(Reading time: 22 - 43 minutes)

ந்த ஆணோடவும் நான் பேசுறது உங்களுக்குப் பிடிக்கலை… அது நம்ம குடும்பத்து ஆட்களாகவே இருந்தாலும் சரி… அப்படி இருக்கும்போது, நமக்கு ஒரு பையன் பிறந்து அவங்கிட்ட நான் பேசி பழகுறது மட்டும் உங்களுக்குப் பிடிக்குமா?....”

அவள் கேட்ட கேள்வியில் அப்படியே சிலையாகிப் போனான் திலீப்….

“உங்க தம்பி, என் தம்பி, என் அப்பா, உங்க அப்பா, யார் கூடவும் நான் பேசுறது உங்களுக்குப் பிடிக்காத பட்சத்துல, நாளைக்கு நமக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து, அந்த பிஞ்சுகிட்ட நான் பாசமா, கூடவே இருக்குறது மட்டும் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்குமா?...”

“……………..”

“பத்துமாசம் நான் வயித்துல சுமந்து, படாதபாடு பட்டு பெத்தெடுத்து, அதை பாலூட்டி, சீராட்டி நான் வளர்க்கும்போது, உங்களுக்குள்ள இருக்குற அந்த பொசெசிவ்னெஸ் வெளிய வராதுன்னு உங்களால உறுதி கொடுக்க முடியுமா?... சொல்லுங்க….”

“……………….”

“நான் பேசுறேன், வைக்குறேன்ற ஓரே காரணத்துக்காக, என் புள்ளையை, நான் சுமந்து பெத்தெடுத்த புள்ளையை நீங்க எங்கிட்ட இருந்து விலக்கி வைக்க மாட்டீங்கன்னு என்ன நிச்சயம் திலீப்?... சொல்லுங்க என்ன நிச்சயம்?...”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்..

இத்தனை நாள் மறைத்து வைத்த வேதனையை அவள் கொட்டிவிட்டு அப்படியே அவள் தரையில் படுத்து அழ,

திலீப்போ ஊமையாகி போயிருந்தான்…

வாழ்வில் இதைவிட மரணஅடி ஒருவனுக்கு இருக்காது என்றே தோன்றியது அவனுக்கு….

அவள் மறுத்ததற்கு ஆயிரம் காரணங்கள் வகுத்த மனமே ஒரு காரணமாக இருக்கும் என்பதை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை கொஞ்சமும்…

ஒருவேளை, கடவுளின் கருணையில், அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தால், திலீப்பின் நடவடிக்கையில் மாற்றம் இருக்காது என்று அவனால் உறுதியாக சொல்ல முடியுமா?....

அவன் சமூகத்தில் பட்ட துயர் வேண்டுமென்றால் மாறலாம்… ஆண் குழந்தை அவனது அத்தனை துயரையும் துடைத்துவிடும் தான்…. ஆனால், அது வளர்கையில், அவனே அதனை ஒரு விரோதியாக பார்க்கும் நிலை வந்தால், என்ன ஆகும்?....

அது நடக்காது என்று கூற முடியாதே… யாரோடும் சரயூ பேசுவது அவனுக்கு பிடித்தமான ஒன்று கிடையாது….

அப்படி இருக்கும் பட்சத்தில், தன் மனைவியிடம் பாசத்தை வாங்குவது பெற்ற பிள்ளையாகவே இருந்தாலும், அவனால் அதனை ஜீரணித்துக்கொள்ள முடியுமா?...

ஒருவேளை தன் ரத்தம் என்பதனை மறந்து, மகனை வேறோர் ஆளாக பார்க்க நேரிட்டால்?....

கூடப்பிறந்த சுதீப்பை அவன் எவ்வாறு பார்த்தான்?... தான் பிறந்த தாயின் வயிற்றில் தான் சுதீப்பும் பிறந்தான் என்ற எண்ணம் இருந்திருந்தால், அவன் மீது அவனுக்கு வெறுப்பு வந்திருக்குமா?...

தன் அன்னை தான் அவனுக்கும் அன்னை என்ற எண்ணம் இருந்திருந்தால், அவனைக் கண்டாலே ஆகாது என்ற நிலை தான் ஏற்பட்டிருக்குமா?....

தான் மட்டுமே தன் அன்னைக்கு பிள்ளை, என்ற சிந்தனை மட்டும் தானே அவனது எண்ணத்தில் கலந்திருந்தது…. கலந்திருக்கிறது இன்றுவரை… அதை அவனால் மறுக்க முடியுமா?....

முடியாது தானே…. அதுதானே சத்தியமும் கூட….

எனில், தனக்குப் பிறந்த பிள்ளையாகவே இருந்தாலும், பாசத்தையும், உரிமையும் பங்கு போட்டுகொள்ளும் நிலை வரும்போது, அதனை சகஜமாக எடுத்துக்கொள்ளும் மனநிலை அவனுக்கு ஏற்பட்டால் பாதகமில்லை…

அவ்வாறு நிகழாவிட்டால், தன்னை கவனித்துக்கொள்ளும் நேரத்தில், அவனை கவனிக்கிறாள்… தன்னுடன் நேரம் செலவழிப்பது குறைந்து அவனிடம் அதிகம் செலவழிக்கிறாள்… என்ற எண்ணம் அவன் மனதில் உதிக்கத்தானே செய்யும்?...

மகன் என்ற நிலையே மாறி, மகன் மகனாக தெரியாமல் வேறொருவனாக தெரிய நேர்ந்திட்டால்?... யாருக்கு பாதகம்?... நிச்சயம் சரயூவிற்கும், அவள் வயிற்றில் பிறந்த அறியா பாலகனுக்கும் தானே…

அந்த நேரம், யார் பக்கம் நிற்க முடியும் சரயூ?... கணவன் சொல்கிறானே என்று இத்தனை நாள் மற்றவர்களிடம் பேசாமல் இருந்தது போல் பெற்ற பிள்ளையிடமும் பேசாதே என்று அவன் சொன்னால், அவளால் தன் பிள்ளையிடம் பேசாமல் இருக்க முடியுமா?...

தூர சற்று தள்ளியே நில்லு என்று அவன் கூறினால், அவளால் தள்ளித்தான் நிற்க முடியுமா?... தன் பிள்ளையை விட்டு…

சாத்தியமாகுமா அது?... தனக்கு அந்த உயிரை கொடுத்த கணவன் ஒருபுறம்… உயிராய் பிறந்து யாதுமறியா நிற்கும் பிள்ளை மறுபுறமும், தனித்தனி தராசுத் தட்டில் நிற்க நேர்ந்தால், அவளால் அதனை தாங்கிக்கொள்ள முடியுமா?...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.