(Reading time: 39 - 77 minutes)

கூறியது போலவே தன் வீட்டிலேயே மெஹந்தி பங்ஷனை ஏற்பாடு செய்து விஜியையும் ஒத்துக் கொள்ள வைத்து ஏற்பாடுகளை முடித்திருந்தான்..அந்த நாளும் வந்தது..மதியத்திற்கு மேல் ராமின் வீட்டிலிருந்து தன்விகாவும் அவனுக்கு அக்கா முறையான கவிதாவும் மகியை அழைத்துச் செல்ல வந்தனர்..வந்தவர்கள் மகிக்காக கொண்டு வந்திருந்த துணிப்பையை அவளிடம் கொடுத்து மாற்றிவிட்டு வர கூறினர்..அழகான வேலைபாடுடன் கூடிய கரும்பச்சையில் தங்க நிற துப்பட்டாவோடு அழகாயிருந்தது அந்த லெஹென்கா சோலி..அதை பார்த்த சகோதரிகள் இருவரும் சிரித்தனர்..

ஏன் அக்கா சிரிக்றீங்க??நல்லாயில்லயா??-மகி..

ஹே மகி க்யூட்டா இருக்குடா நாங்க சிரிச்சதுக்கு காரணம் வேற,எங்க தம்பிநு ஒரு தங்க கம்பி இருக்கானே அவனெல்லாம் அவனுக்கு சட்டை எடுக்கவே டைம் ஒதுக்க மாட்டான் இப்போ என்னடானா உனக்கேத்த மாறி பாத்து பாத்து வாங்கிருக்கான்..புடவை எடுக்க போனப்பவும் உங்க அலம்பல் தாங்கலயாமே அம்மா சொன்னாங்க என்று மறுபடியும் சிரித்தனர்

வெட்கத்தில் தலை குனிந்தாள் மகி..இப்போவே ஆரம்பிக்காத மகி இன்னும் வீட்டுல என்ன ரொமன்ஸ்லா காத்திட்டு இருக்கோ தெரில சார் ரொம்ப நேரமா வெயிட்டிங்..வா வா அங்க போய் பொறுமையா வெட்கபட்டுக்கலாம் என்றாள் கவிதா..

ஒருவாராக வீட்டை அடைந்தனர் பெண்கள் அணி..ராஜி இன்னொரு பெண்மணியோடு சேர்ந்து ஆரத்தி எடுத்து வரவேற்றார்..மகிக்கோ ஒருவித பயம் இருந்து கொண்டேயிருந்தது,மகியின் உறவினர்கள் அனைவரும் திருமணத்திற்கு முந்தைய நாள் வருவதால் இப்போது ராமின் சில நெருங்கிய சொந்தங்கள் முன்னினையில் அவள் ஏதோ தனியாய் விடப்பட்டதாய் உணர்ந்தாள்..ஆனால் அனைத்துமே ராமை பார்க்கும் வரைதான்..மாடியிலிருந்து இறங்கி வந்தவனின் பார்வை முழுவதும் மகியின் மேல்தான்..பார்வையாலே பருகிக் கொண்டிருந்தான்..அங்கிருந்த இளவட்டங்கள் இரண்டு மூன்று பேர் ஓவென்று ஆர்பரித்தனர்..ராஜி மகிக்கும் விஜிக்கும்  ஒவ்வொருவரையாக அறிமுகப்படுத்தினார்,ராஜியுடைய அக்கா,ராமின் பாட்டி,ராமின் அத்தை என அனைவருமே அவளிடம் அன்போடு பழகினர்..அதைவிடவும் அவளது அன்னையை அவர்கள் ஒதுங்கவிடவேயில்லை..மகிக்கு அதுவே திருப்தியாக இருந்தது..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்... 

அனைத்து ஆர்பாட்டங்களும் முடிந்து ஒரு வழியாக மெஹந்தி ஆரம்பமானது..இவ்ளோ பேர் இருக்கும் போது ராம் வந்து தன் அருகில் அமர்வான் என எண்ணுவது முட்டாள்தனம் என்று தெரிந்தாலும் அவள் மனம் அவனையே நாடியது..எனக்காக இவ்வளவு பண்ணிருக்காரு அதுவே பெரிய விஷயம் நாம இப்படி முகத்தை உம்மென்று வைத்திருந்தால் நல்லாயிருக்காது என்று சற்றே தலை நிமிர்ந்தவள்..கையில் மருதாணியுடன் தன் அருகில் வந்து அமர்ந்தவனை பார்த்து வாயடைத்து போனாள்..அனைவருக்குமே ஆச்சரியம்தான்..தன்வி தான் ஆம்பித்தாள்..

டேய் ராம் நீ என்ன பண்ணபோற..அழகாக மெஹந்தி வரையனும் நீ எதாவது கிறுக்கி வச்சுடாத தள்ளு அவங்க போடட்டும்..

ஹே என் பொண்டாட்டிக்கு நா தான் முதல்ல போட்டுவிடுவேன்..

மறுபடியும் அங்கே இளசுகளின் ஆரவாரம்,பெரியவர்களோ தங்களுக்குள் சிரித்து கொண்டனர்..பரணி ராமை அழைத்து டேய் இருந்தாலும் இப்போவே மகிக்கு நீ இவ்ளோ ஐஸ் வைக்ககூடாதுடா..என்றான்..ராமின் அத்தையோ,டேய் கல்யாணத்துக்கு அப்பறம் காலம்பூரா உன் பொண்டாட்டிக்கு மருதாணி வச்சுவிடு இப்போ இடத்தை காலி பண்ணு என்றார் சிரிப்பாய்..யார் என்ன கூறியும் ராம் விடுவதாய் இல்லை..இதனை கண்ட ராமின் பாட்டி,அவன் பிடிவாதம் தான் எல்லாருக்கும் தெரியுமே கல்யாணப் பொண்ணு மருதாணி வைக்குறதே புருஷனுக்காக தான்,அது எப்படி இருந்தா என்ன..நல்ல சிவந்தா போதும்..டேய் ராம் நீ வைடா என்றார் அசால்ட்டாய்..

லவ் யு மை காயூ டார்லிங் என பாட்டிக்கு ஃலையிங்கிஸ் கொடுத்தான்..அடிபடவா..போடா சீக்கிரம் ஆரம்பிச்சு வை என்றார் நம்மோட சூப்பர் வுமன் காயூ..

ராம் தன்னவளின் எதிர்புறம் அமர்ந்தான்..இருவரின் கண்களும் காதலால் சிக்குண்டிருந்தன,ஒரு பார்வையே ஓராயிரம் அர்த்தம் கூறியது மகிக்கு,ராம் தன் கையை முன் நீட்ட தானாகவே கைகள் உயர்ந்தது மகியிடம்..ஐந்து நிமிடங்கள் என்ன நடந்ததென்று எதுவும் தெரியவில்லை மகிக்கு,கைகளை விடுவித்த நேரம் சுயநினைவிற்கு வந்தவள் கையைப் பார்த்தாள்..அழகான இரு பூக்கள் அதனை இணைப்பது போன்று ஒரு கொடி..பூக்களின் இதழ்கள்  ராம் மகி பெயர்களை தாங்கியிருக்க,கொடியின் மேலே Loves என்று எழுதியிருந்தது..பார்த்தவர்கள் அனைவரும் ராமை பாராட்ட தன்னவளின் பதிலுக்காக அவளை நோக்கியவனுக்கு அவளின் கண்களே பாராட்டுபத்திரம் வாசித்தன...

டேய் கூடவே தானடா சுத்துற அப்பறம் எப்படி மச்சான் இதெல்லாம்?? – பரணி..

அதெல்லாம் பை பெர்த் டலெண்ட் இருக்குடா..நீயும் லவ் பண்ணு பல திறமைகள் வெளிய வரும் உனக்கும்..-ராம்..

சிறியவர்களின் ஆட்டம் பாட்டம் என திருமண வீட்டிற்கே உரிய அத்தனை களைகளும் அங்கே அரங்கேறியிருந்தது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.