(Reading time: 26 - 51 minutes)

தன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வாழ்க்கையின் இந்த கட்டத்தில் நிற்கிறான் பரத்!!! அவளே அவனுக்கு கை தட்டும் சூழ்நிலையும் வந்திருக்கிறது. ஆனால்......???

இத்தனை நாட்கள் அவள் எங்கே இருக்கிறாள் என்ன செய்துக்கொண்டிருக்கிறாள் என்ற விவரங்களை சில நண்பர்கள் மூலம் அவன் சேகரித்து கொண்டுதான் இருந்தான் பரத்.. ஆனால் அருண்??? அவளை ரயிலில் சந்தித்த பிறகே தெரிய வந்தது அல்லவா அவனை பற்றி!!! எப்படியோ அவள் மனதை ஜெயித்து வைத்திருக்கிறானே அவன்!!!

ழைய நினைவுகளில் பயணித்த படியே வீடு வந்து சேர்ந்திருந்தான் பரத். அதே நேரத்தில் அங்கே மருத்துவமனை வளாகத்தில் இருந்த அந்த கான்டீனில் அருணுடன் அமர்ந்திருந்தாள் அபர்ணா.

'ஏன் இவ்வளவு டல் அடிக்கறே. இதை விட பழைய சுரிதாரே இல்லையா உன் கிட்டே???' கேட்டான் அவன்.

அவளுக்கு அடிப்பட்டதுன்னு தெரிஞ்சதும் கையிலே கிடைச்சதை மாட்டிட்டு ஓடி வந்தேன். அவளுக்கு ஒண்ணுமில்லைன்னு தெரிஞ்சதும்தான் நிம்மதி ஆச்சு...' என்றாள் அபர்ணா.

'இல்லனா அப்படியே கலக்கிடுவியா நீ???' என்றான் அவளை மேலிருந்து கீழாக அளந்தபடியே 'அஸ்வினிகிட்டேர்ந்து கொஞ்சம் கத்துக்கோ...'

'சரி ... அதை விடுங்க... காலையிலேயே ஆக்சிடென்ட்டா நீங்க ஏன் எனக்கு சொல்லவே இல்லை???' கேட்டாள் அவள் தட்டில் இருந்த சப்பாத்தியை எடுத்து வாயில் போட்ட படியே.

'அவ அடிப்பட்டு ரத்த வெள்ளத்திலே ரோட்டிலே கிடந்தப்போ... அந்த டென்ஷன்லே எனக்கு அவ உன் தங்கைன்னு தெரியவே இல்லை. அவ முகம் கூட சரியா பார்க்கலை. பக்கத்திலே இருந்த ஹாஸ்பிடல்லே அட்மிட் பண்ணிட்டு, அவ போன்லே இருந்து கால் ஹிஸ்டரிலே இருந்து விஷ்வாவை பிடிச்சு பேசிட்டேன்... அதுக்கு அப்புறம் அவ மொபைல் வால் பேப்பர்லே உங்க ரெண்டு பேர் போட்டோ பார்த்த அப்புறம்தான் ஸ்ட்ரைக் ஆச்சு.. அதுக்குள்ளே விஷ்வா மறுபடியும் கால் பண்ணி அவங்க வீட்டிலே யாருக்கும் இப்போ சொல்ல வேண்டாம் நான் வந்து பார்த்துக்கறேன்ன்னு சொன்னார்... அதான் சொல்லலை...' என்றான்  தோசையை சுவைத்தபடியே...

அவன் பார்வை இன்னமும் அவளை அளந்துக்கொண்டிருக்க.. ஏதேதோ யோசனைகள் மனதில் ஓட..... சிறிது இடைவெளி விட்டு தொடர்ந்தான்.....

'அபர்ணா...... ஸோ...உங்க வீட்டிலே நம்ம விஷயம் சொல்லியாச்சு... அடுத்து என்ன பண்ணலாம்???'

'அடுத்து உங்க வீட்டிலேதான் பேசணும். அங்கே எல்லாரும் என்ன சொல்வாங்க அருண்???' யோசனையுடனே கேட்டாள் அபர்ணா..

'அது பெரிய விஷயம் இல்லை. நான் பேசி மேனேஜ் பண்ணிடுவேன் ஆனா அதுக்கு முன்னாடி நான் ஒண்ணு தெரிஞ்சுக்கணும்.. நீ என்னை எவ்வளவு லவ் பண்றேன்னு தெரிஞ்சுக்கணும்....'

'அதுக்கு???' புரியவில்லை பெண்ணுக்கு.

'பெருசா ஒண்ணும் பண்ண வேண்டாம். ஒரு வாரம் தொடர்ந்து நீ ஜீன்ஸ் டி ஷர்ட் போடணும்... அதை நான் பார்க்கணும்... அப்போதான் நீ என்னை நிஜமா லவ் பண்றேன்னு அர்த்தம். அதுக்கு அப்புறம் நான் எங்க வீட்டிலே பேசிடுவேன்...'

'ஒரு வாரம் தொடர்ந்தா... ப்ளீஸ் அருண்... எனக்கு ரொம்ப கஷ்டம்... நான் துப்பட்டா இல்லாம வெளியே வந்ததே இல்லை. டி ஷர்ட் எனக்கு ரொ..ம்ப.......' அவள் குரலில் தயக்கம் நிரம்பியிருந்தது.  'இதுக்கும் நான் உங்களை லவ் பண்றதுக்கும் என்ன சம்மந்தம்???.'

'அதெல்லாம் எனக்கு தெரியாது... ட்ரை பண்ணு அப்புறம் பழகிடும். எனக்காக மாத்திக்கறேன் மாத்திக்கறேன்னு சொல்லிட்டு இப்போ மாட்டேன்ன்னு சொன்னா என்ன அர்த்தம்? நீ இதை பண்ணாதான் நான் வீட்டிலே பேசுவேன்... எத்தனை நாள் ஆனாலும் சரி..' சொல்லிவிட்டான் அவன்.

'அருண்... கல்யாணத்துக்கு அப்புறம் நான் வீட்டிலே இருக்கும் போதெல்லாம் போட்டுக்கறேன்... ப்ளீஸ்..'

'நோ... இதெல்லாம் சரியா வராது. எனக்கு இப்போ டைம் ஆச்சு. நாளைக்கு ட்ரைனிங் போகணும்...' என்றவன் அந்த ஹோடேலின் பெயரை சொல்லிவிட்டு சொன்னான் 'இங்கே தான் எனக்கு ட்ரைனிங்.. ஸீ... நாளைக்கு ஈவ்னிங் ... ஏழு மணிக்கு நீ என்னை இதே ஹோட்டல்லே ஜீன்ஸ் டி ஷர்ட்லே மீட் பண்றே.. சரியா...' என்றபடியே தோசையை முடித்தவன்......

ஏதோ  சொல்ல ஆரம்பித்தவளை பேசவே விடாமல்  'பை... டார்லிங்...' என கன்னத்தில் தட்டிவிட்டு நகர்ந்தான். தட்டில் இருந்த சப்பாத்தியை முடிக்க கூட தோன்றாமல் அமர்ந்திருந்தாள் அபர்ணா.

வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தான் பரத். சுற்றிலும் தோட்டத்துடன் கூடிய, இப்படி ஒரு வீட்டில்தான்  வாழ வேண்டும் என்று எல்லாரும் நினைக்க கூடிய அழகான வீடு அது.

நேரம் இரவு ஒன்பதரையை தாண்டி இருந்தது. உடை மாற்றிக்கொண்டு சோபாவில் படுத்தான் அவன். வீட்டின் பின்னால் இருக்கும் அவுட் ஹவுஸில் இருக்கும் இரண்டு வேலைக்காரர்கள் தவிர வேறு யாரும் கிடையாது அந்த வீட்டில். இரவு உணவு கூட சமைக்க வேண்டாம் என சொல்லி அவர்களை அனுப்பி விட்டிருந்தான் பரத்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.