(Reading time: 39 - 77 minutes)

ம்ம்ம் அப்புறம் என்ன நாளைக்கே எல்லா கிப்ட்யையும் எடுத்துக்கோங்க இப்போ இடத்தை காலி பண்ணுங்க..என அவன் கையை பற்றி வெளியே இழுத்தாள்..

குட்டிமா எக்கச்சக்கமா மாட்டிடட்ட நாளைக்கு உ னக்கு இருக்கு..இன்னும் ஒரு 26 ஹவர்ஸ் தான்..அதுக்கப்பறம் பாரு என்றபடியே வெளியே சென்றான்..

கதவை சாத்திவிட்டு திரும்பி கண்ணாடியை பார்த்தவளுக்கு அவர்கள் இருவரும் நின்றகோலம் மனக்கண்ணில் தோன்றியது..அதை ரசித்து சிரித்தவள் வெளியே மேளச் சத்தம் கேட்க தன்னை அழைக்க வந்துவிடுவார்கள் என தயாராகினாள்..சற்று நேரத்தில் அவளை மேடைக்கு அழைத்துச் சென்று அமர வைக்க லேசாக விழி உயர்த்தியவளின் எதிரே தனக்கே உரிய மந்தகாச புன்னகையுடன் அமர்ந்திருந்தான் ராம்..மகியின் அப்பா அம்மா ஸ்தானத்தில் அவளின் பெரரியப்பா பெரியம்மா நிச்சயதட்டை வாங்கிக் கொள்ள அங்கே ராஜசேகர் ராஜி தம்பதியினர் பெற்றுக் கொண்டனர்..மகியை நிச்சய புடவையை மாற்றி வர சொல்லி அனுப்பிவிட்டு..இங்கே மேடையில் மணமக்களுக்கான இருக்கைகள் தயாராக்கப்பட்டன..

சில நிமிடங்களில் வெளியே வந்தவளை கண்களுக்குள் நிரப்பினான் ராம்..ராமின் சட்டைக்கு ஏத்தவாறு இந்த புடவையும் பிங்க் காம்பினேஷன்லயேயிருந்ததுமஞ்சள் நிற பட்டில் பிங்க் பார்டர் கலந்த செல்வ் டிசைன் பட்டுகட்டி கழுத்தில் மல்லிகைமாலை தழுவ மேடை ஏறினாள் மகி..ராமிற்கோ இந்த புடவையா எடுத்தோம் அன்னைக்கு பாத்ததவிட ரொம்ப அழகா இருக்கே..இவ சும்மாவே நம்மள தவிக்க விடுவா இதுல இப்படி செமயா மேக்கப்லா போட்டு இத்தனை புடவை மாத்தி..ம்ம்ம்ம் கல்யாணத்துல பசங்க நிலைமை பாவம்தான் என ஆண்குலத்திற்காக வருத்தப்பட்டு கொண்டிருக்க அவன் காதருகில் வந்த பரணி,டேய் ராம் உன் பக்கத்துல தான்டா உக்கார வைக்க போறாங்க அதுக்குள்ள ஏன்டா இப்படி பாத்து வைக்குற மானம் போகுது கொஞ்சம் ஒழுங்கா உக்காருடா என்றான்,அப்பொழுதுதான் தான் அவளையே பார்த்துக் கொண்டிருப்பது உறைக்க சட்டென பார்வையை திருப்பிக் கொண்டான்..அடுத்ததாக நிச்சய மோதிரம் இருவரின் கைகளிலும் கொடுக்கப்பட முதலில் ராமும் பின் மகியும் மோதிரம் மாற்றிக் கொண்டனர்..பரணி அவர்களுக்காக கேக் ஆர்டர் செய்து இப்போது அதை மேடைக்கு எடுத்து வந்தான்..இளசுகளின் கரகோஷத்தில் கேக்கை கட் செய்து மணமக்கள் ஒருவொருக்கொருவர் ஊட்டிவிட ஆட்டம் பாட்டம் என அந்த இடமே திருவிழாகோலம் பூண்டது...

இரவு உணவை முடித்துவிட்டு தத்தம் அறைகளுக்குச் செல்லும் நேரம் ராம் ஏதோ செய்கை காட்டினான்..என்னவென்று புரியாமல் மெசெஜ் அனுப்புமாறு கூறிவிட்டு தன் அறைக்குள் நுழைந்தாள்..மெசெஜை பார்த்தவளுக்கு புன்னகை அரும்பியது..”22 ஹவர்ஸ் மோர்..”என்றிருந்தது..அதற்கு மகிஐ அம் வெய்ட்ங் என அனுப்பிவிட்டு வெளியே எட்டி பார்த்தாள் எதிர்பார்த்தை போன்றே அவன் இவள் அறையைதான் பார்த்து கொண்டிருந்தான்..யாரும் அறியா வண்ணம் தன் மூக்கின் மேல் கை வைத்து அழகுகாட்டிவிட்டு உள்ளே ஓடிவிட்டாள்..ராட்சசி..என்று தனக்குள்ளே கூறி சிரித்து கொண்டான் ராம்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்... 

மறுநாள் காலை மிகவும் இனிமையாகவே விடிந்தது..காலை 3 மணிக்கு எழுந்துவிட்டாள் மகி ஏனோ தூக்கம் அதற்குமேல் வரமறுத்தது.குளித்து முடித்து சல்வாரை அணிந்தவள்,.தன் அறையிலிருந்த பால்கனியில் போய் தலைமுடியை காய வைக்க தொடங்கினாள்....அந்த நிசப்தமான இருளில் வானின் நட்சத்திரங்களை ரசித்து கொண்டிருந்தாள்..திடீரென்று ஏதோ தோன்ற சட்டென கீழே பார்த்தவளின் கண்ணில் மண்டப வாசலின் உட்புறமாய் யாரோ நிற்பதாய் தோன்ற கூர்ந்து கவனித்தாள்..ஏதோ ஒரு பெண் யாருக்கோ பயந்து நிற்கிறாள் என்பது உறுதியாக கீழே சென்று மெதுவாக ஹலோ என்று அழைத்தாள்.எதிர்பாராத அழைப்பில் பயந்து கத்த போனவளை வாய்பொத்தி உள்ளே வெளிச்சத்திற்கு அழைத்து வந்தவள்.,ப்ளீஸ் பயபடாதீங்க நா உங்களுக்கு ஹெல்ப் பண்ணதான் வந்தேன்..ரிலாக்ஸ் என அவள் முதுகை தடவினாள்..சற்றே நிம்மதியாய் உணர்ந்த பெண்..லேசாக சிரித்து பதட்டத்தை மறைக்க முயன்றாள்..

10 மணி முகூர்த்தம் ஆதலால் இன்னும் அவ்வளவாக யாரும் எழுந்திருக்கவில்லை..சொல்லுங்க யாரு நீங்க??ஏன் இங்க நிக்குறீங்க அதுவும் இந்த நேரத்துல??-மகி..

நா டெல்லில இருந்து வரேன்..மிஸ்டர் ராம்ம பாக்கனுமே,நீங்க??என்று தயங்கி தயங்கி கூறினாள்..

நா தான் ராமை கல்யாணம் பண்ணிக்க போறேன்..மகி..

..தேட்ஸ் க்ரேட்..அண்ணி கங்க்ராட்ஸ்..என ஆர்பரித்தாள்..திடீரென்று அண்ணியென்று அழைத்ததும் மகிக்கு ஆச்சரியமாகிவிட்டது..சரி நீங்க இருங்க நா ராம்க்கு கால் பண்ணி வர சொல்றேன் என்றவாறே ராமை மொபைலில் அழைத்தாள்..தூக்க கலக்கத்தில் போனை எடுத்தவன் மணியை பார்த்துவிட்டு இந்த நேரத்தில் மகி ஏன் அழைக்கிறாள் என வேகமாக காலை அட்டெண்ட் செய்தவன்..

மகி என்னாச்சு இந்த டைம்ல கால் பண்ற எங்கயிருக்க??

அவன் பதட்டத்தை உணர்ந்தவள்,ராம் எனக்கு ஒண்ணுமில்லை உங்களை பாக்க டெல்லிலருந்து சாக்ட்சிநு ஒருத்தங்க வந்துருக்காங்க..நா கீழே டைனிங் ஹால்ல இருக்கேன் கொஞ்சம் வரீங்களா??

வாட்???சாக்ட்சி???

அடுத்த ஐந்தாவது நிமிடம் பரணியோடு அங்கு வந்து சேர்ந்தான் ராம்..அவன் மகியை பார்த்து பேசுவதற்குள் சற்று தள்ளி நின்றிருந்த சாக்ட்சி ராமிடம் ஓடி வந்தாள்..ராம் அண்ணா

ஹே சாக்ட்சி ..நீ எப்படிடா இங்க??தனியாவா வந்த அதுவும் இந்த நேரத்துல..???

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.