(Reading time: 39 - 77 minutes)

ரஞ்சு நிற க்ரீப் புடவையில் துளியும் ஒப்பனையின்றி காலையில் தான் கட்டிய மஞ்சள் சரடு ஜொலிக்க மணப்பெண்ணிற்கே உரிய பொலிவோடு தன் முன் வந்து நின்றவளை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை ராமிற்கு..

வா மகி ஏன் அங்கேயே நின்னுட்ட என்னாச்சு??என அவள் அருகில் வர..அவள் முகத்தில் வேர்வை முத்துக்களாய் மின்ன அப்படி ஒரு மிரட்சி அவளிடம்..

ஹே என்னடா ஏன் இப்படி வேர்க்குது உனக்கு முதல்ல வந்து உக்காரு என்று அவளை அமர்த்திவிட்டு அவளருகில் அமர்ந்தான்..இப்போ சொல்லு என்ன??

இல்லப்பா ஒண்ணுமில்லை..

என்ன குட்டிமா ஒண்ணுமில்லாமையா உன் முகம் இப்படியிருக்கு என்னாச்சு சொல்லு??யாரும் எதுவும் சொன்னாங்களா??

அதெல்லாம் இல்ல ராம்..வந்து.. கார்ல…வரும்போது…என்று மென்று முழுங்க ஏதோ புரிவதாயிருந்தது ராமிற்கு,.மனதிற்குள் தன்னையே திட்டிக் கொண்டவன்..ச்சச்ச சின்ன பொண்ணு சும்மா பேசினதுக்கா இப்படி பயப்படுறா??ஓவரா தான் மிரட்டிட்டோமோ..ம்ம் சமாளிப்போம்..

ம்ம் கார்ல??என்றான் ஒன்றும் தெரியாதவாரு..

அது வந்து…என்ன பேசுவது எப்படி பேசுவது ஏன் இவ்ளோ பயம் ஒன்றுமே புரியவில்லை மகிக்கு..

ம்ம் இவ்ளோ நாள் ஆபீஸ் கல்யாண வேலைனு பிஸியாவே போய்டுச்சு அதான் சேர்த்து வச்சு   வட்டியும் முதலுமா பேசனும் நிறையனு சொல்ல வந்தேன் அதுக்கென்ன இப்போ..

ராம்??முகத்தில் அத்தனை பிரகாசம் மகியிடம்..தன்னவனின் மேல் காதல் இன்னுமாய் பொங்கியது..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜோஷினியின் "ஹேய்... சண்டக்காரா" - இது ஒரு காதல் சடுகுடு...

படிக்க தவறாதீர்கள்... 

என்னடீ???நீ வேற என்ன நினைச்ச??

இல்லப்பா ஒண்ணுமில்லை என்று அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்..ராமிற்கும் இப்போதுதான் நிம்மதியாய் இருந்தது.. பழைய மகி திரும்பியதாய் தோன்றியது....

சாரி ராம் எல்லாரும் பேபிய பத்தியே பேசினாங்களா நீங்களும் ஏதேதோ சொன்னீங்களாஅதான் ஒருமாறி டென்ஷன் ஆய்ட்டேன்..என ராஜி, அவள் தோழிகள் என்று அனைத்தையும் கூற ....

என்னது பேபியா ஹலோ மேடம் நீயே ஒரு பேபி தான் இதுல இன்னோன்னா நா பாவம்டா..அதுக்குலா இன்னும் டைம் இருக்கு..யார் கேட்டாலும் சொல்லு மொதல்ல நா பிக் கேள் ஆகனுமாம் அப்பறம் தான் ஜுனியர் வருவாங்களாம்னு என்று கூறி வயிறு குலுங்க சிரித்தான்,செல்லமாய் முறைத்தவள் இன்னும் நெருக்கமாக அமர்ந்து கொண்டாள்..

அதன்பிறகு உண்மையாகவே நிறைய பேசினார்கள்..இருவருக்குள்ளும் இருந்த காதல் அடுத்தநிலையை அடைந்ததாய் தோன்றியது..சரி தூங்குடா ரொம்ப நேரம் ஆய்டுச்சு..மார்னிங் கோயில் வேற போனும்னு சொன்னாங்கல..குட் நைட் மகி..என்று ராம் படுத்துக் கொள்ள மகிக்கோ தூக்கமே வரவில்லை,ராமின் செயல்கள் அனைத்துமே அவளை நிறைய சிந்திக்க வைத்திருந்தது..அவன் உண்மையில் தன்னை சமாதானப்படுத்துவதற்காக தான் இப்படி நடந்து கொண்டான் என்பதை அவள் அறிந்திருந்தாள்..சாதரணமாகவே அவளை கண்களால் பருகுபவன் இன்று முழு உரிமையிருந்தும் விளையாட்டாக கூட அத்துமீற விரும்பவில்லை..இவ்வளவு காதலா என் மீது..இப்படி ஒருத்தர் எனக்கு கிடைச்சது என் பாக்கியம்..மெதுவாக ராமின் புறம் திரும்பி படுத்தவளுக்கு அவனின் சீரான மூச்சு காற்றே அவனின் ஆழ்ந்த உறக்கத்தை உணர்த்த தன்னவனின் சிகையை கைகளால் அளந்தாள்..தூக்கத்திலும் உதடுகளில் லேசான புன்னகை..லவ் யு அண்ட் நீட் யு மேட் லி ராம்..என்று மென்மையாக அவனின் நெற்றியில் முத்தமிட்டவள் அவனின் கையை எடுத்து தன் இடையை சுற்றி போட்டுக் கொண்டு தூங்கியும் விட்டாள்..

காலையில் ராமிற்கு முதலில் விழிப்பு வந்துவிடகண்திறந்தவனின் அருகில் குழந்தையாய் உறங்கி கொண்டிருந்தாள் மகி..சட்டென ஏதோ தோன்ற அவளின் இடையின் மேல் தன் கையை கண்டதும் என்னவென்று புரியாமல் குழம்ப நிச்சயம் நானா இத பண்ணிருக்க மாட்டேன்…மகி..அப்போது தான் தங்களின் இடைவெளி குறைந்திருப்பதை பார்த்தவன் நைட் அவ அந்த ஓரமா தான படுத்திருந்தா அப்போ..என்று நடந்ததை ஊகித்தவனின் உதடுகள் தானாக புன்னகையை உதிர்த்தன..

ரசனையாய் தன்னவளை பார்த்திருந்தவன் அவள் தூக்கம் கலையா வண்ணம் தன் கையை எடுத்துவிட்டு லவ் யு டீ பொண்டாட்டி என்று நெற்றியில் லேசாக இதழ்பதித்தான்..சட்டென விழித்தவள் லவ் யு டூப்பா என்று கூறி எழுந்து அமர்ந்தாள்..

ஏய் கேடி முழிச்சுட்டா இருந்த??

ம்ம் ஆமா..நீங்க என்ன ரியாக்ஷன் குடுக்குறீங்கனு பாக்கலாமேநு தான் அப்படியேயிருந்தேன் என்றாள் குறும்பாய்..

அடிப்பாவி நைட்லா அழுதுவடிஞ்சுட்டு இப்போ பேசுற பேச்சை பாரு..

நேத்து அப்படி நடந்துகிட்டதுக்கு லஞ்சம் தான் இப்போ குடுத்தாச்சே அதெல்லாம் சரியா போச்சு..

அத நா சொல்லனும்…..

குட்டிமா..

என்னப்பா சொல்லுங்க..

நீ எனக்காகலா அவசரப்பட்டு உன்ன மாத்திக்க வேண்டாம் இதுக்காக நா உன்னை கல்யாணம் பண்ணல..நீ என் பக்கத்துலயே இருந்தா போதும்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.