(Reading time: 39 - 77 minutes)

மாண்ணா,.மொதல்ல நீங்க என்னை மன்னிச்சுடுங்க..நீங்க எங்க ஹாஸ்பிட்டல் பத்தி சொன்னப்போ உங்ககிட்ட ஹார்ஷ்ஷா பிகேவ் பண்ணிட்டேன்..ஆனா இப்போ அதெல்லாம் உண்மையோநு தோணுது அண்ணா..இப்போலா அதர்வா அங்கிளும் விநாயக் அங்கிளும் ரொம்ப மாறிட்டாங்க உங்களப்பத்தி தான் அப்பப்போ கேட்பாங்க..தாத்தாக்கும் உடம்பு முடில..எனக்கு அங்க தனியாயிருக்கவே பயமாயிருக்கு..அதான் தாத்தாட்ட சொல்லிட்டு இங்க வந்துட்டேன்..இங்க ஏர்போர்ட்ல இருந்து வர வழியில் நாலு பேர் என் கேப்பை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சுட்டாங்க ரொம்ப நேரமா அங்கயிங்கநு சுத்தி இந்த ஏரியால பாதி வழியில் இறங்கி இந்த பக்கமா ஓடி வந்து ஒளிஞ்சுக்கிட்டேன்..பட் நல்லவேளையா உங்க கல்யாணம் நடக்குற இடத்துக்கே வந்துருக்கேன் என்று பெருமூச்சுவிட்டாள்..

அதுவரை அமைதி காத்தவன் பேச்சின் பிற்பாதியை கேட்டு மகியை முறைத்தான்..என்ன மகி இது யாரு என்னனு தெரியாம இப்படியா இறங்கி வருவ ஒருவேளை உனக்கு போன் பண்றாங்களே அவங்க எதாவது ப்ளே பண்ணிருந்தா என்ன ஆகுறது..??

அப்போதுதான் அந்த ஒரு கோணத்தையே யோசித்தவள்..சாரி ராம்..எனக்கு அது தோணவேயில்ல,இனி கேர்புல்லாயிருக்கேன்..என்றாள் தலை குனிந்தவாறே..

சாரி அண்ணா என்னாலதான் எல்லாம் அண்ணிய திட்டாதீங்க..

சரி சரி விடுங்க அடுத்து நடக்கப் போறத பாப்போம் எல்லோரும் எழுந்துட்டாங்கநா உங்களை தேட ஆரம்பிச்சுருவாங்க..-பரணி..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மனோஹரியின் "காதல் பின்னது உலகு" - கல்யாணமாம் கல்யாணம்…

படிக்க தவறாதீர்கள்... 

ஹே சாக்ட்சி நீ கேட்டுட்டேயிருப்பியே இதான் பரணி..ஹாய் என்று புன்னகைத்தாள்..அந்த புன்னகைகுள்ளே ஆயிரம் அர்த்தங்கள் புதைந்திருப்பதாய் தோன்றியது மகிக்கு..

மகி யார் கேட்டாலும் நம்ம ஆபிஸ்ல வொர்க் பண்றதா சொல்லு உன் கூடவேயிருக்கட்டும்..பரணி,மகி ஸ்டேஜ்க்கு வந்தப்பறம் இவளை நீதான் பாத்துக்கனும்என்று கூறிவிட்டு திருமணத்திற்கு தயாராகச் சென்றனர்

அடுத்த இரண்டு மணி நேரம் இறக்கைகட்டிக் கொண்டு பறந்தது..மகியை அனைவரும் அலங்கரிக்கத் தொடங்க,சாக்ட்சியும் அவளுக்கு உதவிக் கொண்டிருந்தாள்..மணப்பெண்ணை மேடைக்கு அழைக்க அவளை அழைத்துச் செல்ல வந்த தன்வி மகியிடம்,ஹே மகி இன்னும் 11ஹவர்ஸ் இருக்குநு ராம் சொல்ல சொன்னான்..என்னனு கேட்டா உன்ட்டயே கேட்டுக்க சொல்றான் என்னது???

மகிக்கோ ஐயோவென்றிருந்தது,.இந்த ராமை என்ன பண்றது அக்காகிட்ட போய் என்ன சொல்லி வச்சுருக்காரு..இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு கேக்குது இவருக்கு..என தனக்குள் நொந்து கொள்ள அதற்குள் அவளை உலுக்கிஎடுத்துவிட்டாள் தன்வி சரி ரெண்டு பேரும் என்னவோ பண்ணுங்க இப்போ ஐயர் கூப்டுறாரு இந்த மாலைய போடு வா போலாம் என்றவாறு அவளை அழைத்துச் சென்றாள்..

அங்கே ஐயர் கூறும் மந்திரங்களை கூறியவண்ணம் மகியின் அறை வாசலையே பார்த்திருந்தவனை அதிக நேரம் சோதிக்காமல் வெளியே வந்தாள் நம் மணப்பெண்..அழகான மாம்பழநிற பட்டில் அடர்பச்சை வண்ண பார்டரோடு முந்தானையில் அவர்கள் இருவரின் பெயர்களைகயும் தாங்கியிருந்தது அந்த அழகான முகூர்த்தபுடவை..அதற்கேற்றாற் போல டெம்பிள் ஜுவல்லரி செட் அணிந்து அழகான ஒப்பனையும் தலைநிறைய மல்லியுமாய் மணபெண்ணுக்கே உரிய நாணம் அழகுக்கு அழகு சேர்க்க தெய்வ கன்னிகையாய் மிளிர்ந்தாள் மகி..தன் மகளை மணகோலத்தில் கண்ட தாய்க்கோ மனம் கொள்ளா மகிழ்ச்சி கண்களில் நீராய் பிரதிபலித்தது..அவரை ஆதரவாய் தாங்கிக் கொண்டார் ராஜி..அவளுக்காகவே ஒலிப்பெருக்கியில் அழகிய பாடல் ஒலித்தது..

மண மகளே மண மகளே 
வாழும் காலம் சூழும் மங்களமே மங்களமே 
குண மகளே குல மகளே 
பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே
குற்றம் குறை இல்லா ஒரு கொங்கு மணிச்சரமே
மஞ்சள் வளமுடனே என்றும் வாழணும் வாழணுமே
மண மகளே மண மகளே 
வாழும் காலம் சூழும் மங்களமே மங்களமே 
குண மகளே குல மகளே 
பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே

வலது அடி எடுத்து வைத்து 

வாசல் தாண்டிவா வா 
பொன் மயிலே பொன் மயிலே
புகுந்த இடம் ஒளிமயமாய் 
உன்னால் தானே மாறும் 
மாங்குயிலே மாங்குயிலே
இல்லம் கோயிலடி 
அதில் பெண்மை தெய்வமடி
தெய்வம் உள்ள இடம் 
என்றும் செல்வம் பொங்குமடி

மண மகளே மண மகளே 
வாழும் காலம் சூழும் மங்களமே மங்களமே 
குண மகளே குல மகளே 
பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.