(Reading time: 22 - 43 minutes)

ஹேப்பி வெட்டிங்க் டே அக்கா…. எப்படி இருக்குறீங்க…. குட்டீஸ் எல்லாரும் நல்லா இருக்குறாங்களா?... மாமா மாறிட்டார்ன்னு உங்க தம்பி சொன்னாங்க… ரொம்ப சந்தோஷம் அக்கா…..”

ஜானவியின் செல்போன் திடீரென சத்தம் கொடுக்க, யார் என பார்த்தவள், அது சரயூ என தெரிந்ததும், உடனேயே எடுத்ததோடு மட்டுமல்லாமல், படபடவென கேள்வியாய் கேட்டு அடுக்கியதோடு தன் சந்தோஷத்தையும் அவள் தெரியப்படுத்த மறுமுனையில் சிரித்தாள் சரயூ….

“என்ன அக்கா நான் கேட்டுட்டே இருக்குறேன்… நீங்க சிரிக்குறீங்க?....”

“பின்ன என்னை பேசவே விடாம நீயே பேசினா வேற என்ன பண்ணுறது?....”

“அப்பாடா… இப்போதான் திருப்தியா இருக்கு… உங்க குரல்ல ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்குத்தான் பழைய சந்தோஷம் வந்திருக்கு…”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“ம்ம்… அப்படியா?....”

“அப்படியே தான்…. அப்புறம் அக்கா சொல்லுங்க….”

“என்ன சொல்லணும்?...”

“ரொம்ப நாளைக்கு அப்புறம் போன் பண்ணியிருக்கீங்க… கண்டிப்பா ஏதோ சொல்லத்தான் போன் பண்ணீங்கன்னு தெரியும்…. அதான்….”

“ம்ம்… நீ விவரம்தாண்டி…..”

“ஹாஹா…. சரி சரி புகழ்ந்தது போதும்… விஷயத்துக்கு வாங்க….”

ஜானவி அவ்வாறு சொன்னதும், சரயூ, திலீப் முழுதாக மனம் மாறிவிட்டான் என்ற உண்மையையும், தான் இப்போது சந்தோஷமாக இருப்பதையும் அழுகையோடு தெரியப்படுத்த, மனம் பூரித்து போனாள் ஜானவி…

“கேட்கவே சந்தோஷமா இருக்கு அக்கா… எல்லாத்துக்கும் காரணம் நீங்க மாமா மேல வச்சிருக்குற காதல் தான்…”

“ம்ம்… உங்க தம்பிகிட்ட சொல்லிட்டீங்களா அக்கா?...”

“இல்லடா… முதன் முதலா உங்கிட்ட தான் சொல்லுறேன்…”

“ம்ம்… ஏன்க்கா?... வீட்டுல சொன்னா சந்தோஷப்படுவாங்கல்ல?...”

“தெரியும்டா… ஆனாலும் எனக்கு உங்கிட்ட தான் முதல்ல சொல்லணும்னு தோணுச்சு… அதான்…”

“அய்யோ லூசு அக்கா… ஹ்ம்ம்….”

“சரிடா… கொஞ்சம் வேலை இருக்கு…. மாமா வந்துடுவார்… கோவிலுக்கு கிளம்பணும்… நான் அப்புறமா பேசுறேன்…”

“ம்ம்… சரி… சரி… என்ஜாய்….”

என்றபடி ஜானவி போனை கட் செய்துவிட்டு, அர்னவிற்கு போன் செய்தாள் உடனேயே….

அவன் எடுக்காமல் போகவே, மீண்டும் முயற்சித்தாள்…

பின்னரும் எந்த பதிலும் இல்லாமல் போக, “எதாவது வேலையா இருப்பாரா இருக்கும்… சரி நாம தொந்தரவு பண்ண வேண்டாம்… அப்புறம் கூப்பிடலாம்…” என்றெண்ணமிட்டவள், போனை கீழே வைத்துவிட்டு, ஹாலுக்கு வர, அங்கே அவளுக்காக காத்திருந்தார் அவளின் தந்தை…

மகள் வந்ததும், அவளை கூப்பிட்டவர்,

“உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்மா…” என சொல்லிக்கொண்டிருக்கும்போதே இடையிட்டு பேச முயன்றவளை தடுத்தவர்,

“நல்ல இடமா வேற வந்திருக்கு…. அதனால சீக்கிரமே ஒரு நல்ல நாளா பார்த்து கல்யாணம் வச்சிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்மா… நாளைக்கு மாப்பிள்ளை வீட்டாளுங்க இங்க வர்றோம்னு சொல்லியிருக்காங்கம்மா… அதனால நாளைக்கு ஆஃபீசிற்கு லீவ் போட்டுட்டு வீட்டுல இரும்மா…”

அவர் சொன்னதும், நெருப்பின் மேல் நிற்பது போன்று துடித்தாள் அவள்…

“அப்பா…. நான்…. எனக்கு…. இப்போ…..”

“இல்லம்மா… எனக்கும் வயசாகிட்டே போகுது…. சீக்கிரமே உனக்கு ஒரு நல்லதை நடத்திட்டா நான் நிம்மதியா இருப்பேன்… இடமும் நல்ல இடம்மா…”

“அப்ப்பா…. ப்ளீஸ்ப்பா…..”

“உனக்கு நாங்க நல்லது தான்ம்மா செய்வோம்… நான் உனக்கு கெடுதல் நினைக்கமாட்டேன்னு நம்பினா, நாளைக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க உன்னைப் பார்க்க வரும்போது நீ இங்க இரு… இல்லன்னா உன் விருப்பம்மா… நான் குறுக்க நிக்கலை…”

அதிகாரமாய் பேசினால், எதிர்க்கலாம்… ஆனால் இப்படி அமைதியாக சொல்பவரிடம் என்னவென்று எதிர்த்து பேசுவாள் அவள்…

என் மேல் நம்பிக்கை இருந்தால், நாளை நீ இங்கே இரு… என்று சொல்லும் தகப்பனிடம், என்ன கூறி மறுப்பு தெரிவிப்பாள் அவள்?...

நரக வேதனையோடு எதுவும் பேசாமல், அமைதியாக தனதறைக்கு வந்து அவள் கதவை சாத்தியபோது, அவளது செல்போன் ஓசை எழுப்பியது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.