(Reading time: 22 - 43 minutes)

ம்ம பிள்ளையை நீங்க விரோதியா நினைச்சீட்டீங்கன்னா நான் என்ன பண்ணுறது திலீப்?... அப்படி ஒரு நிலைமை வந்தா, சத்தியமா நான் உயிரோடவே இருக்கமாட்டேன் திலீப்….”

அவள் கதறி துடிக்க, அதற்கு மேலும் தாங்கிக்கொள்ள முடியாது பட்டென தரையில் மண்டியிட்டு வீழ்ந்தான் திலீப்…

“நமக்கு ஆண் குழந்தை பிறந்தும், இல்லாம போகுறதுக்கு, அது பொறக்காமலே இருக்கட்டும்னு தான் நான் மறுத்தேன் திலீப்….”

அவன் கண்களில் கண்ணீர் நில்லாமல் வழிந்தோட, சரயூவின் அருகில் சென்று அமர்ந்தான்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதுவின் "மார்பில் ஊறும் உயிரே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“நீங்க நம்ம பிள்ளையை வெறுத்துடுவீங்களோன்னு எனக்கு பயமா இருக்கு திலீப்…. என…க்….கு… ப…ய…..மா…. இ….ரு….க்…..கு…. திலீப்ப்ப்ப்ப்ப்ப்……”

அவள் சொல்லிக்கொண்டே அவனைப் பார்க்க,

“சரயூயூயூயூயூயூயூயூ……………………………..” என கதறியபடி, படுத்து புலம்பிக்கொண்டிருந்த மனைவியினை தன் மடி மீது சாய்த்து அவளை அணைத்துக்கொண்டான் அவன் இறுக….

அந்த இறுக்கத்தில் அவன் இதுநாள் வரை கொண்டிருந்த அத்தனை மனஇறுக்கங்களும் அறவே தளர, அவன் பட்ட காயம், வேதனை, அவமானம் அனைத்தும் கரைந்து போனது, தன்னவளின் உருக்கும் வார்த்தைகளில்…

நெடுநேரம் வரை, அங்கே அழுகை சத்தம் மட்டுமே கேட்டுகொண்டிருந்தது… அவனும், அவளும் இதுநாள் வரை பட்ட துயர் அனைத்தையும் கண்ணீரில் கரைத்துக்கொண்டிருந்தார்கள் மௌனமாக….

சில மணித்துளிகளுக்குப் பிறகு,

அவளின் முகம் நிமிர்த்திய திலீப், அவள் விழி நீரை துடைத்துவிட்டுவிட்டு,

“ஏதேதோ காரணம் இருக்கும்னு நினைச்சேன் சரயூ… ஆனா நானே காரணமா இருப்பேன்னு சத்தியமா நினைக்கலை…. நீ சொல்லுற மாதிரி, உன் பயம் நடக்காதுன்னு சொல்ல முடியாது தான்… ஏன்னா என் புத்தி அதுதான?... கூடப்பிறந்த தம்பியையே ஒதுக்கி வைச்ச பாவி தான நான்… உயிருக்கு உயிரா இருந்த அர்னவ்கூட, உன் அப்பாகூட பேசுறதுக்கு தடை போட்ட கொடுமைக்காரான் தான நான்… அப்படி இருக்கும்போது உன் பயம் நியாயமானதில்லைன்னு யாராலயும் சொல்ல முடியாது தான் சரயூ…. இது அத்தனைக்கும் காரணம், நான் உன் மேல வச்சிருக்குற அளவு கடந்த அன்புன்னு என்னை நானே ஏமாத்திட்டிருந்திருக்கேன் இத்தனை நாளா…. ஆனா இப்போதான் புரியுது… ஆள் அண்டாத என் புத்தியும், சொந்தங்களோடு சொந்தமா பழக விருப்பப்படாத என் கேடுகெட்ட மனசும் தான் அத்தனைக்கும் காரணம்னு….. நினைச்சுப்பார்க்கவே அருவெறுப்பா இருக்கு சரயூ… நா….ன்…….”

அவன் அடுத்து சொல்லக்கூட முடியாது தவிக்க, அவள் அவனைப் பார்த்தாள்…

“அன்னைக்கு சொன்னல்ல சரயூ… தப்பு செஞ்சவங்க எல்லாரும் மன்னிப்பு கேட்குறதில்லை… அந்த மன்னிப்பும் மறுக்கப்படுறதா இருக்கும்போது யாரும் மன்னிக்கவும் தயங்குறதில்லைன்னு…. என் விஷயத்துல நீ ஏன் தயங்கினேன்னு எனக்கு இப்போ புரியுது சரயூ…. நான் பண்ணின எதுவுமே மன்னிக்கக்கூடிய விஷயம் கிடையாது…. ஒருவேளை, நீ சொல்லுற மாதிரி நடந்து, நம்ம மகனுக்கும் நான் எதிரியாகுற நிலை வந்திருந்தா, எனக்கு நரகம் கூட கிடைக்காது…. அவ்வளவு பாவியா இருந்திருப்பேன்… நான் பாவி சரயூ… நான் பா….வி……”

தன் தலையில் அடித்தபடி அவன் அழ, அவள் அவன் கைப்பிடித்து தடுத்தாள்….

அவளின் கைகளுக்குள் தன் கரத்தினை விட்டுவிட்டவன்,

“நீயாவது என்னை அடிச்சிடு சரயூ… உன் கோபம், ஆதங்கம் போகுற வரைக்கும் அடி சரயூ…. அடி….” என்றவன் சட்டென அவள் பிடியிலிருந்து தன் கரங்களை விடுவித்துக்கொண்ட கையோடு அவள் கரத்தினை பிடித்து தன் கன்னத்தில் அடித்துக்கொள்ள முனைய,

“என்ன காரியம் பண்ணுறீங்க திலீப்?....” அவள் துடித்துப்போனவளாய் கூற,

“என் மேல அடிபடவே விடாம தடுக்குறீயே…. இத்தனை நாள் உன் மனசில நான் அடிச்சிருக்கிறேனே அதுவும் தெரிஞ்சே…. என்னால தாங்க முடியலை சரயூ… நினைக்கவே அசிங்கமா இருக்கு….”

அவன் வேதனையோடு விழி மூடிக்கொள்ள,

“இதனால தான் நான் இத்தனை நாள் உங்ககிட்ட சொல்லாம மறைச்சேன்… நீங்க மனம் திருந்திடுவீங்கன்னு எனக்கு தெரியும்… ஆனா உண்மை தெரிய வரும்போது நிஜமாவே துடிச்சிபோவீங்கன்னு தெரிஞ்சுதான் நான் சொல்லாமலே இருந்தேன்… இன்னைக்கு என்னையும் மீறி சொல்லிட்டேன் எல்லாத்தையும்…. என்னை மன்னிச்சிடுங்க திலீப்….”

அவள் கையெடுத்து கும்பிட்டு கேட்க, அவன் அவளைப் பார்த்து பிரமித்துப்போனான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.