(Reading time: 78 - 156 minutes)

சிஸ்… அப்புறம் இதெல்லாம் அவளுக்கு இப்போதைக்கு தெரிய வேண்டாம்… நீங்களும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதீங்க ப்ளீஸ்…”

“கவலைப்படாத அர்னவ்… நான் எதுவும் சொல்லமாட்டேன்… அவகிட்ட நீ எப்போ சொல்லணும்னு முடிவு பண்ணியிருக்கியோ அப்பவே சொல்லு… ஒகேயா?...”

“சரி சிஸ்…” என்றவனும் மன நிறைவோடு போனை வைத்தான்….

அதன் பின் அடுத்த இரண்டாவது நாளிலேயே, அவள் ஜனனியோடு சேர்ந்து படிக்க ஆரம்பித்தாள்…

படித்துமுடித்து விட்டு வீட்டிற்கு வரும்போது, அர்னவ் அவளுக்கு அழைப்பான்…

“சொல்லுங்க கார்த்தி… சாப்பிட்டீங்களா?...”

“நான் சாப்பிட்டேன்… நீ சாப்பிட்டியா?... வீட்டுக்கு வந்துட்டியா?...”

“எல்லாம் ஆச்சு….”

“ம்ம்… அப்புறம், உங்க ப்ரிப்பரேஷன் எல்லாம் எப்படி போகுது?...”

“ம்ம்… நல்லாவே போகுது….”

“குட்… குட்… எவ்வளவு போர்ஷன் கவர் பண்ணியிருக்கீங்க…”

“ஹ்ம்ம்… அல்மோஸ்ட் ஹாஃப் ஓவர்…”

“வெரிகுட்… அப்போ அந்த ஹாஃப் போர்ஷன்ல இருந்து என்ன கேட்டாலும் பதில் சொல்லிடுவ அப்படித்தான?...”

“கண்டிப்பா…”

“சரி… அப்போ நான் சில கேள்வி கேட்குறேன்… பதில் சொல்லுறீயா?...”

“கேள்வியா?... நீங்களா?... என்ன சொல்லுறீங்க?...”

“உங்கிட்ட கேள்வி கேட்கணும்னே ஒரு புக் வாங்கிட்டு வந்தேன் இன்னைக்கு…”

“மூஞ்சியப்பாரு…. ம்ம்…. கேளுங்க….”

“வடசொல் கிளவி வடஎழுத் தொரீஇ

எழுத்தொரு புணர்ந்த சொல்லாகும்மே…”

“ஹேய்… என்ன இது?....”

“இருடி… அவசரப்படாத… கேள்வியையும் கேட்டுடுறேன்…”

“ம்ம்… கேளுங்க…”

“இந்த வரிகள் இடம்பெற்ற நூல் எது?....”

“கார்த்தி… எனக்குத் தெரியலை…”

“சரி… இது ரிலேட்டடா ஒருத்தர் பேரை கேட்குறேன்… அதை வச்சி சொல்லு சரியா?...”

“சரிம்மா…”

“வடமொழி எழுத்தையும், பிறமொழி கலப்பையும் தடுத்தவர் யார்?...”

“அய்யோ தெரியலையே….”

“தெரியலையா?... ஹாஃப் போர்ஷன் முடிச்சிட்டன்னு சொன்ன… அதுல தான இதுவும் வருது?...”

“இது எதுல வருது சொல்லுங்க முதல்ல?...”

“கம்பராமாயணம் படிச்சியா இல்லையா?...”

“அதெல்லாம் அத்துப்படி எனக்கு…”

“அப்போ அதுல தான இதுவும் வருது?...”

“விளையாடாதீங்க கார்த்தி… அதுல எங்க இது வருது?...”

“கம்பர் பத்தி நீ தெரிஞ்சிக்கவே இல்லைன்னு சொல்லு… புக் பின்னாடி இருந்ததை நீ பார்க்கவே இல்லன்னு சொல்லு…”

“கம்பர் பத்தி ஓரளவுக்கு தெரியும்… ஆனா….”

“இழுக்காத… ஃபர்ஸ்ட் ஒரு நோட்டும் பேனாவும் எடு…”

“எது?....”

அவள் அதிர்ந்து போனவளாய் கேட்க,

“எடுடி…..” என்றான் அவன் சற்றே அழுத்தமாக…

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.