(Reading time: 39 - 77 minutes)

ல்யாண தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு

பெண் நெஞ்சில் ஆனந்த கூத்தாச்சு
பாருங்கடி பொண்ண பாருங்கடி
வெட்கத்தில் அவ கன்னம் சிவந்திருச்சு

இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு
அரைச்ச சந்தனமும் மணக்க
மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ
செவந்த குங்குமப்பூ மயக்க

தை மாசம் வந்துடுச்சு கால நேரம் சேந்துடுச்சு
ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு மேளச்சத்தம் கேட்டுடுச்சு
மேகம் கருத்துருச்சு மாரி மழை பெஞ்சுடுச்சு
மண்ணில் மணம் ஏறிடுச்சு மஞ்சள் நிறம் கூடிடுச்சு

நெனச்சக் கனவு ஒண்ணு நெஜமா நடந்துடுச்சு
உன்னோட நான் சேருறது பலிச்சாச்சு
விதைச்ச விதையும் இங்கு செடியா முளைச்சிடுச்சு
பூவும் இல்ல காயும் இல்ல கனியாச்சு
கல்யாணத் தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு
என் நெஞ்சில் ஆனந்தக் கூத்தாச்சு
கண்டாங்கி சேலைக் கட்டி என் கைய நீ புடிச்சு
நாம் சேரும் நாளு இங்கு வந்தாச்சு

தாங்கும் மரக்கிளையா போற வழி நீ துணையா
கூட வர என்ன கொறை அது போதும்
ஆலமரத்து மேல கூவும் ஒருக்குயிலா
வீட்டுக்குள்ள கூடு கட்டு அது போதும்

என்னோட நீ சிரிச்சா கண்ணீர நீ துடைச்சா
வேறேதும் வேணாமே அது போதும்
வீடு திரும்பையிலே வாசல் தொறக்கையிலே
மஞ்சள் முகம் சிரிச்சா அது போதும்

கிக்கு மெஹந்தி போட்டு முடித்துவிட மற்ற பெண்கள் மெஹந்தி போட ஆரம்பித்தனர்..ரொம்ப நேரமாக உட்கார்ந்தே இருந்ததால் கை கால்கள் மறத்துப் போக அவளின் முக வாட்டத்தை உணர்ந்த ராஜி மகி நீ மாடில தன்வி ரூம்க்கு போய் கொஞ்சம் ப்ரெஷ் ஆயிட்டு வாடா..என்றார்..அவரை நன்றியாய் நோக்கியவள் தேங்க்ஸ்மா என்று மெதுவாக எழுந்து சென்றாள்..வெளியே போன் பேசிய வாறே அவள் மாடிக்கு செல்வதை கவனித்தவன் பத்து நிமிடம் கழித்து போனை வைத்துவிட்டு உள்ளே வந்தபோதும் இன்னும் அவள் கீழே வரவில்லை என்று உறைக்க உள்ளே செல்லாமல் நேராக மாடிக்குச் சென்றான்..அங்கிருந்த சேரில் சோர்வாக அமர்ந்திருந்தாள்..

ஹே குட்டிமா என்னாச்சு..ஆர் யு ஆல்ரைட்??

ஹா ஒண்ணுமில்லை ராம் ரொம்ப நேரம் உக்காந்திருந்ததுல கால் மரத்துப் போச்சு அதான் ராஜிம்மா ப்ரெஷ் ஆயிட்டு வாநு அனுப்பி வச்சாங்க..தண்ணி தாகமா இருந்தது,கைல மெஹந்தி வேற காயல..கீழே போலாம்நு நகர்ந்தப்போ மறுபடியும் கால் வலிக்க ஆரம்பிச்சுடுச்சு அதான் அப்படியே உக்காந்துட்டேன்..என அவள் கூறி முடிப்பதற்குள் அருகிலிருந்த அறையிலிருந்து தண்ணீர் பாட்டிலையெடுத்து அவளை குடிக்க வைத்தான்..சற்றே தெம்பாய் உணர்ந்தவள் புன்னகைத்தாள்,

தேங்க்ஸ் ராம்,நவ் பீலிங் பெட்டர்..ஆமா நீங்க எப்படி இங்க..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

போன் பேசிட்டு வரும் போது பாத்தேன் கீழே உன்ன காணும் அதான் இங்க வந்தேன்..

ம்ம்ம்..

இன்னுமே அவள் முகம் தெளிவில்லாமல் இருக்க,என்ன மகி ஸ்ட்டில் யு ஆர் அன்கம்பவர்டபிள்..நா அம்மாவ வேணா வர சொல்லவா??

ஐயோ அதெல்லாம் வேணாம் ராம் ஏற்கனவே நிறைய வேலை அவங்களுக்கு,அது வந்துஇந்த மாறி ட்ரெஸ்லா போட்டு பழக்கமில்லை..அக்கா இதுக்கு மேட்சா இருக்கும்நு இந்த ஜுவல்ஸ்லா குடுத்தாங்க..குந்தன் செட்ங்கிறதால ரொம்ப வெயிட்டா இருக்கு..என்று தயங்கி தயங்கி கூறிமுடித்தாள்..

அவ்ளோதான கழட்டி வைச்சுடு சிம்பிள் என்றவன் அப்போதுதான் கைகளை கவனித்து தலையில் தட்டிக் கொண்டான்,சரி இரு நா ஹெல்ப் பண்றேன் என்றவாறு அவள் அருகில் வந்தான்..விரித்து விடப்பட்டிருந்த கூந்தலை ஒதுக்கியவன் மெதுவாக கழுத்தின் ஆரத்தை கழட்டினான்,அநாவசியாமாக விரல் படவில்லை எனினும் அந்த தொடுகையே இருவருக்குள்ளும் சிலிர்ப்பை ஏற்படுத்தாமல் இல்லை..அவளின் நிலையறிந்தவன் அதிகம் இம்சிக்காமல் கருமமே கண்ணாய் நகைகளை கழட்டி டேபிளில் வைத்துவிட்டு நகர்ந்து கொண்டான்..இப்போ ஒ.கே யா மகி இனி இந்தமாறி ஜுவல்ஸ் போட்டுக்காதடா..சரி நா கீழே போறேன் பைவ் மினிட்ஸ் கழிச்சு நீ வா..இல்லனா ஓட்டி தள்ளிருவாங்க என்றபடி நடக்கத் தொடங்க ராம் என்று மென்மையாய் அழைத்தாள் மகி..என்னவென்று திரும்பியவனின் மேல் லேசாய் சாய்ந்து கொண்டாள்..இதை சற்றும் எதிர்பாராதவன் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனான்..அவனது கரம் ஆதரவாய் தன்னவளின் சிரத்தில்..

தேங்க் யு சோ மச் ராம்..ரொம்ப ஹாப்பியா இருக்கேன் எனக்காக பாத்து பாத்து பண்றீங்க உங்களுக்கு நா என்ன திரும்ப செய்ய போறேன்னே தெரில..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.