(Reading time: 23 - 46 minutes)

'ந்த நிலையிலும் உன்னை விட்டு விட மாட்டேன் என்று சொல்வதை போல் அவள் கையை இறுக்கமாக பற்றி இருந்தான் கோகுல்...' தன்னையும் அறியாமல் ஒரு புன்னகை எழுந்தது முரளியிடம். 'எந்த நிலையிலும் இவர்கள் இருவரும் பிரிந்து விடவே கூடாது...'

அடுத்த சில நொடிகளில்.....

'நேக்கு தெரியும்...' ஒலித்தது முரளியின் குரல்... 'நேக்கு வேதா எங்கே இருக்கான்னு தெரியும்....'  அவன் அழுத்தம் திருத்தமாக சொல்ல வியப்பும், திகைப்புமாக அனைவரும் திரும்பினர்.

'நீங்கதான் முரளியா??? சொல்லுங்கோ என் பொண்ணு எங்கே இருக்கா சொல்லுங்கோ?? எங்கே இருக்கா. சொல்லுங்கோ????' படபடக்கும் குரலில் கேட்டார் ஸ்ரீதரன்.

'உங்க பொண்ணு பத்திரமா இருக்கா. போறுமா??? கவலை படாதேள்.' நிதானமான குரலில் சொன்னான் முரளி. 'அதே மாதிரி உங்க பொண்ணு காணாம போனதுக்கும் கோகுலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை சரியா???' அவன் சொல்ல சொல்ல எல்லாரிடத்திலும் வியப்புடன் கலந்த மௌனம்.

'வேதா எங்கே இருக்கா. அதை முதல்லே சொல்லுங்கோ..' கேட்டார் அவள் அப்பா.

சொல்றேன். சொல்றேன்  ஆனா அதுக்கு முன்னாலே வேதா கோகுல் கல்யாணம் நடக்கட்டும்...'

'முரளி விளையாடாதே. நோக்கு ஏதானும் தெரிஞ்சா சொல்லிடு....' இது யசோதா

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

'சொல்றேன்மா.... சொல்றேன்மா... சொல்லாம எங்கே போறேன்... ' என்றவன் கோதையின் பக்கம் திரும்பினான்.

'கோதை... ' என்றான் அவன். 'நோக்கு... கோகுல் தப்பு பண்ணி இருக்க மாட்டானன்னு நோக்கு நம்பிக்கை இருக்கோன்னோ???'

கண்களில் நீர் கட்டி இருக்க அவசரமாக தலை அசைத்தாள் கோதை 'கோகுல் பத்தி நேக்கு நன்னா தெரியும்... அவர் எந்த தப்பும் பண்ணலை...பண்ணவும் மாட்டார் ' அவள் உறுதியான குரலில் சொல்ல கோகுலின் இதழ்களில் இதமான புன்னகை,

'குட்... வெரி குட்...... இந்த உலகத்திலே யார் அவனை நம்பினாலும் சரி நம்பலைனாலும் சரி நீ அவனை நம்பறையோன்னோ அது போறும்... மத்தவா பத்தி கவலை இல்லை.. வா வந்து கையெழுத்து போடு... அதுக்கு அப்புறம் நான் எல்லாம் சொல்றேன்...' அவன் சொல்லிக்கொண்டே போக யாரிடத்திலும் அசைவில்லை. பேச்சில்லை...

கோதை மெதுவாக திரும்பி அப்பாவை பார்க்க... அவர் முகத்தில் உணர்வுகளை துடைத்து விட்ட பாவம்.

'இது நம்ம கோகுலோட கௌரவ பிரச்சனை கோதைமா.... இப்போ இந்த கல்யாணம் நடக்கறது தான்..... நீ போடற கையெழுத்து தான் எல்லாத்துக்கும் பதில்......  பெரியவா யாருக்கு இந்த முடிவிலே சம்மதமோ அவா நம்ம கூட வரட்டும்... என்றபடி எல்லாரையும் அவன் முறை பார்க்க..

'நான் வரேன் வாடா...' அவனுக்கு ஆதரவாக தேவகி அவர்கள் அருகே வர,

'நானும் வரேன் யசோதையும் இணைந்து கொள்ள.. ' தந்தையர் மூவருமே அந்த இடத்திலேயே  சிலையாக நின்றிருந்தனர்.

இவர்கள் எல்லாரும் சில அடிகள் நடக்க... சட்டென

'முரளி... வேண்டாம்டா...கல்யாணம் இப்போ வேண்டாம் வேதா வரட்டும்...' நின்றுவிட்டான்  கோகுல்....

'டேய்... என்னடா விளையாடிண்டிருக்கே பேசாம வா' முரளி சொல்ல

'வேதா எங்கே இருக்கான்னு உனக்கு நிஜமா தெரியுமா???' அவன் கண்களை பார்த்தபடியே கேட்டான் கோகுல்.

'தெரியும் டா... நீ வா...நான் அப்புறம் எல்லாம் சொல்றேன்...'

'இல்லடா அவ வரட்டும். அப்புறம் தான் மத்த விஷயமெல்லாம்... இப்போ நாம இங்கிருந்து...' கிளம்புவோம் முரளி... சொல்லிவிட்டு...

'டேய்... கோகுல்...' முரளி ஏதோ சொல்ல வர, அதை ஒப்புக்கொள்ள விரும்பாமல் இடம் வலமாக தலை அசைத்து விட்டு....  திரும்பி நடக்க எத்தனிதவனின் கை இன்னமும் கோதையின் கைக்குள்ளே இருக்க... மெல்ல திரும்பி அவள் முகம் பார்த்தான் அவன்.

'தேங்க்ஸ்டா கோதை பொண்ணு...' அவள் கன்னம் தட்டினான் அவன்.

'எதற்காம்? அவன் மீது அவள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கா???" இமைக்காமல் அவனையே பார்த்திருந்தாள் பெண்...

'நான் இப்போ கிளம்பறேன்... அப்புறம் பார்க்கலாம்... என் மனசு நோக்கு புரியறதோன்னோ???'

'ம்...' மெதுவாக ஒரு தலை அசைப்பு கோதை பெண்ணிடம்...

'தேங்க்ஸ்டா..... உங்க அக்கா சீக்கிரம் வந்திடுவா... தைரியமா இரு... கிளம்பறேன்.'

'சரி...'

'கையை விட்டா தானே கிளம்ப முடியும்...' சின்ன புன்னகையுடன் அவன் சொல்ல மெல்ல விடுவித்தாள் அவன் விரல்களை... ஒரு விறு விறு வென அங்கிருந்து நகரந்தவன் யாரிடமும் எதுவும் பேசாமல் காரை கிளப்பிக்கொண்டு பறந்து விட்டிருந்தான்... இனம் புரியாத ஒரு அழுத்தமான உணர்வுடன் நின்றிருந்தாள் கோதை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.