(Reading time: 26 - 51 minutes)

தோ ஒரு உந்துதலில் அவள் சட்டென அவன் பக்கமாக திரும்ப அவனை பார்த்த மாத்திரத்தில் அவள் முகத்தில் பய மேகங்கள் பரவின.

வானில் லேசான இடி சத்தம் கேட்க திடுக்கிட்டு ஒரு முறை மேலே பார்த்தாள் அவள். இப்போதும் கூட அவளை திருமணம் செய்துக்கொள்ளும் எண்ணமெல்லாம் இல்லை அவனிடத்தில்.

ஆனாலும் 'மழை வந்துவிட்டால் என்ன செய்வாளாம் அவள் ??? தெரிந்துக்கொள்வதில் ஒரு சுவாரஸ்யம் அவனுக்கு, மாடி சுவற்றில் கை ஊன்றியபடியே அவளை அவன் குறும்பு புன்னகையுடன் பார்த்திருந்தான்.  

நேரம் 5.50

மெதுவாக மழை தூர துவங்க, உள்ளே இருந்த அவள் அம்மாவுக்குமே வியப்பும், கொஞ்சமான பயமும் வந்தது நிஜம். 

மழை இன்னமும் வேகமெடுக்க சின்ன சிரிப்பு மலர்ந்தது அவன் இதழ்களில். நொடிப்பொழுதில் நீரேற்றம் அவள் அவள் விழிகளில்.. ஏனோ அதே நொடியில் காணாமல் போனது அவன்  சிரிப்பும்.

அபர்ணா .' என அவன் ஏதோ சொல்ல துவங்க, என்ன நினைத்தாளோ மாடிப்படியில் இறங்கி ஓடத்துவங்கினாள் அபர்ணா.

டுத்த நொடி கால் வழுக்கி, விழுந்த வேகத்தில் கைப்பிடி சுவற்றில் நெற்றி முட்டி அப்படியே சரிந்து மயங்கி இருந்தாள் அவள். உள்ளே இருந்த அம்மா இதை அறிந்திருக்கவில்லை. பதறிப்போனான் பார்த்துக்கொண்டிருந்தவன்!!!

அடுத்த நிமிடம் அவள் அருகில் இருந்தான் அவன். நெற்றியில் இருந்து ரத்தம் வழிந்துக்கொண்டிருக்க மயங்கிக்கிடந்தாள் அபர்ணா. அவள் கையில் இருந்த கண்ணாடி வளையல்கள் நொறுங்கிக்கிடந்தன. தன்னையும் அறியாமல் கைகளில் அள்ளிக்கொண்டான் அவளை. அவனது அழைப்பில் அவள் கண் திறக்கவில்லை.

மழை இருவரையும் நனைத்துக்கொண்டிருக்க... பதற்றம் தொற்றிக்கொண்டவனாக முதலில் கைக்குட்டையை தேடி எடுத்து அவள் நெற்றியை சுற்றி கட்டிவிட்டு, அவளை எழுப்ப முயன்றுக்கொண்டிருந்த வேளையில், அவர்கள் வீட்டை ஒரு ஆட்டோ கடக்க..... அதை நிறுத்தியிருந்தான் பரத். ரத்தம் இன்னமும் நிற்கவில்லை...

'என்னடா பண்ணே என் பொண்ணை பொறுக்கி ???" அந்த நொடியில் பதறிக்கொண்டே அவள் அம்மா வெளியே ஓடி வந்து, ஆட்டோவை நோக்கி அவளை தூக்கிக்கொண்டு நடந்தவனை தடுக்க முயல...

'கீழே விழுந்து மயங்கிட்டாங்க உங்க பொண்ணு. ரத்தம் கொட்டுது. இப்போ சண்டை போடுற நேரமில்லை.. ஹாஸ்பிடல் போகலாம் தயவு செய்து வாங்க...' சொல்லிவிட்டு அவளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அவளை தனது மடியில் சாய்த்துக்கொண்டபடி அமர்ந்தான் பரத்.

அவளது அம்மா வீட்டை பூட்டிக்கொண்டிருக்க... அவளது துப்பட்டாவை வைத்து ரத்தத்தை நிறுத்த முயன்றுக்கொண்டிருந்தான் அவன். மூடிகிடந்த அவள் கண்களின் ஓரத்தில் கொஞ்சம் மிச்சம் இருந்தது கண்ணீர். அவள் முகம் பார்க்க கரைந்து போனது அவன் இதயம். அவள் கண்ணீரை அவன் விரல்கள் மெல்ல துடைக்க... அவனுக்குள் குடி கொண்டது அவள் முகம்.

'மன்னிச்சுக்கோமா..' என்றான் மெல்ல. 'உன்னை கஷ்டபடுத்தணும்ன்னு நான் எதுவும் பண்ணலை...'

மருத்துவமனையை அவர்கள் அடைந்திருக்க, அவள் உள்ளே அனுமதிக்க பட... பணம் கட்டுவதற்கு பர்சை துழாவியனிடம் இருந்தது வெறும் 15 ரூபாய்கள். ஆட்டோவுக்கு கொடுத்தது போக மிச்சம் இருந்தது பதினைந்தே ரூபாய்கள்!!!!

அருகில் நின்றிருந்த அவளது அம்மாவின் ஏளன பார்வையில் கூசி குருகிப்போனான் பரத்.

'அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கூட காசில்லை. இதிலே உனக்கு கல்யாண ஆசை வேறே...அசிங்கமா இல்லை உனக்கு ' சொல்லியே விட்டார் அவர்.

இதுவரை எத்தனையோ கேலியான பேச்சுகளையும், திட்டுக்களையும் கூட சந்தித்திருக்கிறான்  அவன். ஆனால் இது??? அவமான சாக்கடையில் மொத்தமாக விழுந்து புரண்ட உணர்வு.

பணத்தை கட்டிவிட்டு அவர் உள்ளே சென்றுவிட அடிப்பட்டு பறக்கவே முடியாத பறவையாக அங்கேயே நின்றுவிட்டிருந்தான் பரத். அவள் கண் விழித்து விட்டாள் என தெரியும் வரை அங்கிருந்து நகரவும் தோன்றவில்லை அவனுக்கு.

ஒவ்வொரு நொடியும் நரகமாக இருந்தது அவனுக்கு. ரத்தம் வழிந்துக்கொண்டிருந்த அவள் முகமும் அவள் கண்ணீருமே அவனை வாட்டி எடுக்க, சில நிமிடங்கள் கழித்து அவள் அறையை விட்டு வெளியே வந்த நர்சிடமிருந்து அவள் கண் விழித்து விட்டாள் என்ற செய்தி கிடைக்க, ஒரு நிம்மதியான சுவாசத்துடன் அங்கிருந்து அகன்றான் பரத்.

இரண்டு நாட்கள் கடந்திருந்த நிலையில்.. அவள் தனது மனதோடு ஒட்டிக்கொண்டு விட்டதை உணர முடிந்தது அவனால். அதே நேரத்தில் அவள் அம்மா சொன்ன வார்த்தைகளில் தப்பேதும் இருப்பதாக தெரியவில்லை அவனுக்கு. 

அடுத்த வேளை உணவுக்கே கூட அடுத்தவர் கையை எதிர்ப்பார்க்கும் நிலை. படித்துக்கொண்டிருக்கிறான் என்றாலும் நிறைய பரிட்சைகளில் தோல்வி. இந்த நிலையில் காதல் என்ற ஒன்றை அவன் வாழ்வில் அனுமதிக்கும் தகுதி எல்லாம் அவனுக்கில்லை!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.