(Reading time: 46 - 92 minutes)

 

" துக்காகத்தான் நாம இங்க வந்தோம் " என்றான்

" என்ன சொல்றிங்க கண்ணா ? " என்றாள்  விழிவிரிய ....

" சொல்றேண்டா " என்று சொல்லி உண்மையை சொல்ல ஆரம்பித்தான் கிருஷ்ணன் ..

சில மாதங்களுக்கு முன்பு, மீராவை பற்றி முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லி கிருஷ்ணனை வீட்டிற்கு அழைத்தார் அபிராமி .. அவருடன் சந்துருவும் இருந்தார் ...

" அப்பாவும் சித்தியும் எங்கம்மா ? "

" சிவா பானு வீட்டுக்கு போயிருக்கா.. அப்பா வெளில போயிருக்கார் "

" கிருஷ்ணா .. "

" சொல்லுங்கம்மா "

" மீராவை பத்தி எனக்கு முழுசா எல்லாம் தெரிஞ்சிடுச்சு ... உன் சித்தப்பா சொல்லிட்டார்.. நீயே என்கிட்ட சொல்லி இருக்கலாமே டா... இவ்வளவு பாரத்தை நீ எப்படி கண்ணா மனசுக்குள்ளயே வெச்சிருந்தே?  அம்மா உன் பக்கத்துலேயே தானே இருந்தேன் ? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லனும்னு உனக்கு தோணலையா ? மீராவும் எத்தனை நாள் தனியா மனசுக்குள்ளயே போட்டு மருகிட்டு இருந்திருப்பா ? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாமே கண்ணா  " என்றவரின் குரல் சற்று நடுங்கியது .. கிருஷ்ணனோ சொல்ல முடியாத மனநிலையில் அவன் தாயின் மடியில் முகம் புதைத்து அழுதான் ..

" கிருஷ்ணா.... இங்க பாரேன்..... டேய் ..... என்னடா? "

" அம்மா .... அம்மா... அவ பாவம்மா ...... ஏற்கனவே நொந்து போயிருக்கா "

" அவ மட்டும்தானா ? அப்போ நீ ? " என்றார் அபிராமி

ஆமாம் .. வலி என்பது இருவருக்கும் பொதுவானது தானே .. அவளின் கண்ணீரை மடிதாங்க அவன் எப்போதுமே இருந்தான் . அவள் கோபத்தில் திட்டினாலும் கூட அவன் தேடி தேடி வந்து அவளது கண்ணீரை துடைத்தான் .. ஆனால் அவன் ? அவனுக்கும் ஒரு மழலைக்கு தந்தையாக வேண்டும் என்ற ஆசை இருக்காதா ? அவனும் அந்த சம்பவத்திற்கு முன்பு ஒரு அழகான வாழ்க்கையை கற்பனை செய்து வைத்திருப்பான் அல்லவா ? அவனுக்கும் வேதனை இருக்கும் தானே ?  என்னதான் தைரியமாய் இருக்க முயர்ச்சிதாலும் அவனுக்கும் உணர்வுகள் இருக்கிறதே ? இன்று அவன் தாய் கேட்ட கேள்வியில் மொத்தமாய் உடைந்து அவர்  மடியில் சாய்ந்து அழுதான் அவன் .....

" அம்மா "

" சொல்லு கண்ணா "

" எனக்கு பிள்ளை வரம்தான் இல்லை .. அட்லீஸ்ட் மீராவாவது எனக்கு வேணுமம்மா .. குழந்தை பிறக்காதுன்னு ஒரே காரணத்துக்காக அவளை நிராகரிச்சுடாதிங்க .. அவதான் என் வாழ்க்கை அம்மா .. அவளுக்கு அப்படி நடந்ததுக்கு எங்க காதல்  தானே காரணம் ? எங்களுக்காகதானே அவ அன்னைக்கு கோவிலுக்கு ? " என்றவன் பேச முடியாமல் கேவினான்

" " நான் மீராவை எப்படி வேணாம்னு சொல்லுவேன் கண்ணா ? அதே மாதிரி உனக்கு பிள்ளை இல்லனும் யாருடா சொன்னது ? “

" அம்மா ???"

" ஆமா கண்ணா , மீராதான் என் மருமக .. நிச்சயமா இந்த வீட்டுக்கு வாரிசு வரும் .. நாம யாரும் வருத்தபடாமல் சந்தோஷமாகவே அந்த நாளுக்காக காத்திருப்போம்”

" எப்படிம்மா ? "

" ஏண்டா பெற்றாதான் பிள்ளையா ? "

அன்று கிருஷ்ணன் மீராவிடம் கேட்ட அதே கேள்வி .. விழிமின்ன தாயாரை பார்த்தான் ..

" ஏண்டா ... அந்த குழந்தை உடம்பில உன் ரத்தம் ஓடினாத்தான் நமக்கு வாரிசா ? நீ வளர்த்தா அது நம்ம பிள்ளை இல்லன்னு போயிடும்மா ? "

" அம்மா ... அப்போ உங்களுக்கு சம்மதமா ? "

" மனபூர்வ சம்மதம்  .... ஆனா ........"

" ஆனா ?  "

" உங்க பையன் வளர்ப்பு மகன்னு இனிமேல் யாருக்கும் தெரிய கூடாது ....  நீயே பொறுமையா யோசிச்ச நான் ஏன் இந்த முடிவெடுத்து இருக்கேன்னு புரியும் . இருந்தாலும் என் முடிவை உனக்கு விளக்கி சொலவேண்டிய கடமை எனக்கும் இருக்கு "

"…."

" மீராவுக்கு இனி நாமதான் எல்லாமே .. அவ குடும்பத்துல உள்ளவங்களே அவளை பரிதாபமாய் பார்த்தா அவளால் தாங்க முடியுமா ?”

“…”

“ இரண்டாவது நாளைக்கு வாய் வார்த்தைக்கோ அல்லது விளையாட்டுக்கோ கூட அவளால் குழந்தை பெற முடியாதுன்னு யாரும் சொல்ல கூடாது .. “

“….”

“மூணாவது, அந்த குழந்தை என்ன பாவம் பண்ணிச்சு ? தான் ஒரு ஆனாதை .. வளர்ப்பு பிள்ளைன்னு தெரிஞ்சுக்குரதுக்கு??? "

" அம்மா " என்று அவரை கட்டியணைத்தான் கிருஷ்ணன் ..

அப்போதுதான் சந்துரு பேசினார் ..

" கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் பிறகு நீங்க மலேசியாவில் இருங்க கிருஷ்ணா .. அதுக்கு நானே ஏற்பாடு பண்ணுறேன் .. பத்து மாசம் அங்கேயே இருங்க .. மீரா கர்ப்பமா இருக்கான்னு இங்க போன் ல சொன்னா போதும் ..இப்போதைக்கு டாக்டர் ட்ரேவல் பண்ண கூடாதுன்னு சொன்னதா சொல்லிக்கலாம் .. மிச்சத்தை நானும் அண்ணியும் சமாளிச்சுப்போம் .. நீங்க அங்க நல்ல சந்தோஷமா இருங்க.. மீராவுக்கு மலேசியா சுத்தி காட்டு .. சிங்கப்பூர் போறதுனாலும்  போயிட்டு வாங்க ... சரியா பத்து மாதம் பிறகு உங்க குழந்தையோடு வாங்க " என்றார் இலகுவாய் ..

எத்தனை பெரிய விஷயம் .. ஆனால்  இலகுவாய் சொன்னார் சந்துரு .. " உங்க குழந்தை " என்று அவர் கொடுத்த அங்கீகாரமே அவனுக்கு யானை பலத்தை தந்தது .. அவனது தாயாரின் முகத்தை பார்த்தான் .. கம்பீரமும் தெளிவும் அவர் முகத்தில் தெரிந்தது .. இதுதான் சரியான முடிவு என்ற தேஜஸ் தெரிந்தது .. அவர்களின் ஆலோசனைக்கு தலையசைத்தான் கிருஷ்ணன் ..

 ஜானகி அபிராமியிடம் அன்று காலை  அந்த செய்தியை சொன்னதுமே  கிருஷ்ணனிடம்  இதைதான் பேசினார் .. இங்கு கிருஷ்ணா உண்மையை சொன்ன அதே நேரம், அபிராமி பூஜை அறையில் கண்ணீருடன் அமர்ந்திருந்தார் ..

" கடவுளே எல்லாருக்கும் நன்மையை செய்யுறேன்னு நான் என் மருமக மனசை கஷ்டப்படுத்திட்டேனோ ? இன்னைக்கு மீரா  ஏர்போட்டில் என்னை பார்த்த பார்வை இருக்கே ?  என்னை போக விடாதே என்று சொல்லாம சொன்னாலே .. அன்னைக்கு சுபாவை பிரிஞ்சேன் .. இன்னைக்கு மீரா .. ஏன் ??? நான் தப்பு பண்ணிட்டேனா ? " என்று இறைவனிடம் கேட்டார் ..

இங்கோ , கிருஷ்ணன் மீராவின் முகத்தையே பார்த்தான் .. அவனால் அவளின் முகபாவனையை படிக்க முடியவில்லை ..

" மீரா ..."

"...."

" மீரா பேசுடா "

" ம்ம்ம் அத்தைக்கு போன் போட்டு தாங்க "

" மீரா ... அம்மா நம்ம "

" தாங்கன்னு சொன்னேன் .. " அவளின் குரலுக்கு இசைந்து போன் போட்டான் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.