(Reading time: 39 - 77 minutes)

ல்ல ராம் அப்படி எதுவும்இல்ல நேத்து நா ஏன் அப்படி இருந்தேன்னு எனக்கே தெரில பட் இப்பவும் குழந்தைய பத்தி யோசிக்குற நிலைமைல நா இல்லை…அதுக்கு மெயின் ரீசன் உங்க வேலைதான் நல்லாபடியா நீங்க இந்த அஸைன்மென்ட்ட முடிக்கனும் அதுக்கு முன்னாடி உங்களுக்கு எந்த டைவெர்ஷனும் இருக்க கூடாது,இன்னொரு விஷயம் எனக்கு டெலிவரினாலே பயம் தன்னால வந்துருது..ஏன்னு சொல்ல தெரில அதுதான் மேபி நேத்து நா டென்ஷனானதுக்கு காரணம்நு நெனைக்குறேன்..ஆனா இப்போ…

இப்போ என் மேலயிருந்த பயம் போயிடுச்சா??என்றான் குறும்பாய்..

இல்ல நம்பிக்கை இன்னும் அதிகமாய்டுச்சு என்றாள் பட்டென்று..

நல்லா பேசுறடீ..

அதென்ன இப்போலா அடிக்கடி டீ போட்டு கூப்டுறீங்க??

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "காற்றினிலே வரும் கீதம்" - விறுவிறுப்பான குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

இப்போ ரொம்ப முக்கியமான டவுட்தான்..

இதுவும் முக்கியம்தான் சொல்லுங்க,

அதென்னவோ உன்ன அப்படி கூப்பிட பிடிச்சுருக்கு,தன்விய கூட நா டீ போட்டு கூப்பிடமாட்டேன்..ஆனா உன்ன அப்படி கூப்பிட்டா நல்லாயிருக்கு அதான்..போதுமா??

ம்ம்ம் ஓ.கே  என்று புன்னகைத்தாள்,சரி டைம் ஆயிடுச்சுப்பா நா போய் ரெடி ஆயிட்டு கீழே போறேன்..என எழுந்தவளின் கையை பிடித்தவன்..பர்ஸ்ட் டைம் ஒரு பிங்க் ஸாரி கட்டிருந்தியே அத கட்டு மகி என்று கூறி பின்கையில் முத்தமிட்டான்..அன்றைய நாளின் நினைவில் முகம் தாமரையாய் சிவக்க குளியலறையில் புகுந்து கொண்டாள்..குளித்து முடித்து வெளியில் வரும்போது ராம் அறையில் இல்லை வெளியே ஹாலில் யாருடனோ போன் பேசிக் கொண்டிருந்தான்..அவனுக்கு காபி எடுத்து வருவதற்காக கீழே இறங்கினாள் மகி..கிச்சனுக்கு சென்று பார்க்க அங்கே ராஜி காலை உணவு தயார் செய்து கொண்டிருந்தார்..

குட்மார்னிங் அத்தம்மா..

குட்மார்னிங் மகி..இந்தா காபி எடுத்துக்கோ..

இல்ல அவரும் இன்னும் காபி சாப்டலல நா அங்க எடுத்துட்டு போய் அவருக்கு குடுத்துட்டே சாப்ட்றேனே..என்றாள் தயக்கமாய்..

அந்த நேரம் அங்கே வந்த தன்வி என்ன மகி இப்போவே பயங்கர கவனிப்பாயிருக்கு இதுல டெல்லி போய்ட்டா கிச்சனே உங்க அவர தேடி போகும் போல..

அக்கா…

சரி சரி உடனே சரண்டர் ஆய்டுவியே போ போ..

அவ அப்படிதான் எதாவது சொல்லிட்டு இருப்பா நீ போடா..காபி கோப்பைகளோடு அறைகதவை திறந்து உள்ளே செல்ல அரவம் கேட்டு பால்கனியிலிருந்து எட்டி பார்த்தான் ராம்..அதற்குள் குளித்து ரெடி ஆகியிருந்தான் அவளை பார்த்து உல்லாசமாக விசிலடித்தவன்..ஒரு கப்பை எடுத்து கொண்டான்..காபி குடித்துவிட்டு கண்ணாடியின் முன் சென்று தலையில் கட்டியிருந்த துண்டை கழட்டி முடியை உலரவைத்து..தளர பின்னலிட்டு ராஜி கொடுத்திருந்த மல்லியை சூடிக்கொண்டாள்..கண்ணாடியில் ராமின் பார்வை தன்னை துளைப்பதை பார்த்தவளுக்கு கன்னம் அதுவாகவே சிவந்தது..கண்ணிமைக்கும் நேரத்தில் அவளை நெருங்கியிருந்தவன் பின்னிருந்து இறுக அணைத்துக் கொண்டான்..சில நிமிடத்தில் அவளை விடுவித்தவன்..உன்னை இவ்ளோ பக்கத்துல வச்சுட்டு சும்மாயிருநு சொன்னா நா என்னடா பண்றது..பப்ளிக் எக்ஸாம் எழுதுறதவிட கஷ்டமாயிருக்குடீ..என்று நொந்து கொண்டான்,

நா எப்போ சும்மாயிருக்கனும்னு சொன்னேன்,அவள் கூறியதை அவன் உணர்வதற்குள்,கட்டிபுடி வைத்தியம்லா போஷன்ல உண்டு மத்ததெல்லாம் தான் ஔட் ஆப் சிலப்ஸ்.,என்று கூறிவிட்டு அவன் கையில் சிக்காமல் சிட்டாய் பறந்து வெளியே ஓடிவிட்டாள்..

சரியான வாலு என்று தன்னவளை ரசித்தவாறே அவளை பின்தொடர்ந்தான் ராம்..

ஹாய் ப்ரெண்ட்ஸ்..நல்லாயிருந்துருக்கும்நு நம்புறேன்....கண்டிப்பா படிச்சுட்டு கருத்துக்களை ஷேர் பண்ணுங்க..மேரேஜ் எபிசோட் டீடெய்ல்ல்டா குடுக்கனும்னு ஆசை அதான் FB குடுக்க முடில.

தொடரும்

Episode # 09

Episode # 11

{kunena_discuss:952}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.