(Reading time: 23 - 46 minutes)

'நேக்கு கோகுல்ன்னா ரொம்ப பிடிக்கும்...' கோதை சொன்ன விதத்தில் ரொம்பவுமே மகிழ்ந்து போயிருந்தார் தேவகி.

'மாட்டோம்...' கோதையின் அருகில் வந்து அவள் கன்னம் வருடினார் அவர். 'உங்க ரெண்டு பேரையும் நாங்க எப்பவும் பிரிக்க மாட்டோம் வா... முதல்லே இந்த கல்யாணம் நடக்கட்டும் அதுக்கு அப்புறம் மத்த விஷயமெல்லாம் பார்த்துக்கலாம்...' தேவகி சொல்ல எல்லாருக்குமே அதில் உடன்பாடு வந்து விட்டதை போலே தோன்றியது.

'திருமணத்திற்கென ஆசை ஆசையாய் தயாராகி வந்து காத்திருக்கும் அந்த இரண்டு மனங்களையும் உடைத்து எறியும் எண்ண யாருக்கும் இல்லை தான்...' தேவகி சொல்வதை ஆமோதிப்பதை போல் எல்லாரும் பேசாமல் உள்நோக்கி நடக்க ஆரம்பிக்க.....

அங்கே கோதையின் தந்தையின் மனம் மட்டும் தனது மூத்த மகளை எண்ணி தவித்து, பதறி குழம்பிக்கிடந்தது. மகள் மீதிருந்த நமபிக்கையில் வேறு விதமாக எதையுமே யோசிக்க தோன்றவில்லை அவருக்கு. ஆரம்பத்திலிருந்தே இந்த பதிவு திருமணத்தில் அவருக்கு விருப்பம் இல்லை தான். 

'எதற்காம் இந்த அவசரம் என்ற ஒரு கேள்வி அவர் மனதை குடைந்துக்கொண்டே தான் இருக்கிறது...' இப்போது இருந்த மனநிலையில் அவர் மனம் என்னனவோ கணக்குகள் போட ஆரம்பித்திருந்தது.

'சித்த இருங்கோ...' கணீரென ஒலித்தது ஸ்ரீதரனின் குரல். 'இந்த லெட்டரை கொஞ்சம் படிச்சு பாக்கறேளா??? இது என் பொண்ணு வேதா கைப்பட எழுதின லெட்டர். இதுக்கு பதில் சொல்லிட்டு அப்புறம் என் பொண்ணை கூட்டிண்டு போங்கோ

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்... 

'லெட்டரா? அத்தனை பேரும் அதிர்ச்சியுடன் திரும்ப, சட்டென அவர் அருகில் வந்து ஸ்ரீதரனை ஊடுருவும் பார்வை பார்த்தபடியே கையில் இருந்த லெட்டரை வாங்கினார் வாசுதேவன். அதை படிக்க படிக்க அவர் முகத்தில் பல மாற்றங்கள். முகத்தில் கோப ரேகைகள் ஓடத்துவங்க...

எல்லாரும் அவரையே பார்த்திருக்க.... ஒரு முறை அவர் கோகுலை திரும்பி பார்த்துவிட்டு ஸ்ரீதரனை பார்த்து அழுத்தமான குரலில் சொன்னார்

'உம்ம பொண்ணு எதையானும் கிறுக்கி வெச்சிட்டு போவோ... அதுக்கெல்லாம் நாங்க பதில் சொல்லிண்டிருக்க முடியாது ஸ்ரீதரன்....'

'பதில் சொல்ல மாட்டேளா??? இந்த லெட்டர்லே இருக்கிறது விளையாட்டு இல்லை. என் பொண்ணோட வாழ்கை..' என்றார்.

'இப்போ என்ன சொல்ல வரேள்.???'

'நான் எதுவும் சொல்ல வரலை. எந்த விவாதமும் பண்ண வரலை. என் குழந்தை எங்கே சொல்லிடுங்கோ.... உங்க பையனுக்கு கட்டாயம் தெரிஞ்சிருக்கும்...' பெண்ணை தொலைத்துவிட்ட ஒரு சாதாரண தந்தையின் ஆதங்கத்துடன் வெளி வந்தன வார்த்தைகள்.

திகைப்புடனே எல்லாரும் அவர் அருகில் வர... கடிதத்தை வாங்கி ஒவ்வொருவராக படிக்க ஆரம்பித்தனர்.

கோகுல் கடிதத்தை படித்து நிமிர 'தயவு செய்து சொல்லுங்கோ... என் பொண்ணு எங்கே???' அவனை பார்த்து கெஞ்சினார் ஸ்ரீதரன்....

'மாமா... 'நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்கோ... என் ஃப்ரெண்ட் ஒருத்தன் என் பேரை சொல்லி வேதாவை ஏமாத்தி இருக்கான்..இப்போ அவ எங்கே இருக்கான்னு தான் நாங்க தேடிண்டு இருக்கோம்...'

'மாட்டேன். நம்ப மாட்டேன்... நீங்க பொய் சொல்றேள்... வேதா எங்கே தயவுசெய்து சொல்லிடுங்கோ...' யோசிக்கும் சக்தியை இழந்தவராக திரும்ப திரும்ப அதையே சொல்ல... தந்தையர் இருவரும் கோபத்தின் உச்சியை நெருங்கிக்கொண்டிருக்க யசோதைக்கும், தேவகிக்கும் அவரது மனநிலை புரியத்தான் செய்தது.

'அப்பா..'...'நான் சொல்றதை சித்த கேளுங்கோ.... .கோகுல் மேலே எந்த தப்பும் இல்லை நேக்கு நன்னா தெரியும்...' சொன்னாள் கோதை.

நீ சும்மா இரு நோக்கு ஒண்ணும் தெரியாது..... அன்னைக்கு நீங்க எங்காத்துக்கு வந்தப்போ நீங்களும் வேதாவும் ரொம்ப க்ளோஸ்ன்னு அவளே சொன்னாளே தெரியும் நேக்கு... என் பொண்ணு எங்கே சொல்லிடுங்கோ... கோதை... சொல்ல சொல்லுமா... வேதாவை கூட்டிண்டு வர சொல்லும்மா... அவளையும் கூட்டிண்டு நாம இங்கிருந்து போயிடுவோம்.. அதுக்கு அப்புறம் இவா சங்காப்தமே வேண்டாம்...'  அவர்களை கடந்து சென்றவர்கள் இவர்களை ஒரு மாதிரியாக பார்த்து செல்ல...

'என்னடா....  என்னடா இதெல்லாம்... எங்களுக்கு தெரியாம எப்போடா அவாத்துக்கு போனே...' பெரியப்பா கேட்க... கூசியது கோகுலின் உடல்....

'அப்பா... அது சும்மா விளையட்டுக்கு பா... அக்காவை பத்தி இவா யாருக்குமே எதுவும் தெரியாது பா...'' கோதை சொல்ல... அதை நம்பாமல் ஸ்ரீதரன் பேசிக்கொண்டே போக...

அங்கே நடக்கும் எல்லாவற்றையும் பார்த்தபடியே நின்றிருந்தான் முரளி. எல்லாரிடமும் நிறையவே பரபரப்பும் தவிப்பும் நிறைந்திருந்த நேரத்திலும் அவன் அமைதியாக கோதையையும், கோகுலையுமே பார்த்திருந்தான். அந்த நேரத்திலும் இருவர் கைகளும் இணைந்தே இருந்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.