(Reading time: 39 - 77 minutes)

டடா அதெல்லாம் இல்லடா லேசா தலைவலிக்குது அதான் அப்படியே உக்காந்துட்டேன்..

என்னாச்சு அக்கா டப்லட் எதுவும் போட்டீங்களா??

இல்ல மகி என்று பேசும் போதேவயிற்றை பிரட்டிக் கொண்டு வர வேகமாக குளியலறை நோக்கி ஓடினாள்.. மகிக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை வேகமாக சென்று ராஜியை அழைத்து வந்தாள்..என்னாச்சு தன்வி??

தெரிலம்மா மார்னிங்ல இருந்து ரெண்டு மூணு தடவை வாமிட் பண்ணிட்டேன் இப்போ லேசா தலைவேற வலிக்குது..அதற்குள் விஷயம் தெரிந்து அனைவரும் வந்துவிட ராமின் பாட்டி நாடி பிடித்து பார்த்துவிட்டு எல்லாம் நல்ல விஷயம்தான்... மகி வந்தன்னைக்கே என் பேத்திய அம்மாவாக்கிட்ட எங்க வீட்டு மகாலெட்சுமி டா நீ நல்லாயிரு,எதுக்கும் டாக்டர்கிட்ட காட்டிட்டு வந்துருங்க என்று அவர் கூறி கொண்டே போகஅனைவருக்கும் மகிழ்ச்சி தாளவில்லை..தன்வி கணவரோடு மருத்துவமனைக்குச் செல்ல ராஜி மகியை அலங்கரிக்க உதவினார்..

மகி நிஜமா உன்ன முதல் முதலா பாத்தப்போவே ஏதோ ஒருவிதமான நிம்மதிடா எனக்குள்ள..அது ஏன்னு சொல்ல தெரில..ஆனா எனக்கப்பறமும் இந்த குடும்பம் பிரியாம சந்தோஷமாயிருக்கும்நு தோணிச்சு இன்னைக்கு தன்வியோட நியூஸ் அத உறுதிபடுத்துதுடா..என கண்கலங்கினார்..

என்ன அத்தம்மா இன்னைக்கு நடந்தது கடவுளா குடுத்த வரம் இதுக்கு போய் நா எப்படி காரணம் ஆவேன்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நீலாவின் "இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

ஆனா அந்த கடவுள் ரெண்டு வருஷமா இந்த வரத்தை தரலையேமா..ரெண்டு வருஷம்ங்கிறது பெரிய விஷயம் இல்லதான் ஆனா தன்வியோட மாமியார் அத வச்சே பிரச்சனை பண்ணுவாங்க..மாப்ளையோட சப்போர்ட்னால தான் தன்வி எல்லாத்தையும் மறந்து சந்தோஷமாயிருக்கா..இன்னைக்கு நீ வந்த நேரம்தான் இவ்ளோ சந்தோஷம் வந்துருக்கு,ஒரு குறையும் வராதுடா உனக்கு..நீயும் கூடிய சீக்கிரம் பேரனையோ பேத்தியையோ பெத்துகுடுத்துரு என்ன என்று வாஞ்சையாய் தழுவினார்..எதார்த்தமாக தான் ராஜி கூறினார் ஆனால் ஏனோ இனம் புரியா கலக்கம் மகியினுள்..

ஒருவாராக அலங்காரம் முடித்து மணமக்கள்  மேடைக்கு செல்ல தயாரானார்கள்..சிவப்பு நிற லெஹங்கா புடவை,அதற்க்கு பாந்தமாய் வெள்ளை கற்கள் பதித்த நகைகள்,அதற்கேற்ப மேற்கத்திய முறையில் போடப்பட்ட கொண்டை என மகி அனைவரையும் விழி விரிய செய்தால் ராமோ கருப்பு நிற ப்ளேசரில் அவளை மிஞ்சி நின்றான்..வந்தவர்களில் மணமக்களின் ஜோடி பொருத்தத்தை பாராட்டாதவர்களே இல்லை..மணமேடையின் இடதுபுறத்தில் இருந்த மேடையில் லைட் மியூசிக் அரேண்ஜ் செய்யப்பட்டிருக்க ஒவ்வொருவராய் மணமக்களை வாழ்த்திச் சென்றனர்..தன்வியின் கர்ப்பம் உறுதி செய்யப்பட அவளை வீட்டீற்கே அழைத்துச் சென்றுவிட்டான் அவளின் கணவன்,புது பாடல்களாக பாட கீழே இளையவர்கள் அனைவரும் ஆடிக் கொண்டிருந்தனர்,நடுவே பரணி எழுந்து சென்று பாடுபவரின் காதில் ஏதோ கூற அவர் அதனை அறிவித்தார்..இப்போது மணமக்கள் நம்மிடம் தங்கள் காதலை பாடலாக பகிர்ந்து கொள்ள போகிறார்கள்..கூறி முடிப்பதற்குள் மைக் மகியின் கையை சென்றடைய மமகிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை..

பாடு குட்டிமா நீ தான் நல்லா பாடுவியே..

ராம்.,

ஹே ஜஸ்ட் ஃபார் பன் தான கமான்..என்று ஊக்கினான்..மகியும் பாட ஆரம்பித்தாள் அத்தனை நேரம் இருந்த சத்தங்கள் அனைத்தும் அடங்க மகியின் குரல் மண்டபத்தையே நிறைத்தது..

முன்பே வா என் அன்பே வா
கூட வா உயிரே வா
உன் முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்

நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே..

உன் முன்பே வா என் அன்பே வா..
கூட வா உயிரே வா..
உன் முன்பே வா என் அன்பே வா
பூப் பூவாய் பூப் பூவாய்

அவளுக்கு எதிலும் சளைத்தவனல்ல என ராமும் பாட்டை தொடர காதல் அங்கே இனிமையான சங்கீதமாய் பிறப்பெடுத்திருந்தது..

நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டிலில் குடி வைக்கலாமா..
நாம் வாழும் வீட்டுக்குள்
வேர ராரும் வந்தாலேதகுமா....?..
அடுத்த வரிகளை சிறு நாணத்துடனே மகி பாடி முடிக்க அரங்கமே அதிரும் அளவிற்கு கரகோஷ ஒலி வானையெட்டியது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.