(Reading time: 26 - 51 minutes)

டிக்கொண்டிருக்கும் மின் சாதனங்களை நிறுத்துவதற்கென  ஒரு சுவிட்ச் இருப்பதை போல் சுழன்றுகொண்டே இருக்கும் மனதை தாற்காலிகமாக நிறுத்த ஒரு சுவிட்ச் இருந்தால் எத்தனை நன்றாக இருக்குமென தோன்றியது அவனுக்கு.

'தூக்கம் கொடு என் இறைவா!!!

சில நிமிடங்கள் கடந்திருக்க வாசலில் வந்து நின்றது அந்த கார்!!! அதில் இருந்தனர் விஷ்வாவும் அவன் அப்பாவும். எப்போதோ தெரிந்து வைத்திருந்த பரத் வீட்டின் முகவரி இப்போது இங்கு வர உதவியது.

'யார் வீடு விஷ்வா இது???'

'சொல்றேன் இறங்குங்க...'

'பசிக்குதுடா ரொம்ப... மத்தியானம் சாப்பிட்டது... ஹோட்டல் கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு எங்கேயோ கூட்டிட்டு வந்திருக்கே..'

'நீங்க இறங்குங்கபா முதல்லே...'

இறங்கி கேட்டின் அருகே வந்தவரின் பார்வை அங்கே சுவற்றில் பதிக்க பட்டிருந்த பெயர் பலகையின் மீது விழ புரிந்து விட்டிருந்தது அது யார் வீடென!!! ஒரு நிமிடம்  திகைத்து நின்று விட்டவர் திரும்பிய நொடியில் விஷ்வாவின் கார் சற்றே தொலைவில் திரும்பி வேகமாக நகரத்துவங்கி இருந்தது. இவரிடம் சொல்லாமலே கிளம்பி விட்டிருந்தான் அவன்.

'அவர்கள் இருவருக்கும் நடுவில் நான் எதற்கு என நினைத்துவிட்டனோ அவன்???'

மழை லேசாக தூறிக்கொண்டிருக்க..... உள்ளே செல்வதா வேண்டாமா என்ற சில நொடி அல்லாட்டத்திற்கு பிறகு கேட்டை திறந்துக்கொண்டு உள் நோக்கி நடந்தார் அவர். திரும்பி சென்று விட ஏனோ மனம் கேட்கவில்லையே!!!

கால்கள் வேகமாக நடக்க மறுத்தன. யோசித்து யோசித்து நடந்து சென்று அழைப்பு மணியை அழுத்தினார் அவர். சோபாவில் கண்மூடி கிடந்தான் பரத். அழைப்பு மணி கேட்டு கண் திறந்தான் அவன். எழ தோன்றவே இல்லை அவனுக்கு. மனதிலும் உடலிலும் அப்படி ஒரு சோர்வு.

'இந்த நேரத்தில் யாராம்???' யாராக இருந்தாலும் திறக்க போவதில்லை..'. மறுபடி கண் மூடிக்கொள்ள மறுபடி அழைப்பு மணி.

'பச்..' என்றபடியே எழுந்து சென்று கதவை திறந்தான் பரத். அடுத்த நொடி மனமெங்கும் குளிர் பனி மழை.

'அய்யோ... அ...... ஸா...  ஸா.. ர்.. நீங்களா???  நான் யாரோன்னு... அய்யோ... சாரி...  வாங்க... ' ஆனந்த பரபரப்பில் வார்த்தைகள் கோர்வையாக வரவே இல்லை அவனுக்கு.

அவன் உச்சரித்த அந்த 'அ...' வுக்கும் 'ஸா...' வுக்கும் இடையில் இருந்த வலியும், அந்த இடைவெளி தான் அவனது ஆரம்ப கால வாழ்கையின் கதை என்பதையும் உணராதவர் இல்லை அவர். எல்லாவற்றையும் மறந்தவனாக என்னை பார்த்ததும் இப்படி மகிழ்ந்து போகிறானே இவன்???

'நான் உள்ளே வரலாமாபா???' கொஞ்சம் குற்ற உணர்ச்சி கலந்த குரலில் கேட்டார் அப்பா.

'அட வாங்க சார்... இது உங்க வீடு... இங்கே வர நீங்க யாரை கேட்கணும் வாங்க ப்ளீஸ்...' ' குளிர் புன்னகையுடன் சொன்னான் பரத். மெல்ல உள்ளே நுழைந்தார் அவர்.

'தனியாவா வந்தீங்க? விஷ்வா வரலையா??? ஒரு முறை வாசல் பக்கம் பார்வையை செலுத்தியபடியே கேட்டான் பரத்

'வந்தான் பா... ஆனா என்னை விட்டுட்டு அப்படியே கிளம்பிட்டான்.. ஏன்னு தெரியலை...'

'அப்படியா???" என்றான் பரத். அவன் இதழ்களில் சின்ன புன்னகை. 'சரி விடுங்க. அவன் அப்படித்தான். நீங்க உட்காருங்க...' அவர் அருகில் சென்று அமர்ந்தான் பரத்.

சந்தோஷமும் படபடப்பும், நெகிழ்வும் கலந்த ஒரு உணர்வில் திளைத்திருந்தான் அவன்.  சில நொடிகள் அவர் முகம் பார்த்தவன், என்ன தோன்றியதோ சட்டென அவர் கை பற்றிக்கொண்டான்.

அவர் அவனை வியப்புடன் பார்க்க 'வா..ட்..ச்... வாட்ச் ரொம்ப நல்லா இருக்கு. அதான் பார்த்தேன்... எங்கே வாங்கினீங்க?.' அதை ஆராயும் பாவம் அவன் முகத்தில்.

'இது ரொம்ப பழைய வாட்ச்பா... 'என்றார் நிதானமாக. அவன் தவிப்பு புரியாமல் இல்லை அவருக்கு.

'அப்படியா...' என்றானே தவிர கையை மட்டும் விடுவிக்கவில்லை

'இது என்ன பைத்தியக்காரத்தனம் அவனுக்கே புரியவில்லை. அவர்கள் மீதிருந்த கோபமெல்லாம்   எங்கே போனதென அவனுக்கே தெரியவில்லை. சில நொடிகள் அங்கே மௌனத்தின் அரசாட்சி!!! பின்னர் மெல்ல கேட்டார் அப்பா.....

'பரத் ரொம்ப பசிக்குதுபா சாப்பிட ஏதாவது கொடுக்கறியா???' பதறி எழுந்தான் பரத்.

'நீங்க இன்னும் சாப்பிடலையா? சாரி சார்... நான் கூட கேட்கலை பாருங்க... இதோ... இதோ அஞ்சே நிமிஷம்...' ஓடினான் சமையலறையை நோக்கி...

ரண்டு நிமிடங்கள் கழித்து சமையலறைக்குள் நுழைந்தார் அப்பா. 'உனக்கு இதெல்லாம் தெரியுமா பரத்?'

'ஹா ஹா...' சிரித்தான் அவன். 'எனக்கு ஒழுங்கா செய்ய தெரிஞ்சது சமையல் ஒண்ணுதான். நீங்க இப்படி உட்காருங்க.. ஒரு நாற்காலியை எடுத்து வந்து சமையலறையில் போட்டான் பரத்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.