(Reading time: 39 - 77 minutes)

தேன் மழை தேக்கத்தில் நீ தான்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா..
நான் சாயும் தோளில் மேல்
வேறுயாரும் சாய்ந்தாலே
தகுமா....?..

நீரும் செங்குள சேரும்
கலந்தது போலே
கலந்தவளா

போட்டோ செஷன் முடிந்து இரவு உணவை முடித்துவிட்டு மணமக்கள் ராமின் வீட்டிற்கு செல்ல காரில் அமர்ந்தனர்..அவர்கள் இருவர் மட்டும் ஒரு காரில் செல்ல மற்றவர்கள் பின் தொடர்ந்தனர்..

என்ன மகிகுட்டி இன்னும் 1 ஹவர் தான் இருக்கு என்ன பண்ண போற??

போங்கப்பா செம டயர்டாயிருக்கு..நீங்க என்னடானா சும்மா விளையாடிகிட்டு..

ஹே நா சீரியஸ்ஸா தான் பேசுறேன்..இவ்ளோ நாள் என்ன சுத்தல்ல விட்டதுக்கு இன்னைக்கு வட்டியும் முதலுமாயிருக்கு..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "நினைத்தாலே இனிக்கும்..." - கல்லூரி காதல் கதை...

படிக்க தவறாதீர்கள்... 

அவன் பேசிய தொனியில் இருக்கும் உண்மையை அறிந்தவளுக்கு நிஜமாகவே கை நடுங்க ஆரம்பித்தது..என்னதான் அவளின் ராம்தான் என்றாலும் இந்த மாறி விஷயங்களெல்லாம் எப்போதுமே மகிக்கு சற்று பீதியை தான் கொடுக்கும்..கல்லூரி  காலத்தில் அவளின் தோழிகளே இவளை வெறுப்பேத்த வேண்டுமென்றால் உன்ன கல்யாணம் பண்ணபோறவர்லா தெய்வம்டீ..நாங்க கிண்டலா ஏதோ பேசுறதுக்கே காததூரம் ஓடுற இதுல உன்னவச்சு குடும்பம் நடத்தி குழந்தை பெத்துகிறதுக்கெல்லாம்….மம்ம்ம் எவன் தலையில மாட்டனும்னு எழுதிருக்கோ என்று கூறி சிரிப்பார்கள்..அவளை ஓரகண்ணால் பார்த்தவனுக்கு சிரிப்பு தாளவில்லை..நா தான் கலாய்க்குறேன்னா இவ என்ன இப்படியிருக்கா என்று அமைதியாகவே காரை ஓட்டினான்..வீட்டை அடைந்துவிட ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து ராமை தன்வியின் கணவர் கூட்டிச் செல்ல..ராஜி மகியை அழைத்து விளக்கேற்றச் சொன்னார்..அதன்பின் தன்வியை அழைத்து மகிக்கு தேவையானதை பார்த்து கொள்ள கூறிவிட்டு உள்ளே சென்றார்..

அக்கா கங்ராட்ஸ்..இனி நீங்க உடம்பை கவனமா பாத்துக்கனும்..

சரிங்க பாட்டி..இன்னைக்குதான் கல்யாணமாயிருக்கு அதுகுள்ள என்னவோ 10 புள்ள பெத்தமாதிரி அட்வைஸு..ம்ம்ம்,சரி போய் இந்த புடவையை கட்டிட்டு வா..

புடவை கட்டச் சென்றவளின் செல்லில் அழைப்பு வர எடுத்து பார்த்தவளுக்கு ஒருபுறம் சந்தோஷமாகவும் ஒருபுறம் வெட்கமாகவும் இருந்தது..கால் வந்திருந்தது அவளின் கல்லூரி தோழியிடமிருந்து..அவர்களின் கேங்கில் திருமணமான அனைவருக்கும் திருமண வாழ்த்து அழைப்பு வருகிறதோ இல்லையோ அன்றிரவு அழைப்பு கண்டிப்பாக வரும்..ஐயோ இவளுங்க வேறயா என்றபடியே அழைப்பை எஏற்றாள்..கோரஸ்ஸாக ஹலோ புதுபொண்ணு என்று கிட்டதட்ட அலறினர்..

ஏண்டி அவ்ளோ பேரும் லைன்ல இருகீங்களா ஒருத்தியாவது கல்யாணத்துக்கு வந்தீங்களா யாரும் பேச வேணாம்..

ஹே மகி அப்படியெல்லாம் தப்பிக்கலாம்னு நினைக்காத..வேற ஊர்ல கல்யாணத்தை வச்சது உன் தப்பு,சரி விடு ரெடி ஆய்ட்டியா??-ஐஷு

ம்ம்ம் இப்போதான்..

அடடா ம்ம்ம் அப்போ நாங்க சீக்கரமா போனை வச்சுரோம்..எப்படியும் லவ் பண்ண காலத்துல ராம் அண்ணாவ பக்கத்துல கூட விட்ருக்கமாட்ட இதுக்கு மேல அவரை நாங்க வேற கொடுமை படுத்தனுமா??-சத்யா..

அவரு ஒண்ணும் அப்படிலா கிடையாது சும்மா ஓட்டாதீங்க..

மறுமுனையில் பலத்த சிரிப்பு சத்தம் கேட்க,பாக்கதான போறோம் பத்தே மாசத்துல அத்தைனு எங்களை கூப்பிட ஆள் வருதா இல்லையானு,-அம்பிகா..

ம்ம்ம் பாருங்க பாருங்க என கூறிவிட்டு போனை வைத்தவளோ விட்டால் அழுதுவிடும் நிலையில் இருந்தாள்..மறுபடியும் அதே பேச்சா ஹய்யோ என்றிருந்தது மகிக்கு..புடவை மாற்றிவிட்டு வந்தமர்ந்தவளுக்கு தளர பின்னி தலைநிறைய மல்லிகையை சூட்டி அலங்கரித்தாள்..

ஹே மகி உன்னோட ட்ரேட்மார்க் ஸ்மைல் எங்க அது மட்டும்தான் மிஸ்ஸிங்- தன்வி..

ஏதோ பேருக்கு சிரித்தவள் மீண்டும் தன் எண்ணவோட்டதிலேயே இருந்தாள்..

என்னடா டென்ஷனா இருக்கா என்று ஆதரவாய் தோளை அழுத்தினாள்..

ஆமாக்கா..என்றாள் பாவமாய்,.

அவளின் முக பாவத்தை பார்த்தவள் சிரித்தேவிடட்டாள்..நல்ல பொண்ணு..என்ன டென்ஷன்..என்னவோ அவன இப்போதான் பர்ஸ்ட் டைம் பாக்கபோற மாறி பீல் பண்ற..வா போகலாம் கொஞ்சமாவது சிரிச்சாமாறி வாம்மா இல்லனா உன் மாமியார் நா தான் உன்னை ஏதோ பண்ணிட்டேன்னு நினைச்சுக்க போறாங்க என்றாள் விளையாட்டாய்..ஹாலில் பால் சொம்புடன் காத்திருந்த ராஜி அதை மகியின் கையில் கொடுத்தார்..நீ போடா என்று அன்பாய் அனுப்பி வைத்தார்..ஒவ்வொருபடி ஏறும் போதும் அவளின் பீபியும் ஏறுவதை போலிருந்தது..ஒரு வழியாக அறை வாசலை அடைந்தவள் கைகள் சிலிர்க்க கதவை திறந்தாள்,முதன்முதலாக வந்தபோது ராமின் அறையில் நடந்தது நியாபகம் வந்தது..அவளையும் அறியாமல் வயிற்றினுள் குளிர் பரவியது..உள்ளே சென்று கதவை தாழிட்டவள்..நடைபழகும் குழந்தையாய் அடிமேல் அடி வைத்து நகர்ந்தாள்…பால்கனியில் நின்றிருந்தவன் இவளின் கொலுசொலியில்உள்ளே வந்தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.