(Reading time: 26 - 51 minutes)

'ன்ன அபர்ணா??? ஏதாவது பிரச்சனையா???' என்றபடியே!!! தூரத்தில் இருந்தே இதை கவனித்திருப்பான் போலும். அவன் வந்து நின்ற மறுநொடி அவர்கள் சட்டென விலகி நகர,

'என்னமா இப்படி வேர்த்திருக்கு உனக்கு. என்ன பண்ணானுங்க அவனுங்க? இரு வரேன்... ' என அவன் அவர்களை நோக்கி நகர....

'ப்ளீஸ்... அதெல்லாம் வேண்டாம்... என்னை அஸ்வினி இருக்கிற ஹாஸ்பிட்டல்லே டிராப் பண்ணிடுங்களேன் ப்ளீஸ்... பரத்...' என்றாள் கரைந்து கிடந்த குரலில்.

'ஏன் இப்படி பயப்படுறே??? இதெல்லாம் வேலைக்கே ஆகாது... ரெண்டு அறை அறைய வேண்டியது தானே அவங்களை...' என்றான் அவன்.

'ப்ளீஸ்... எனக்கு இங்கிருந்து போகணும்..' அவள் குரல் உடைய காத்திருந்தது.

'சரிபா... சரி ஒண்ணுமில்லை கூல்... வா போகலாம்...' நடந்தான் அவன். அவனுடன் நடந்து காருக்குள் வந்து அமர்ந்தவுடனே வியர்வை முத்துக்களை துடைத்தபடியே நிம்மதியாக சுவாசித்தாள் அவள்.

'என்னாச்சுமா??? ஏதாவது குடிக்கறியா??? இரு... என கைப்பேசியை எடுத்தவன் பழச்சாறு கொண்டு வர சொல்லிவிட்டு அவள் பக்கம் திரும்பினான்.

'நீ எதுக்குமா இங்கே வந்தே?' என்றான் அவன்

'இல்ல அருண்தான் வர சொன்னார். அதுவும்  ஜீன்ஸ்... டி ஷர்ட் எல்லாம் போட்டுக்கிட்டு வந்தாதான் கல்யாணம்னு ... இதெல்லாம் எனக்கு பழக்கம் இல்லை.. எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு பரத்...' கண்களில் கொஞ்சம் நீர் சேர சொல்லியே விட்டிருந்தாள் அவள்.

பொதுவாக அவனிடத்தில் அவள் அருணை விட்டுக்கொடுப்பதில்லைதான். ஆனால் மனதில் இருந்த அழுத்தத்தில் அவளே அறியாமல் அந்த வார்த்தைகள் பட்டென உடைந்து வெளிவந்திருந்தன.

அதற்குள் பழச்சாறு வந்திருக்க அதை அவள் அருந்த ஆரம்பித்திருக்க, எதுவுமே பேசாமல், இமைக்காமல் அவளையே பார்த்திருந்தான் பரத்.

ஜீன்ஸ்... டி ஷர்ட் எல்லாம் போட்டுக்கிட்டு வந்தாதான் கல்யாணம்னு.... எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு பரத்...' திரும்ப திரும்ப அந்த வார்த்தைகளே சுழல.... எப்படி பட்டவன் இந்த அருண்??? கேள்வி கேட்க ஆரம்பித்தது அவன் மனம்.

அவள் குடித்து முடித்த மறுநொடி கண்ணாடிகள் மேலேற சரேலென கிளம்பியது அவன் கார். அவனுக்குள்ளே சின்னதாக ஒரு புயல் சின்னம் உருவாகி இருந்தது.

Episode # 06

Episode # 08

தொடரும்......

{kunena_discuss:982}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.