(Reading time: 22 - 43 minutes)

ல்யாணம்னு ஒன்னு முடிஞ்சா புருஷன் வீட்டுக்கு தான வரணும்… அடுத்து புருஷன் வீட்டோட உறவுதான் காலத்துக்கும்னு சொல்லுறதெல்லாம் சரிதான்… ஆனா அதுக்காக இத்தனை வருஷமா என்னைப் பெத்து ஆளாக்கின என் அப்பா, அம்மா, என்னை எப்பவும் சந்தோஷமா பார்த்துக்குற என் தம்பி, அத்தனை பேரையும் நான் தலை முழுகணும்னு நீங்க சொல்லுறது எந்த விதத்துல சரி திலீப்?....”

“………………”

“அவங்க தான் எனக்கு உங்களை அறிமுகப்படுத்தி வைச்சாங்க… அவங்க தான் உங்க வாழ்க்கையில என்னை முடிச்சு போட்டும் விட்டாங்க… கல்யாணம் தான் முடிஞ்சிட்டே… இன்னும் என்ன பேச்சு வார்த்தை வேண்டியிருக்குன்னு கேட்குற மாதிரி இருக்குது நீங்க நடந்துக்குறது….”

“…………………”

“யார்கிட்டயும் பேசக்கூடாது, உங்ககிட்ட மட்டும் பேசணும்னா, நான் உணர்வுள்ள மனுஷியா இருக்க முடியாது திலீப்… உயிரில்லாத கூடா மட்டும் தான் இருக்கமுடியும்… புருஷன் மேல தனி பாசம், பிரியம், அன்பு, எல்லாமே ஒரு பொண்ணுக்கு இருக்கும்… அதே நேரத்துல அவப் பொறந்த வீட்டாளுங்க மேலயும் அவளுக்கு அதே அளவு உரிமை இருக்கும்… அந்த உரிமையை வெட்டி விடுன்னு சொல்லுறீங்களே ஏன்?... இது தான் உங்க அலாதி அன்பா?....”

“…………………………”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா Vயின் "உன் நேசமதே.. என் சுவாசமாய்..!!" - காதல் கலந்த குடும்பத் தொடர்

படிக்க தவறாதீர்கள்..

“அன்புன்னா சந்தோஷத்தை கொடுக்கணும்… பாசத்தை கொடுக்கணும்… நான் இருக்கேன்ற உணர்வை கொடுக்கணும்… எந்த பிரச்சினையிலேயும் கூடவே இருப்பேன்ற நம்பிக்கையை கொடுக்கணும்…. இத எல்லாம் விட்டுட்டு, யார்கிட்டயும் பேசக்கூடாது எங்கிட்ட மட்டும் தான் பேசணும்னு கட்டளை போட்டா அதுக்கு பேரு வேற திலீப்….”

“……………………..”

“புருஷனுக்கு பொண்டாட்டி மேல இருக்குற உரிமையும், காதலும் வேற எந்த ஒரு உறவிலேயும் இருக்கக்கூடாதுன்னு நினைக்குறது சரியா திலீப்?....”

“……………………”

“நீ என் பொண்டாட்டி… உன் மேல எனக்குத்தான் அதிக அன்பு, அக்கறை, காதல், உரிமை, எல்லாம் இருக்குன்னா, அதை உங்க செயல்ல காட்டுங்க… கட்டுன பொண்டாட்டிகிட்ட உங்களோட பிரியத்தை கொட்டுங்க…. யாரு உங்களை தடுக்கப்போறா?...”

“………………….”

“ஒரு பொண்ணு கல்யாணம் முடிஞ்சு புகுந்த வீட்டுக்கு வரும்போது, பெத்தவங்க நினைப்பு அதிகமா இருக்கும்… அப்போ அவ மனசை புரிஞ்சிகிட்டு, அவகிட்ட தன் காதலை, தாய்க்கு தாயா, தகப்பனுக்கு தகப்பனா, தம்பிக்கு தம்பியா, காட்டுற புருஷன் ஒரு பொண்ணுக்கு கிடைக்கும்போது, அவளை விட கொடுத்து வச்சவ யாருமே இல்லை இந்த உலகத்துல…”

“……………………….”

“அத்தனை வருஷம் தன்னோட வாழ்ந்த உறவுகளை ஒரே ஒரு ரூபத்துல பார்க்கும்போது, எந்த பொண்ணுக்கும் அதை விட ஒரு கொடுப்பினை வேற எதுவுமே இல்ல…”

“…………..”

“அத தான் ஆரம்பத்துல என் திலீப்பும் செஞ்சார்…. சொல்லப்போனா அவரோட அன்புல நான் என் அப்பா, அம்மா, தம்பி, யாரை விட்டும் பிரிஞ்சிருக்குற மாதிரியான உணர்வே எனக்கு வரலை…. ஆனா, இப்போ எல்லாம், நான் அவங்ககிட்ட அதிகம் பேசுறதும் இல்ல…. எனக்கு அத்தனை உணர்வையும் கொடுத்த என் திலீப்பும் எங்கூட இல்லை…. அதை நினைக்கும்போது தான் உள்ளுக்குள்ள மனசு கிடந்து தவியா தவிக்குது….”

அவள் ஏக்கமும் அழுகையுமாக சொல்ல, திலீப்பிற்கு அவள் சொன்னதில் இருந்த உண்மை தெளிவாக புரிந்தது….

உண்மைதானே… அவள் சொன்னதில் எந்த பிழையும் இல்லையே…. பெண்ணாகப் பட்டவளின் வாழ்வு நிலையை தானே அவள் உரைத்தாள்…

“புருஷனுக்கு பிடிச்ச எல்லாத்தையும் பொண்டாட்டி தனக்கு பிடிச்சதா மாத்திப்பா… அது அவளே அவனோட அன்புல நெகிழ்ந்து மாத்திக்கிற மாதிரி இருக்கணுமே தவிர, வலுக்கட்டாயமா திணிக்குற மாதிரி இருக்கக்கூடாது…. ஆனாலும், நான் உங்க பேச்சுக்குக் கட்டுப்பட்டு தான் நின்னேன்… என் குடும்பத்தோட பேசுறதை குறைச்சுக்க சொன்னீங்க… செஞ்சேன்…. அது எல்லாம் செஞ்ச நான், புள்ளையையும் பெத்து கொடுத்துடுவேன்னு தான நினைச்சீங்க திலீப்?....”

“……………………….”

“ஆனா நான் அதுக்கு மறுத்தது உங்க கோபத்தை தூண்டி விட்டுட்டு…. அந்த கோபத்துல விரக்தியில என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பினீங்க… அப்படித்தான திலீப்?...”

“அய்யோ சரயூ…. நான் செஞ்சது தப்புதான்… அதுக்காக என்னை மன்னிச்சிடு…. நான் பட்ட அவமானம், வேதனை என்னை அப்படி செய்ய வைச்சிட்டு….”

அதுநேரம் வரை பேசாமல் இருந்தவன், அவள் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்ட நொடியை நினைத்து துடித்து கேட்கவும், அவனால் பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை…

இன்னமும் அவள் தரையிலேயே அமர்ந்து அழுதுகொண்டிருப்பது அவனுக்கு உரைக்க, மெல்ல அவளை நோக்கி கண்ணில் நீருடன் சென்றவனின் கால்கள் அடுத்து அவள் சொன்னதில் அப்படியே நின்றது நகராமல்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.