(Reading time: 46 - 92 minutes)

 

" ண்ணை மூடுங்க ? "

" என்ன ? "

" கண்ணை மூடுங்க ஜெய் "

" போச்சு என்னை கண்ணை மூட சொல்லி அறைய  போறா .. நல்ல வேலை காரில் இருக்கோம் .. அதுவரை சந்தோசம் தான் " என்றவன் பயந்துகொண்டே விழிமூட ,

" ஜெய் நான் என் மனசில் உள்ளதை உங்க கிட்ட சொல்லணும் ..ஆனா உங்க கண்ணை பார்த்தா எனக்கு பேச்சு வர மாட்டிங்குது  " என்றாள் .. அவள் குரலில் காதல் கசிந்துருகியது .. சட்டென கண் விழிக்க போனவனின் கண்களை ஒரு கையால் மூடி, " டேய் இப்போதானே கண்ணை திறக்காதே நு சொன்னேன் " என்று செல்லமாய் அவனை மிரட்டி தலையில் கொட்டினாள் ... அவனுக்கோ ஒரு கூடை பூவை தலையில் கொட்டியது போல இருந்தது ..

" டேய்யா ???"

" ஆமா ... இப்போ கையை எடுக்க போறேன் .. நீ மட்டும் கண்ணை திறந்த, அப்பறம் நான் அப்படியே இறங்கி போயிடுவேன் ..."

" அச்சோ புவனி  வேணும்னா இன்னும் ரெண்டு மூணு டேய் வேணும்னாலும் போட்டுக்கோ ஆனா ஓடிடாத " என்றான் .. அவள் கைகளை அவனின் மூச்சு காற்று தொட்டு குறுகுறுப்பை மூட்ட அப்போதான் கைகளை விளக்கினாள் ...

" ஜெய் ... எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு .. உங்களுக்கும் பிடிக்கும்னு தெரியும் .. நானும் நீங்களே சொல்லுவிங்கன்னு பார்த்தா இது தேருற கேஸ் மாதிரி தெரியல ... அதான் நானே களத்துல இறங்கிட்டேன் .." என்று சிரித்தாள் ... இப்போது அவன் கண் திறக்க, அவள் ஏதோ சொல்வதற்குள்

" அதெல்லாம் கண்ணை மூட முடியாது ... ஒழுங்கா என் கண்ணை பார்த்து பேசு .. பின்ன என்ன என்னை கல்யாணம் பண்ணிகிட்டு காந்தாரி மாதிரி கண்ணை கட்டிக்கிட்டு வாழப் போறியா நீ  ? " என்று செல்லமாய் மிரட்டினான் ..

" இதுக்கு  ஒன்னும் குறைச்சல் இல்ல "

" வேறேன்னடி குறைச்சல் வெச்சேன் "

" என்னடியா ??"

" ஆமாடி "

" சரிதான் .. ஹான் எங்க விட்டேன் ??"

" எனக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு உனக்கு தெரியும் " என்றான் சஞ்சய் ..

" ம்ம்ம் ஆனா .. இந்த மாற்றம் எப்போ நடந்துச்சுன்னு எனக்கே தெரில ஜெய் .. நான் பிருந்தாவனம்தான் என் வாழ்க்கைன்னு நினைச்சுகிட்டு இருந்தேன் .. கல்யாணம் பண்ணிகிட்டா என்னால சுதந்திரமா இப்போ நான் பண்ற வேலைகளை பார்க்க முடியாதுன்னு ஒரு எண்ணம் ."

" அதில் தவறு ஒன்னும் இல்லேடா .. இப்போலாம் விளம்பரத்துக்காக 30 நிமிஷம் ஏதும் சமூக சேவை செஞ்சுகிட்டு 30 நாளும் தனக்காக மட்டும் வாழுற சுயநலவாதிகள் தானே அதிகம் இருக்காங்க "

" எஸ் .. உங்களுக்கு என் எண்ணம் புரியுதா ஜெய் ?" என்றவள் கண்களில் மின்னலுடன் பேசினாள் ...

" கல்யாணம் நடக்கணும் என்பதற்காக, உனக்கு நான் முழு சுதந்திரம் தந்திருக்கேன்னு சொல்லிட்டு, கல்யாணத்துக்கு பிறகு இது பிடிக்கல, அது பிடிக்கல, இப்டி செய்யாத, அப்படி செய்யாதன்னு சொல்றதை என்னாலே ஏத்துக்கவே முடியாது "

" ம்ம்ம்ம் "

" அதே நேரம் ஒரு சராசரி ஆணுக்கு இருக்குற ஆசையை நான் தப்பு சொல்ல முடியாது .. ஒவ்வொருத்தருமே அவங்களின் லைப் பார்ட்னர் அவங்க கூடவே இருக்கணும், இவங்க மட்டும்தான் அவங்களின் உலகமா இருக்கணும்னு எதிர்பார்பாங்க .. அதுவும் இல்லாமல் திருமணம் என்பது ஆண் பெண் சம்பந்தப்பட்டது மட்டும் இல்ல .. அது ரெண்டு குடும்பத்தின் சங்கமம் .. நாளைக்கு என் அத்தையோ மாமாவோ என்னுடைய சமூக சேவை பிடிக்கலைன்னு சொன்னாலோ அல்லது ஏதும் தடுத்தாலோ சரிங்கன்னு சொல்லி மூலையில் உட்காருர அளவு நான் பொறுமை சாலி இல்லை .. அதே நேரம் அப்பா அம்மா ஸ்தானத்துல இருக்குற அவங்களின் மனசை கஸ்டபடுத்தவும் முடியாது ... இதையெல்லாம் பலமுறை சீர்தூக்கி பார்த்துதான் எனக்கு கல்யாணமே வேணாம்னு முடிவெடுத்தேன் " 

" ஆனா உங்களை பார்த்ததும் என் உள்மனமே எனக்கு எதிராய் செயல்படுது ஜெய் .. உங்கமேல எனக்கு ஒருவித உரிமை உணர்வு தோணுது . என்மனம் கட்டுபாட்டில் இல்ல . இதுவரை கடந்து வந்த நாட்களையும் சுமைகளையும் கடமைகளையும் உங்க கிட்ட ஒப்படைச்சிட்டு  உங்களோடு இருக்கணும் போல இருக்கு .. நீங்க எங்க கூப்பிட்டாலும் உங்களோடு வந்திடனும்னு தோணுது .. "

“…”

" ஆமா ஜெய் ...என் கடமையை எல்லாம் நிறுத்திட்டு உங்களோடு வாழனும்  போல இருக்கு ..."என்றவளின் வாயை பொத்தினான் சஞ்சய் ..

" இல்லடா .. எனக்காக நீ உன் இலட்சியத்தை  விடுறதில் எனக்கு இஸ்டம் இல்ல "

" ஜெய் ??"

" காதல்ன்னா என்னனு கிளாஸ் எடுக்குற அளவு நான் மேதாவி இல்ல டா .. ஆனா காதல் உன் அடையாளத்துக்கு துணையா இருக்கணுமே தவிர உன் அடையாளத்தை அழிச்சிட கூடாது .. நீ நீயா இரு .. உன் ஆசைகள் தப்பானதா இருந்திருந்தா அதை நீ மாத்திக்கிறதுல  ஒரு அர்த்தம் இருக்கு .. உதவி பண்ணனும்னு உண்மைய நினைக்கிற உள்ளம் இருக்குறது கூட இப்போலாம் அரிதுதான் .. என் கண்ணுக்கு நீ தேவதையா தெரியுற .. அழகில் சொல்லல .. வரம் வழங்குறதுல  சொல்லுறேன் .. பலரின்  வாழ்க்கையின் ஒளியேற்ற வந்த திவ்ய சுடர் நீ .. உன்னை நம்ம வீட்டுக்குள்ள ஒரு குடத்துக்குள்ள வெச்சு அழகு பார்க்குற ஆசை எனக்கு இல்ல .. அப்படி ஒரு எண்ணம் வந்தா இந்த உலகத்துலேயே என்னை வெறுக்குற முதல் ஜீவன் நானாகத்தான் இருப்பேன் "

" என்ன ஜெய் இது ?"

" உண்மைய சொல்றேன் டா.. என் புவனி எப்பவும்  அவளுடைய அடையாளத்தை இழக்க கூடாது .. பெண் என்பவள் மஹா ஷக்தி .. பெண்ணாய் பிறப்பதற்கு புண்ணியம் பண்ணனும் . அப்படிபட்ட பெண் இப்படி திருமண பந்தத்துகாக அடிபணிந்து  தன் சுயத்தை இழந்து வாழுறதை நான் விரும்பல .. இது திமிர் இல்லை .. இதுதான் உண்மையான அடையாளம் . நீ நீயாய் இரு .. நான் உன்னை உனக்காக நேசிக்க தான் விருப்பப்படுறேன் " என்றான் ஆத்மார்த்தமாய் .. அவனையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்தவள் சட்டென முகம் வாடினாள் ... 

" என்னாச்சுடா ?"

" இல்ல .. அதுவந்து ஜெய் .. "

" சொல்லு "

" நமக்கு குழந்தை .... " என்றவள் தன் எண்ணத்தை  சொல்ல தயங்கினாள் ...  அதை சட்டென புரிந்து கொண்டவன் ..

" பிருந்தாவனத்தில் இருக்குற எல்லா குழந்தைகளுக்கும் நீ அம்மான்னா நான்தான் அப்பா .. எப்பவும் நான் அவங்களுக்கு மட்டும்தான் அப்பா ... " அவனின் வார்த்தையில் அவள் மகிழ்ந்தாலும் தனது எண்ணம் சுயனலமானதோ என்று எண்ணினாள் ... அவனோ

" ஒரே ஒரு குழந்தை அப்பான்னு  கூப்பிடறதுல என்ன கிக்கு இருக்கு ??? எனக்கு நிறைய்ய்ய்யய்ய்ய்ய குழந்தைங்க வேணும் " என்றான் கண்சிமிட்டி ..

அப்போதும் அவள் முகம் தெளியாமல் இருக்க,அந்த உண்மையை சொன்னான் ஜெய் ..

" ரிலாக்ஸ் பேபி .. நான் எங்க அம்மா அப்பாவுக்கு வளர்ப்பு மகன்தான் .. இது என் பதின்ம வயதுலத்தான் தெரிஞ்சது .. அதுனால அப்பா அம்மாவுக்கு உன் முடிவில் ஆட்சேபனை இருக்காது .. நமக்குன்னு ஒரு பாப்பா வந்த உன் கவனம் பாப்பா பக்கம் மாறிடும் .. நம்ம எல்லா பசங்களும் ஏங்கி போய்டுவாங்க டா .. அதே நேரம் நீ அவங்களை பார்த்துக் கிட்டு பாப்பாவை கவனிக்க முடியாமல் போனால் அதுவும் தப்பாகிடும் .. தாய்மை என்பது எவ்வளவு உன்னதம்னு எனக்கும்  தெரியும் .. ஒரு பெண்ணாக  இருந்து , தனக்கு குழந்தை வேணாம்னு முடிவெடுக்க உனக்கே எவ்ளோ கஷ்டமா இருந்திருக்கும்னு எனக்கு தெரியாதா ?" என்று அவன் கேட்டு முடித்தவேளை அவன் மார்பில் தஞ்சம் புகுந்திருந்தாள்  அவனது புவனி ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.