(Reading time: 46 - 92 minutes)

 

" ன்னடா லுக்கு ? "- அர்ஜுனன்

" இப்படி என்னை ஏமாத்திட்டியே  ஜில்லு  " என்றான் ..

" அடிங்க .. என் பொண்டாட்டி உனக்கு ஜில்லுவா ? அப்படியே ஓடிரு " என்று போலியாய் மிரட்டினான் அர்ஜுனன் .. ஜீவாவும் ஓடிவிட தனது பாக்கெட்டில் இருந்து ஒரு குட்டி நகைப்பெட்டியை எடுத்தான் .. மயில் வடிவத்தில் அழகாய் இருந்தது அந்த ஜிமிக்கி ..

" இன்னும் நகை கொடுக்குறதை நிறுத்தலையா நீங்க ?" என்று குழைந்தாள் சுபீ

" ம்ம்ம்ம் இந்த மாசம் முடிய இன்னும் 3 நாலு இருக்கு .. சோ மூணு கிபிட் .."

"  அப்போ அடுத்த மாசம் ?? "

" யோசிச்சு சொல்றேன் " என்றவனை கட்டிக் கொண்டாள்  சுபத்ரா .. இந்த ஆறுமாதங்களில் சுபாத்ராவால்  அந்த வீட்டில் மாற்றங்கள் ஏராளம் .. பானுவின் தனிமையை போக்குவதற்காக அவருக்கு நிறைய பொழுதுபோக்கு வழிகளை அறிமுகபடுத்தி தந்தாள்  சுபி . அதில் ஒன்றுதான் சில்சீயில் கதை படிப்பது .. அடுத்ததாய், அக்கம் பக்கத்தில் இருக்கும் சிறுவர்களுக்கு இலவசமாய் பாடம் படித்து கொடுத்தாள்  சுபத்ரா .. 50 % பாடம் படிப்பதும் 50 % அவளிடமும் பானுவிடமும் விளையாடுவதுமே நம்ம சிறுவர்களின் வேலையாய்  போனது.. அவர்கள்தான் நம்ம அஸ்வின், ஸ்ரீமதி, மீரா, மது, ஆதி, ரகு, மேகா  அப்பறம் சுபியை ஒருதலையாய் காதலிக்கும் ( ?????!!!) ஜீவா !

அவள் எந்தளவு அந்த வீட்டின் மகிழ்ச்சியை தாங்கினாலொ  அதேபோல அர்ஜுனன் அவளை தாங்கினான் . முப்பது நாளில் ஹிந்தி , முப்பது நாளில் தமிழ் போல முப்பது நாள் புடவை, முப்பது நாள் நகைகள் என்று மாதத்திற்கு ஒவ்வொரு வித பரிசாய் வாங்கி அவளை பரிசு மழையில் நனைத்தான் .. அதைவிட அதிகமாய் அவளை அன்பு மழையில் நனைத்தான்  ..

" குட் மோர்னிங் கண்ணம்மா " என்று சொல்லி மனைவியை தேடினான் கிருஷ்ணன் .. அதற்குள் கதவை தட்டிக் கொண்டு உள்ளே வந்தார் சிவகாமி ..

" சின்னம்மா ... என்ன எல்லாரையும் காணோம் ? "

அவன் மீராவைத்தான் தேடுகிறான் என்று உணர்ந்தவர் வேண்டுமென்றே " இது உன் பேட்ரூம்பா ...இங்க எப்படி எல்லாரும் இருப்பாங்க ?" என்றார்....

" ஐயோ .. ஹ..ஹ .. சரி மீரா எங்க ? "

" மணி பார்த்தியா 7 ஆச்சு .. இந்த நேரம் எங்க போவா ? ரகு, பெரியமாமா , உங்க சித்தப்பா கூட ஜாகிங் போயிருக்கா " என்றார் ... அவர் சொன்னதுமே அவன் முகத்தில் புன்முறுவல் பூத்தது .. இரண்டு வாரங்களுக்கு முன்பு அவளை தூக்கி சுற்றியவன், " லைட்டா நீ வெயிட் போட்டுட்ட கண்ணம்மா " என்று சொல்லி விட்டன் .. மறுநாளில் இருந்து  ரகு, சூர்யபிரகாஷ், சந்திரபிரகாஷ் , கிருஷ்ணனுடன் ஜாகிங் செல்ல தொடங்கினாள் ... அவனுக்கும் அது பிடித்து தான் இருந்தது .. காலையிலேயே அவளுடன்  ஒன்றாய் நேரம் செலவழிப்பதும், போலியாய் அவளை சீண்டும்போது அவள் சலுகையாய்  தந்தையர் இருவரிடமும் ஆதரவு பெறுவதும் அவன் மிகவும் ரசிப்பான் ..

புன்னகையுடன் அந்த நாளை வரவேற்றாள் ஜானகி.,..அருகில் ரோஜா பூக்களுடன் சுட சுட காபி .. செல்போனில் ரகுராமின் மெசேஜ் ..

" குட் மோர்னிங் சகி .. நான் ஜாகிங் போய்ட்டு ஆபீஸ் போயிடுவேன்.. நீ பொறுமையா வா " என்று அனுப்பியிருந்தான் .. இப்போதெல்லாம் ஜானகி அடிக்கடி சோர்வாகி விடுவதினால் அவள் தாமதமாக ஆபீஸ் வரவேண்டும் என்பது ரகுராமின் உத்தரவு .. இப்படித்தான் அன்றும் அவனும் கிருஷ்ணனும் ஆபீஸ் சென்று விட ஜானகி ஆபீசிற்கு கிளம்பி அப்படியே அமர்ந்துவிட்டாள் ... அவளருகில் வந்தார் அபிராமி..

"என்னாச்சு ஜானகி  ? "

" கொஞ்சம் மயக்கமா இருக்கு அத்தை .. "

" ஏதும் சாப்பிட்டியா மா ? "

" எதுவும் பிடிக்கல அத்தை .. கொஞ்சம் பால் குடிச்சேன் ... " இவை அனைத்தும் அவருக்கு அந்த நல்ல செய்தியை உணர்த்தியது .. இருந்தும் அவளிடமே கேட்டார் ...

" ஏதும் விசேஷமா டா ? "

சட்டென முகம் மலர்ந்தவள் " எனக்கும் அப்படித்தான் தோணுது அத்தை " என்றாள் ..

" டாக்டர்  பார்க்கலாமா ... "

" போகணும் அத்தை .. ஆனா இந்த வாரம் வேணாம்னு பார்க்குறேன் .. ஆபீஸ் லே ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு ப்ராஜெக்ட் வருது .. இப்போ கன்பர்ம் ஆனது அவருக்கு தெரிஞ்சா என்னை வெளில விட மாட்டாரே ... அதுனால இதை சரியா முடிச்சிட்டு, நம்ம சுஜாவின் குட்டி பாப்பாவை ஒரு தடவை பார்த்துட்டு அப்படியே அவரையும் ஹாஸ்பிடல் கூட்டிடு போறேன்"என்றாள் ...

ஜானகியின் முடிவு அபிராமிக்கும் சாதகமாகவே  இருக்க .. " சரி டா.,... பத்ரமா இரு .. நானும் யாருகிட்டயும் சொல்லல " என்றார் .. அதன் பிறகுதான் கிருஷ்ணனிடம் பேசிவிட்டு மீராவிடம் கிருஷ்ணனுக்காக அவனுடன் சில மாதங்கள் மலேசியாவில் இருக்க சொன்னார் ..  அவர்களின் நல்லதிற்காக எடுத்த முடிவாக இருந்தாலும், அவருக்குமே இது கடிமான ஒன்றாக இருந்தது ... மறுநாளே, அனைவரிடம் மலேசியா செல்வதாக சொன்னான் கிருஷ்ணன் ..

" நீ மட்டும் போயேண்டா "

" மீரா அங்க தனியா  என்ன பண்ணுவா ? "

" அண்ணியை நான் பார்த்துகுறேன்னா "

" அக்கா இல்லாமல் எப்படி மாமா "

இப்படி மொத்த குடும்பம் சுற்றி நின்று கேட்ட கேள்விகளை சமாளித்து சரியாய் ஒரு வாரத்தில் மலேசியாவை சேர்ந்தனர்  இருவரும் .

லேசியாவின் தலைநகரம் கோலாலம்பூரில் இருந்தனர் இருவரும் .. கிருஷ்ணனின் நண்பர் காரை கொண்டுவர அவருடன் அந்த வீட்டிற்கு சென்றனர் .. சுற்றி உள்ள மக்கள், பாஷை அனைத்துமே புதிதாய் இருந்ததால் இன்னும் தனிமையாய் உணர்ந்தாள்  மீரா .. அந்த அழகிய வீட்டை பார்த்ததுமே அவளின் பயம் கொஞ்சம் குறைந்தது .. காரணம் அந்த வீட்டின் முன் இருந்த ஆளுயர கிருஷ்ணர்  விக்ரகம் .. அவளுக்கு புவனாவின் பிருந்தாவனம ஞாபகத்திற்கு வந்தது ..

" ஓகே பாஸ் தேங்க்ஸ் " என்று நண்பனை அனுப்பி வைத்துவிட்டு அவளுடன்  உள்ளே வந்தான் கிருஷ்ணன்.. இது யாரு வீடு கிருஷ்ணா .. ? என்றாள்  மீரா....

" நீயே பாரு என்று அவன் திரையை விளக்க, அங்கு அவர்களின் குடும்பப்படம் பெரிதாய் மாட்டபட்டு இருந்தது ....

" என் குடும்பம் என் குடும்பம் " என்று முணுமுணுத்த மீரா அப்படியே அமர்ந்துவிட்டாள் ... அவளுக்கு குடிக்க நீர் கொண்டு வந்தான் கிருஷ்ணன்... அவளை தோளோடு சாய்த்து கொண்டவன் மெல்ல பேச தொடங்கினான் ..

" மீரா "

" ம்ம்ம்? "

" உன்கிட்ட நான் ஒரு உண்மைய சொல்லணும்"

" என்னங்க ? "

" இதை கேட்டு நீ எப்படி எடுத்துப்பன்னு  தெரில .. ஆனா எதுவ   இருந்தாலும் என்னை கேளு .. நான் பதில் சொல்றேன் சரியா ? " என்றான் ...

" ம்ம்ம்ம் "

" நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி , அம்மா ஒரு  விஷயம் சொன்னங்க நியாபகம் இருக்கா ? "

" .."

" உன் மூலமா நம்ம வீட்டுக்கு வாரிசு வரும் .. நீ கண்டிப்பா அம்மா ஆகுவன்னு "

" ஆமா ..... ஏன் ? "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.