(Reading time: 46 - 92 minutes)

 

" றவுன்னு இருந்தா பிரிவும் இயல்புதானே புள்ள ... அதுக்குன்னு நாம என்ன விலகியா இருக்க போறோம் ? எனக்கு நம்பிக்கை இருக்கு நம்ம பேரன்  பேத்தியெல்லாம் சீக்கிரம் நம்மளை பார்க்க வருவாங்க பாரேன் .. நாமும் அர்ஜுன் தம்பி சொன்ன மாதிரி ஒரு  தடவை அங்க போய்ட்டு வருவோம் ..  பெரிய மருமக வேற இங்க வந்து இருக்க போறதா  சொல்லி இருக்காளே "

" ஆமாங்க ... நானே எதிர்பார்கல .. எப்படி சரியான முடிவெடுத்து டக்குனு சொல்லிட்டா பார்த்திங்களா ?  "

" உன் மருமகளாச்சே உன்னை மாதிரிதான் புத்திசாலியா இருப்பா " என்றார் தாத்தா காதலுடன் .. அவரின் காதல் பார்வை பாட்டியின் மனநிலையை மாற்ற உதவியது ..

" ஐயோ போதும் பார்த்தது .. துடைச்சிகொங்க வழியுது "

" அதையும் நீயே துடைச்சிவிடு வள்ளி "

" போங்க " என்று சொல்லி சிரித்துக் கொண்டே பாட்டி முன்னே நடக்க, அவரை தொடர்ந்து சென்றார் தாத்தா ...

சூர்ய  பிரகாஷ் , சந்திரபிரகாஷ் , ஆகாஷ் , கார்த்தி அனைவரும் சென்னையில் ரிசப்ஷன் வைப்பதற்கான ஏற்பாடு  தொடர்பாக பேசிக்கொண்டிருந்தனர் . சென்னை சேர்ந்ததுமே, அர்ஜுன் சுபத்ரா பானுமதி அர்ஜுனனின் வீட்டிற்கு செல்ல , மற்றவர்கள் சுபத்ராவின் வீட்டிற்கு   சென்றனர் ... புவனாவை தானே அழைத்து செல்வதாக சொன்னான் சஞ்சய் ..

ஞ்சயின் காரில்,

" ஏதும் மௌன விரதத்தில் இருக்கிங்களா புவனா ?" என்று பேச்சை ஆரம்பித்தான் சஞ்சய் ..

" ... "

" ஏங்க  உங்களைதான் "

" ஹான் ... ஆங் .. என்ன கேட்டிங்க ?"

" சாரி ஏதோ யோசனையில் இருக்கீங்க போல, டிஸ்டர்ப் பண்ணிட்டேனோ  ? " என்றான் உண்மையான வருத்தத்தில் .. அவளோ ரகசியமாய் சிரித்துக் கொண்டாள் ..

" என்ன சிரிப்பு "

" ம்ம்ம்ம் அப்படில்லாம் ஒன்னும் இல்லையே " என்றாள்  கண்களில் சிரிப்புடன் ....

" அய்யோ இப்படி சிரிச்சே மயக்குறாளே ..மச்சான் நீ காலம்பூரா இப்படி சைட் அடிச்சுகிடுதான் வாழ போறியா ? டக்குனு மானே தேனே பொன்மானே போட்டு உன்னோட மனசை சொல்லிடுடா " என்று குரல் கொடுத்தது அவனது மனசாட்சி ....

" புவனா "

" ம்ம்ம் என்ன ஜெய் ??"

"அடுத்து என்ன பண்ண போறீங்க ??" என்று கேட்டான் சஞ்சய் .. அவனையும் மீறி அவனது குரலில் நடுக்கமும் ஆர்வமும் இருந்தது .. அதை புவனாவும் கவனித்தாள் ..

அவனின் கேள்வியின் அர்த்தம் புரியாத அளவு அவள் சிறு பெண் இல்லை .. எனினும் விளையாட்டாய்

"  வீட்டுக்கு போய்ட்டு நல்லா சாப்பிடனும் .. அதுக்கு பிறகு ஜோரா குட்டி தூக்கம் போடணும் .. அதுக்கு  பிறகு பசங்களுக்கு கொஞ்சம் பர்சேசிங் முடிச்சிட்டு பிருந்தாவனம் போகணும் " என்றாள் ..

"உவ்வ்வ்வ்வ்வ்வ் " என்று பெருமூச்சு விட்டான் ..

" என்னாச்சு ஜெய் ??"

" ம்ம்ம்ம் .... ஒன்னும் இல்லை .. போர் அடிக்கிது பாட்டு போடவா ?" என்றான் கடுப்பாய்

" இது உங்க கார் தானே ? இல்ல திருட்டு காரா ?"

" அடிப்பாவி " என்பது போல அதிர்ச்சியாய்  பார்த்தவன் , " அடடே என் காருதான்மா .. எதுக்கு இந்த சந்தேகம் " என்றான் ..

" பின்ன சாங் போடவான்னு என்னை கேட்குறிங்க ?"

" நல்ல ஜோக் புவனா , அப்பறமா மறக்காமல் சொல்லுங்க சிரிச்சிடுறேன் .. " என்றபடி அவனுக்கு பிடித்த அந்த சிடியை போட்டான் .. பாடகர் ஹரிஹரனின் இருகுரல் பாடல்கள் என்றால் அவனுக்கு மிகவும் பிகவும் பிடிக்கும்.. அவனுக்கே தெரியாத விஷயம் அவனது புவனாவிற்கும் ஹரிஹரனின் குரலில் ஒரு மயக்கம் தான் என்பது .. !

நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும்

அது ஏனோ

சிரித்தால் நெஞ்சுக்குழி அடைக்கும்

அது ஏனோ

குளிரில் எனகொரு புழுக்கம்

அது ஏனோ

வெயிலில் எடுக்குது நடுக்கம்

அது ஏனோ

ஏனோ ஏனோ ஏனோ ஏனோ

காதலென்று கவிகள் சொல்வார்கள்

அதுதானோ

கிட்ட தட்ட அதே நடுக்கத்தில் தான் இருந்தான் சஞ்சய் . பயணக் களைப்பும்  மீறி ஒளி  வீசும் அவளது முகமும் , கண்களை மூடி சாய்ந்தவாறு இடது கரம் மீது அவள் வலது கரத்தால் தாளம் போடும் காட்சி அவனை மயக்கியது.  அவன் நெஞ்சத்தில் காதல் அலைகள் கொந்தளித்தது .. அவளை அழைத்து வரும்போது அடங்கியிருந்த மனம் இத்தனை நாட்கள் ஒன்றாய் செலவளித்ததாலோ என்னவோ அவளை அழைத்து செல்லும்போது துள்ளி தறிகெட்டு ஓடியது .. நெஞ்சத்தில் ஆயிரம் வார்த்தைகள் இருந்தும் அவன் பேசாமல் இருந்தான் .. கை தொடும் தூரத்தில் அவள் இருந்தும் கண்ணியம் அவனது காதலுக்கு  அணைப்போட்டது ..

பால் மடியில் வான் நிலவில் தீ வடிவதேனோ

ராவேழுதும் என் கனவில் தேன் வடிவதேனோ

மொழியை கண்கள் வெறுக்கும் இது ஏனோ

வார்த்தைகள் நாவில உடையுதே ஏனோ

மண்ணில் நான் வாழ்வதே மறந்ததே ஏனோ

அஞ்சுக்கும் ஆருக்குமே இடைவெளி ஏனோ ஏனோ

நெஞ்சுக்கும் உதடுக்குமே தூரங்கள் ஏனோ ஏனோ

சட்டென பாடலை நிறுத்திவிட்டான் சஞ்சய் .. மெல்ல கண்விழித்தாள்  புவனா ..

" என்னாச்சு சஞ்சய் ??"

" ஹான் ... ம்ம்ம்........... ஆங் .. போன் .. போன் பண்ணனும் "

" போனா ?? ட்ரைவ்  பண்ணும்போது யாருகிட்ட பேசப்போறிங்க ? சரி வண்டியை ஓரமா நிறுத்துங்க "

" இல்ல புவனி .... நான் அப்பறமா பேசிக்கிறேன் " என்றவன் அப்போதுதான் அவன் அவளை  மனதில் செல்லமாய் " புவனி " என்று அழைப்பதை சொல்லிவிட்டான் என்பதை உணர்ந்தான் .. அவனின் முகமே அனைத்தையும் காட்டிகொடுக்க,"  முதலில் காரை நிறுத்துங்க"  ஜெய் என்றாள்  புவனா தீர்மானமான குரலில் ..

" போச்சுடா .. " என்று முணுமுணுத்துக் கொண்டே காரை நிறுத்தினான் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.