(Reading time: 46 - 92 minutes)

 

" கிருஷ்ணா நமக்கு குழந்தை " என்று ஏதோ சொல்ல வந்தாள் ..அவனோ " ஷ்ஷ்ஷ்ஷ் " என்று அவள் உதட்டில் விரல் வைக்க, அதை வலிக்காமல் கடித்தவள் மீண்டும் ஏதோ சொல்ல வாயெடுக்க இந்த முறை வேறு விதத்தில் அவளது பேச்சுக்கு முற்றுபுள்ளி வைத்து காதல் தேடலை தொடங்கினான் அவன் ..

( கு - ஜானகி - அர்ஜுனனின் வீட்டில் )

" என்னாச்சு அம்மா  ஒரு மாதிரி இருக்கீங்க ?" - ரகுராம்

" அதெல்லாம் ஒண்ணுமில்ல பா .. கொஞ்சம் தலைவலி " என்றார் பானு..

" அப்போ ஏன் இதெல்லாம் நீங்க பார்க்கறிங்க ? ஜானு எங்கடா இருக்க ? " என்று குரல் கொடுத்தான் ரகுராம் .. கிச்சனில் இருந்து வந்தவள்

" என்னங்க ஆச்சு ? " என்றாள்  ஜானகி ..

" அம்மாவுக்கு தலைவலிக்கிதாம் ... "

" அச்சோ .. ஏன் அத்தை அப்போ சிரமப்படுறிங்க  ? அவருக்கு நான் பரிமாருறேன் .. நீங்க வந்து படுங்க " என்றவளை  பார்த்து

" சரியா சொன்ன சகீ .. நீ அவங்களை ரூமுக்கு கூட்டிட்டு போ .. நான் இதோ வந்திடுறேன் " என்று எழுந்தான் ரகுராம் .. ஜானகி, பானுவை அவரது அறையில் படுக்க வைத்து தலைப்பிடித்து விட, அதற்குள் பால் காய்ச்சி தலைவலி மருந்துடன் அங்க வந்தான் ரகுராம் ..

" நீ ஏன்பா  இதெல்லாம் ??"

" அட விடுங்கம்மா .. அர்ஜுன் செஞ்சா ஏற்றுக்கொள்ள மாட்டிங்களா ?  " அவனது கேள்வியில் பெண்கள் இருவருமே நெகிழ்ந்தனர் ..

" அடடே என்னை லுக்கு விட்டது போதும் .. ஒழுங்கா தூங்கனும் .. நான் அப்பறம் வந்து பார்ப்பேன் " என்று அவரை செல்லமாய் மிரட்டி உறங்க வைத்துவிட்டு தன் மனைவியுடன் வெளியில் வந்தான் ரகுராம் ..

" ராம் நீங்க சாப்டலையா ? " என்று கேட்டுக்கொண்டே அவன் பக்கம் அவள் திரும்ப, அவனோ அவளை பார்வையால் அளந்தான் .. பிஸ்தா பச்சை நிற மைசூர் சில்க் புடவை கட்டியிருந்தாள்  அவள் .. புடவை தலைப்பையை  முன்புறம் இடையில் செருகி இருந்தாள் .. அதன் இடைவெளியில் லேசாய் தெரிந்த அவள் இடை அவனை ஏதோ செய்தது ..

" ராம் "

" ம்ம்ம் " என்றவன் அப்போதுதான் அதை கவனித்தான் ..

" அடியே " என்றான் சத்தமாய்

" என்னங்க ??"

"எத்தனை தடவை சொல்றது ? "

" என்ன ? "

" தலை குளிச்சியா இந்த ராத்திரி நேரத்துல ?"

" ஹ்ம்ம் ஆமா . "

" அப்படியே ரெண்டு போட்டா தெரியும் .. தலையை ஒழுங்கா துவட்டுன்னு சொன்னா கேட்குறியா நீ ?" என்று அதட்டினான் ... அவன் கோபமாய் அதட்டவும் அவள் அழகாய் சிரித்தாள் .. ரகுராமிற்குதான் தனது கோபத்தை இழுத்து பிடித்து நிறுத்த பெரும் பாடாய் இருந்தது..

" போ போயி ஹாலில் உட்காரு " என்றான் .. அவன் என்ன செய்ய போகிறான் என்று யுகித்தவள் ,

" அதெல்லாம் வேணாம் ராம் .. உங்களுக்கு இங்க எது எங்க இருக்குன்னு தெரியாது " என்றாள்  ..

" அதெல்லாம் நான் பார்த்துப்பேன் நீ போ " என்றான் .. அவளது கூந்தலை உலர்த்த சாம்பிரானி  போட்டு கொண்டு வந்தான் ரகு ..

" வா சகீ இப்படி உட்காரு " என்று அவளை அமரவைத்து பொறுமையாய் அவளின் நீண்ட கூந்தலை உலர்த்தினான் ..

" ராம் .. "

"ம்ம்ம்ம் "

" எனக்காக ஒரு பாரதியார் கவிதை சொல்லுங்களேன் "

" இந்த மாதிரி நேரத்துல கேட்டு வைக்கிறியே டீ " என்றான் அவன் .

" ஏன் இப்போ அதுக்கு என்ன குறைச்சல் .. ?"

" குறைச்சல் எல்லாம் இல்லை .. உன்னை பார்த்ததுமே ஒரு கவிதை வந்திச்சுதான் .. அதை அப்பறமா சொல்லுறேன் "என்றான் ரகசியமாய் .. அவன் குரலிலேயே நிச்சயம் ஏதோ சில்மிஷமாக சொல்ல போகிறான் என்பதை உணர்ந்தாள்  ஜானகி ..இருப்பினும்

" அதெல்லாம் முடியாது இப்போவே சொல்லுங்க " என்றாள் ..

" வேணாம்டி ..நீ வெட்கப்படுவ, எனக்கு மனசு மாறிடும் .. இன்னும் டின்னர் சாப்டல " என்றான்

" அதெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம் .. நான் ஒன்னும் வெட்கப்பட மாட்டேன் சொல்லுங்க " என்றாள்  வெட்கத்துடன்.

" சரி உன் இஸ்டம் " என்றவன் பொறுமையாய் , ரசித்து கவிதைக்கே உரிய பாணியில், அவளுக்காக அதை மொழிந்தான்…

தில்லித் துருக்கர் செய்த வழக்கமடீ!-பெண்கள்

திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;

வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும்-இந்த

மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;

வல்லி யிடையினையும் மார்பி ரண்டையும்-துணி

மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;

சொல்லித் தெரிவ திலலை,மன்மதக்கலை-முகச்

சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ?

" ஐயோ ராம் போதும் போதும் "

"ஏண்டா இது கண்ணம்மாவுக்காக சொன்ன கவிதை தானே "

" வெவ்வெவ்வே ..ஏன் அவர் கண்ணம்மாவுக்காக வேற கவிதை சொல்லலையாக்கும் ?"

" அதெல்லாம் கடல் அளவு இருக்கு .. ஆனா இதுதான் சிட்டிவேஷன் கவிதை " என்றான் ரகுராம் ..

" ச்சு போங்க .. போதும் சொன்னது "

" ம்ம்ம்ஹ்ம்ம்ம் இதெல்லாம் கல்லாட்டம் ... எதையும் ஆரம்பிச்ச பாதியில நிறுத்த கூடாது " என்றவன் முழு கவிதையும் சொல்லி முடித்தான் ..

ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென்கிறாய்-பண்டை

ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ

ஓரிரு முறைகண்டு பழகிய பின்-வெறும்

ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?

யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார்-வலு

வாக முகத்திரையை அகற்றி விட்டால்?

காரிய மில்லையடி வீண்ப சப்பிலே -கனி

கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பேனோ?

அவன் காத்திருக்கவில்லைதான் .. அவள் கூந்தலை பின்னி முடித்தவன் தன் கரங்களால் அவளை சிறைபிடித்து காதல் தேசத்தில் பயணிக்க தொடங்கினான் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.