(Reading time: 39 - 77 minutes)

பாத்தியா நீ குழந்தைநு அடிக்கடி ப்ரூவ் பண்ணீட்டேயிருக்க பாரு..நீ என் உயிர்டா நமக்குள்ள என்ன இந்த பேச்செல்லாம்..

இல்லப்பா..என்ன முக்கியமா நெனைச்சு யாரும் இவ்ளோ பண்ணதில்ல,இப்போதான் அப்பாவ ரொம்ப மிஸ் பண்றேன்..அவரு இதெல்லாம் பாத்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்ருப்பாரு..

ராமிற்கு அவளின் நிலைமை புரிந்தது..ஆதரவாக தாங்கிக்கொண்டான்..நா தான் ஏற்கனவே சொன்னேன்ல இனி உனக்கு எல்லாமுமாய் நாயிருக்கேன்னு அப்புறம் என்ன ஹாப்பியா இருடா..ம்ம் என்று தலையாட்டியவள் அவனைவிட்டு விலகினாள்..அவளை சகஜமாக்குவதற்காக ஆனா குட்டிமா உன்ன இப்படி பக்கத்துல வரவைக்குறதுக்காகவே உனக்கு அடிக்கடி சர்ப்ரைஸ் குடுக்கனும் என்றான் சீரியஸாய்..வ்வவ்வவ்வவ என அழகு காட்டிவிட்டு கீழே ஓடிவிட்டாள்..இவ்வாறாக இனிமையாய் பொழுது கழிய இரவு மகியையும் விஜியையும் ஹாஸ்ட்டலில் விட்டுவிட்டு வந்தான் ராம்..எவ்வளவு கூறியும் அவர்கள் வீட்டில் தங்கிக்கொள்ள மறுத்துவிட்டார் விஜி..

திருமணத்தின் முந்தைய நாள் காலையிலேயே மண்டபத்திற்கு வந்துவிட்டனர் மகியும் அவள் அன்னையும்,உறவினர்கள் ஒருவொருவராய் வர ஆரம்பித்திருந்தனர்நேரம் ஆக ஆக ஏனோ மகியின் மனம் ஒரு நிலையிலில்லை..தன் தாயை பிரிய போகிறோம் என்ற உணர்வா,தன் மனதிற்கு பிடித்தவனையே மணக்க போகும் பூரிப்பா,என்னவென்று சொல்லத் தெரியவில்லை..மேக்கப் போடுவதற்காக வந்த பெண்மணியின் குரலில் சிந்தனை கலைந்தவள் நிச்சயதார்த்தத்துக்கு தயாராகத் தொடங்கினாள்..சிறிது நேரத்தில் வாசலில் மாப்பிள்ளை அழைப்பு மேளச்  சத்தம் கேட்க உன் ஆளு வந்தாச்சுடீ என்றபடியே உள்நுழைந்தாள் திவ்யா..மகியை கண்டவள் விசிலடித்தவாறே ட்ரெஸிங் டேபிள் மீது ஏறி அமர்ந்தாள்..அமூல்பேபி செம்மையா இருக்க போ..உன் ஆளு உன்ன இன்னைக்கே தூக்கிட்டு ஓட போறாரு..அவள் கூறியதை கேட்ட அழகு நிலைய பெண்ணும் சிரிக்க அவள் தொடையை திருகினாள் மகி..உண்மைய சொன்னா ஏண்டி அடிக்குற போ நா கோவமா கிளம்புறேன் என்றவாறே பொய் கோவத்துடன் வெளியே சென்றுவிட்டாள்..அடுத்ததாக தன்வியும் ராஜியும் மகியை காண உள்ளே வந்தனர்..

மகி ரொம்ப அழகாக இருக்கடா என்றார் ராஜி. அம்மா உன் சாமியாரே கல்யாணம் பண்ணிக்க ரெடிஆயிட்டான்னா சும்மாவா என்றாள் தன்வி..சில நிமிடங்களில் அவர்களும் கிளம்ப மேக்கப்பை முடித்துவிட்டு அந்த பெண்ணும் கிளம்பிச் சென்றாள்..தன் மொபைலை நோண்டிக் கொண்டிருந்த மகி ராமின் அழைப்பு வரவே எடுத்து பேசினாள்..

சொல்லுங்கப்பா இங்க இருந்துட்டே போனா??

என்ன பண்றது குட்டிமா கொஞ்சம் பிசி சரி மேக்கப்லா ஓவரா?என் ப்ரெண்ட்ஸ் கொஞ்ச பேர் வந்துருக்காங்க..உன்ன பாக்கனும்னு சொல்றாங்க கூட்டிட்டு வரவா??

ம்ம் வாங்கப்பா நா ரெடி தான்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஆதித்யா சரணின் "சிவன்யா" - புத்தம் புது தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

சிறிது நேரத்தில் உள்ளே நுழைந்தவன் மகியை கண்டு தன்னிலை மறந்துபோனான்..இளம் பச்சை வண்ண புடவையில் பிங்க் நிற பார்டரோடு உடல் முழுவதும் தங்க நிற சரிகை பூக்கள் விரிந்துகிடக்க,அதற்கேற்றாற் போன்று பிங்க் வண்ண கற்களால் ஆன நகைகளும்,அளவான ஒப்பனையோடு நெற்றியில் அதே பிங்க் வண்ண ஒற்றை நெற்றிச்சுட்டியுமாய் தங்க விக்ரகமாய் மிளிர்ந்தாள் அவனின் நாயகி..அதே நேரம் தன்னவனை விழிகளில் நிரப்பி கொண்டிருந்தாள் மகி..அவளின் புடவைக்கு ஏற்ப லேசான பிங்க் நிற அரைக்கைச்சட்டையும் ஐவோரி நிற பேண்டும்,நேர்த்தியாக திருத்தப்பட்டிருந்த சிகையும்,அடர்த்தியான மீசையுமாய்,மிடுக்காய் காட்சியளித்தான் ராம்..பார்வைகளில் கட்டுண்டு கிடந்த இருவரையும் வெளியே வேலை செய்பவர்களின் குரல் கலைத்தது..லேசாக அருகே வந்தவன்,ஸ்டண்ணிங் லுக் குட்டிமா..எப்படி நீ இப்படியிருக்க..ஒரு ஒரு நாளும் எனக்கு புதுசாதான் தெரியுற..என்றவாறே அவள் கையை சுற்றி திருப்பி கண்ணாடியின் புறம் நிறுத்தி அவள் கைகளை பிடித்தவாறே அவள் தோள் மேல் தாடையை வைத்து,நா எப்படி இருக்கேன் உன்ல பாதியாவது தேறுமா என்று கூறி சிரித்தான்..பாதி இல்லை இரண்டு மடங்கு அதிகமாவே நல்லாயிருக்கீங்க என அவளும் சிரித்தாள்..

கண்ணாடியில் அவனையே பார்த்திருந்தவள் திரும்பி விலகி நின்றாள்..ஆமா ப்ரெண்ட்ஸ் வராங்கநு சொன்னீங்களே எங்க??

நா எப்போ சொன்னேன்,அதெல்லாம் யாரும் வரலையே..

ராம்,..

ம்ம்ம் அப்படி சொன்னதால் தான மேடம் என்ன உள்ள வரவிட்டீங்க..இல்லனா இன்னும் எவ்ளோ நேரம் காத்திருக்கனுமோ..என்றான் அசால்ட்டாய்..

கேடி பாய்..சரி சரி பாத்தாச்சுல கிளம்புங்க..யாராவது பாத்தா எதாவது சொல்லுவாங்க..

எவன் என்ன சொல்றது..அதெல்லாம் முடியாது,என்கேஷ்மென்ட் கிப்ட் இல்லாம நா போறதாயில்லை..

கிப்ட்டா????அதெல்லாம் ஒண்ணும் வாங்கலையே ராம்..சாரி..அவன் என்ன கூறுகிறான் என்று புரிந்தும் அவனை வெறுப்பேத்தினாள்..

அடடா வாயேன் இப்போ வேணா போய் வாங்கிட்டு வருவோம் என்றுகூறி முறைத்தான்..

வாய்விட்டே சிரித்தவள்..இவ்ளோ நாள் பொறுத்துட்டீங்க இன்னும் ஒரு நாள் பொறுக்கமாட்டீங்களா

ஹா..நாளைக்கு அப்புறம் உன்ட்ட யாரு பெர்மிஷன் கேக்க போறா??என் கிப்ட்ட நானே எடுத்துப்பேன்,இன்னைக்கு மட்டும் தான் உனக்கு டைம்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.