஓட்டதிங்க .." என்று அவளுக்காக பேசினான் ரகுராம்..

" ஹலோ பாஸ் நீங்க சென்னை ல தான் பாஸ் .. அங்கதான் நாங்க உங்க பேச்சை கேட்கணும் .. " - கீர்த்தனா

" அப்போ இங்க ? "

" இங்க நாங்க எங்க தாத்தாவின் செல்லம் ...." என்று தாத்தாவின்  பக்கம்  அமர்ந்துக் கொண்டாள் மது ..

" ஹப்பாடா .. நமக்கு இன்னும் ஆள் சேர்ந்துருச்சு பாரு சுபி " என்றபடி சுபத்ராவுடன் அங்கு வந்தாள் நித்யா .. பெண்கள் அனைவரும் ஒரு கூட்டணியாய் நின்று பேசிகொண்டிருக்க, நித்யாவை அழைத்தான் கார்த்தி... அவள் வேண்டுமென்றே கேட்காததைப் போல நடிக்க கார்த்தி சஞ்சயிடம்

" அவசரப் பட்டுட்டேன் மச்சான் " என்றான்

" ஏன் கார்த்தி ? "

" இல்ல இவ்ளோ பொண்ணுங்க இங்க வரும்னு தெரிஞ்சிருந்தா கொஞ்சம் லேட்டாக நித்தி கிட்ட ப்ரபோஸ் பண்ணிருக்கலாம் " என்றான் ..

" ஹ்ம்ம்ம்ம் ஆமா மச்சான் " என்று சிரித்த சஞ்சயை புவனா முறைத்து கொண்டு நின்றாள்... " ஆஹா மி டியர் மாதர் தெரெசாவுக்கு எங்கேயோ பல்பு எரியுதே " என்று மனதிற்குள் துள்ளினான் சஞ்சய் ..

நித்யாவோ " கார்த்தி உன்கிட்ட பேசணுமே " என்று சொல்லிக் கொண்டே அவனைத் துரத்தினாள்... இங்கு நம்ம வாலுங்க எல்லாரும் கூட்டணி அமைச்ச நேரம், மீரா கிருஷ்ணாவை பாப்போம் வாங்க ...

" மித்ரா "

" என்னடா ? "

" கார் சத்தம் கேக்குது .. அவங்க வந்துட்டாங்க போல ,.. வா ஹெல்ப் பண்ணலாம் " என்றபடி அவளுடன் வெளி வந்தான் ஷக்தி .... காரிலிருந்து இறங்கிய மீரா, ஷக்தியை பார்த்த ஆனந்தத்திலும் மகிழ்ச்சியிலும்  அப்படியே நின்றாள்.... ரகு- ஜானு- சுபி- நித்தி -கார்த்தி- சஞ்சய் அனைவரும் நம்ம பஞ்ச பாண்டவர் அணிகளின் குரல் கேட்டு உள்ளே போக கிருஷ்ணன் அவர்கள் இருவரையும் அனைவரிடமும் அறிமுகப்படுத்தினான் ..

மீரா இன்னமும் அப்படியே நிற்க புன்னகை மாறாமல் இருவரும் அவள் பக்கம் செல்ல , கிருஷ்ணன் மீராவை தோளோடு அணைத்து இயல்புக்கு கொண்டு வந்தான் .

" கிருஷ்ணா .. ஷக்தி .. எப்படி ? "

" ஹா ஹா ரிலாக்ஸ் செல்லம் .. நான்தான் ஷக்தி இங்க வர ஏற்பாடு பண்ணினேன் .. எப்படி நம்ம சர்ப்ரைஸ் ? " என்று கண் சிமிட்டினான் ..

" உங்களை  நான் அப்பறமா பார்த்துக்குறேன் " என்றவள் அவனை காதலுடன் மிரட்டினாள்...

" ஹை மீரா ... "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.