(Reading time: 39 - 77 minutes)

ணமேடையில் அமர்ந்தவள் யாரும் அறியா வண்ணம் தன்னவனை கடைகண்களால் ஏறிட்டாள்..பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாய் இருந்தவனை பார்த்தவளின் மனம் கர்வம் கொண்டது இவன் எனக்கானவன் என்று..

கீழே சாக்ட்சி பரணியின் அருகில் அமர்ந்திருந்தாள்..தாத்தாவின் மூலம் திருமணம் பற்றி அறிந்திருந்தவள் அதற்கேற்ற உடைகளை எடுத்து வந்திருந்தாள்..அரக்கு வண்ண பட்டுபுடவை அவளின் நிறத்திற்கு அம்சமாயிருந்தது..தன் அருகில் இருந்தவனை நடு நடுவே ஏறிட்டு கொண்டிருந்தாள்..பச்சை வண்ண சில்க்காட்டன் சட்டையில் பட்டு வேட்டியுடன் அழகாயிருந்தான்..தற்செயலாக அவளை பார்த்தவன் என்ன என்பதுபோல் புருவத்தை உயர்த்த ஒன்றுமில்லையென தலையசைத்துவிட்டு பார்வையை திருப்பிக் கொண்டாள்..ராம் அவர்களை மேடைக்கு அழைக்க மணமக்களின் பின்னால் சென்று நின்று கொண்டனர்..இவ்வாறாக அனைவர் மனதிலும் சந்தோஷம் நிறைந்து வழிய முப்பது முக்கோடி தேவர்களும் வாழ்த்த தன் இனியவளின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு தாலியை கட்டி தன்னில் பாதியாய் ஆக்கிக் கொண்டான்..மகியின் கண்களில் ஆனந்த பளபளப்பு ஆதரவாய் அவள் கையை அழுத்தினான்..இதுவே ஆயுள் முழுதுக்கும் போதும் என்று தோன்றியது மகிக்கு..முதலில் ராஜசேகர் தம்பதியிடம் ஆசிர்வாதம் வாங்க ராஜி மகியை கட்டிக் கொண்டார்..ராஜசேகரோ இன்னைக்கு மாறியே என்னைக்கும் சந்தோஷமா இருடா அப்பா நா இருக்கேன் என அவளின் உச்சந்தலையை வருடினார்..தன்வியும் மகியை கட்டிக் கொள்ள,அவளின் கணவன்,வாழ்த்துக்கள் சிஸ்டர் என்றார் சிநேகமாய்..

அடுத்ததாக மகியின் தாயிடம் ஆசி பெற்று நிமிர அத்தனை நேரம் தேக்கி வைத்திருந்த அனைத்தும் கண்ணீராய் வெளிவர இறுக கட்டிக் கொண்டாள் தன் அன்னையை..மகி அழாதடா சந்தோஷமாயிருக்க வேண்டிய நேரமிது..என்று சமாதானபடுத்த கொஞ்சம் சூழ்நிலை அறிந்தவள் தன்னை கட்டுபடுத்திக் கொண்டாள்வாழ்த்துக்கள் குட்டி பொண்ணு ரொம்ப அழாத மேக்கப் கலைஞ்சு ஒரிஜினல் பேஸ் தெரிஞ்சுட போகுது..வாழ்த்துக்கள் மச்சான் என ராமை கட்டிகொண்டான் பரணி..இருவரின் கைகளிலும் மோதிரத்தை தன் அன்பளிப்பாக குடுத்து மாறற்றச் சொன்னான்..அடுத்து வந்த சாக்ட்சி,மகியின் கையில் அழகிய வேலைபாடுடன் கூடிய இரண்டு வளையல்களை அணிவித்தாள்..ராமிற்கு ஒரு அழகான கோல்ட் வாட்ச்சை பரிசளித்தாள்..அதனை தொடர்ந்து அனைத்து சம்பர்தாயங்களும் முடிய மதிய சாப்பாட்டை முடித்து மணமகன் அறையில் மணமக்களை ஓய்வு எடுத்துக் கொள்ள அனுப்பினர்..

வந்து கட்டிலில் அமர்ந்தவளுக்கு நிம்மதியாயிருந்தது,மாலையை கழட்டி வைத்துவிட்டு திரும்பியவன் அவளின் களைத்த முகத்தை கண்டு,குட்டிமா கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுடா ஈவ்னிங் ரிஸப்ஷன் வேற இருக்கு லேட் ஆய்டும் நீ தூங்கு கொஞ்ச நேரம் பொறுத்து நா உன்ன எழுப்புறேன்..

நீங்க ரெஸ்ட் எடுக்கலயாப்பா??

இல்லடா எனக்கு ஒண்ணும் அவ்ளோ டயர்டா இல்ல நா இங்கதான் இருப்பேன் நீ தூங்கு,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

ராம்

என்ன மகி??

லவ் யு சோ மச்..ரொம்ப ஹாப்பியா இருக்கேன்..எல்லாமே கனவுமாறியிருக்குப்பா..

அவளின் முன் முட்டியிட்டு அமர்ந்து அவளின் கால்களில் கை ஊன்றி லவ் யு மேட்லி டீ பொண்டாட்டிலைப்பே கலர்புல்லா மாறின மாறியிருக்கு..ஆல் பிகாஸ் ஆப் யு ஒன்லிடா..சரி படுத்துக்கோ நைட் நிறைய பேசலாம்..என்று கண்ணடித்துவிலகி நின்றான்..அதே சிரிப்போடு கட்டிலின் ஓரமாக படுக்கச் சென்றவளை மெதுவாக அழைத்தான்.

.என்ன ராம்???

இன்னும் 8 ஹவர்ஸ் தான்டா இருக்கு என்றான் சீரியஸாய்..

அருகிலிருந்த தலையணையை எடுத்து அடித்தவள் நாணத்தோடு அந்தபக்கம் திரும்பிக் கொண்டாள்..இருந்த அலுப்பினால் சில நிமிடங்களில் உறங்கியும் விட்டாள்.. சிறிது நேரத்தில் எழுந்தவள் ராமை தேடினாள் அவன் வெளியே சென்றிருக்க எழுந்து சென்று ப்ரெஷ் ஆகி வந்தாள்..சரியாக கையில் டீயோடு உள்ளே நுழைந்தான் ராம்..

எழுந்துட்டியா குட்டிமா..இந்தா டீ எடுத்துக்கோ,

தேங்ஸ் ராம்..நானே எடுத்துக்க மாட்டேனா..

இல்லடா எனக்கு சாப்டனும் போலயிருந்தது,.அப்படியே உனக்கும் எடுத்துட்டு வந்தேன்..சரி நீ டீ சாப்ட்டு உன் ரூம்க்கு கிளம்பு உன்ன ரெடி பண்றதுக்கு தன்வி வெய்டிங்..

அய்யோ என்ன ராம் இவ்ளோ லேட்டா சொல்றீங்க என்ன நினைப்பாங்க என்னபத்தி..

ஒண்ணும் நினைக்க மாட்டாங்க,அவ தான் உன்ன பொறுமையா வர சொன்னதே இன்னும் டைம் இருக்குடா ரிலாக்ஸ்..

டீயை குடித்துவிட்டு அங்கே சென்றவள் தன்வி சோர்வாய் அமர்ந்திருப்பதை பார்த்து பதட்டமானாள்..சாரிக்கா தூங்கிட்டேன் ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.