(Reading time: 78 - 156 minutes)

முதல்ல விஷயத்தை சொல்லு…” என ஜனனி கேட்க,

அவளிடம் அர்னவுடன் பேசியதை கூறியவள்,

“இப்போ கூட எழுதுறேன்னு ஒரு வார்த்தை சொல்லமாட்டிக்குறாங்க… அப்படி என்ன தான் வெறுப்போ பரீட்சை எழுதுறதுல?... எனக்கே தெரியலை…” என முகம் தூக்கி வைத்துக்கொள்ள,

“சரி விடு… அவன் அப்படித்தான்னு உனக்குத் தெரியும்ல… அவனுக்கு இதுல எல்லாம் இஷ்டம் இல்லன்னு சொல்லுறான்ல… அப்போ விட்டுடணும்… கம்பெல் பண்ணக்கூடாதுடா…”

“எனக்குப் புரியுது ஜனனி… ஆனா…..”

“விடு அதான் எல்லாம் சுமூகமா முடிஞ்சதுல… இன்னும் ஏன் போட்டு குழப்பிக்கிற?...”

“தெரியலை… மனசுக்குள்ள ஒரு குழப்பம் இருந்துட்டே இருக்கு… ஏன்னு தெரியலை….”

“லூசு விடுடி… நாம எக்ஸாம்க்கு அப்ளை பண்ணிட்டு படிக்க ஆரம்பிக்கலாம்… சரியா?...”

“ம்ம்ம்… சரி…” என்ற ஜானவியும் அலுவலகத்தில் தனது அன்றைய நாள் வேலையை ஆரம்பிக்க, ஜனனியும் தனது வேலையை துவங்கினாள்…

இரவுப் பொழுதில், ஜனனி காலையில் பேசியதையே அசைபோட்டுக்கொண்டிருந்த ஜானவியின் கவனத்தை கலைத்தது அவளது செல்போன்…

“ம்ம்… சொல்லுங்க கார்த்தி…”

அவளின் பதிலே அவனுக்கு எதுவோ நடந்திருக்கிறது என புரிய வைக்க, அவளிடம் என்ன ஏது என்று விசாரித்தான்…

அவளும் அனைத்தையும் சிறு அழுகையினூடே கூற, அவனுக்கு மனம் வலித்தது…

“அனைத்தும் தன்னால் தானே…” என எண்ணியவன், அவளுக்கு முடிந்த மட்டும் சமாதானம் செய்து உறங்க வைத்தான்…

பின் உடனேயே ஜனனிக்கு போன் செய்தான்…

“சொல்லு அர்னவ்… எப்படி இருக்குற?...”

“நல்லா இருக்குறேன் சிஸ்… நீங்க?...

“எனக்கென்ன நான் நல்லா இருக்குறேன்… ஆமா என்ன இந்த நேரத்துல போன் பண்ணியிருக்குற? எதுவும் முக்கியமான விஷயமா?...”

“சிஸ்… எப்படி ஆரம்பிக்கன்னு எனக்குத் தெரியலை… அன்னைக்கு நீங்க போன் பண்ணி அவளுக்கு கல்யாண ஏற்பாடு செய்ய ஆரம்பிச்சிட்டாங்கன்னு சொன்னதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி தான் அந்த விஷயம் எனக்கும் தெரிய வந்துச்சு… நீங்களும் சொன்னதும், எனக்கு என்ன செய்யுறதுன்னு தெரியலை… நான் அவளை விரும்பினாலும், அதை அவகிட்ட தெரியப்படுத்திக்கலை… அதுக்கு சில காரணங்கள் இருக்கு… என்னால அந்த காரணங்களை அன்னைக்கு உங்ககிட்ட சொல்ல முடியலை… அது மட்டும் இல்லாம, முடிஞ்ச அளவு இருக்குற பிரச்சினையை நான் உடைக்கத்தான் முயற்சி பண்ணினேன்… ஆனா என்னால முடியலை… அதனால தான், என்னால அவ வாழ்க்கை வீணாப்போயிடக்கூடாதுன்னு தான் நான் அன்னைக்கு அவ கிட்ட வெளிநாடு போறேன்… இனி இந்தியா வரவே மாட்டேன்னு சொல்லிட்டு போனை சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டேன்… அவளும் அடுத்து என்ன செய்யுறதுன்னு வேற வழி தெரியாம அப்படி ஒரு காரியத்தை செஞ்சிட்டா… அதுக்கு முழுக்க முழுக்க காரணம் நான் தான்… திட்டுறதுன்னாலும், தண்டிக்கிறதுன்னாலும் எனக்கு கொடுங்க… நான் வாங்கிக்கிறேன்… ஆனா அவளை எதுவும் சொல்லாதீங்க சிஸ்… அவ பாவம்… அவ என்னால தான் அப்படி செஞ்சிட்டா… அதுக்கு நான் உங்க எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்குறேன்… மன்னிச்சிடுங்க… நீங்களும் அவ மேல இருக்குற பிரியத்துல தான் அவளை திட்டினீங்கன்னும் எனக்கு தெரியும்…. அவ மேல நீங்க ரொம்ப பாசமா இருக்குறீங்கன்னும் எனக்கு புரியுது சிஸ்… நடந்த எல்லா தப்புக்கும் நான் தான் சிஸ் காரணம்… அவ மேல தப்பில்லை சிஸ்… தப்பெல்லாம் என்னோடது தான்….”

அவன் மனமாற மன்னிப்பு கேட்க, அவளுக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை…

அவளின் அமைதியை கவனித்தவன், சரயூவிடம் சொன்ன விஷயத்தை அவளிடமும் கூற, அவள் விழிகள் விரிந்து புருவங்கள் உயர்ந்தது…

அவன் சொல்லி முடித்த பின்னும், அவளிடம் பேச்சு மூச்சு இல்லை….

“சிஸ்… என்னாச்சு?... இன்னும் உங்களுக்கு கோபம் போகலையா?...”

“இல்ல அர்னவ்… எனக்கு என்ன பேசுறதுன்னே தெரியலை… அவ அப்படி ஒரு முடிவை எடுத்துட்டான்னு அவ மேல நான் ஆத்திரப்பட்டதென்னவோ உண்மைதான்… ஆனா அவ ஏன் அப்படி ஒரு முடிவு எடுத்தான்னு எனக்கு புரியவும் செஞ்சது… இருந்தாலும் அந்த செஞ்ச காரியத்தை என் மனசு இப்போவர ஏத்துக்கலை… ஆனா அதே நேரத்துல, இப்போ நீ சொன்ன விஷயம், என் மனசை கொஞ்சம் அந்த கவலையிலிருந்து வெளியக் கொண்டு வந்துட்டு… உன்னை மாதிரி ஒரு கணவன் கிடைக்க அவ கொடுத்து வச்சிருக்கணும்… உன்னைப் பத்தி தெரியாமலே உனக்காக உயிரை விடத்துணிஞ்சாளே, அவ கிடைக்க நீயும் கொடுத்து வச்சிருக்கணும்… அவ காதலை நான் மதிக்கிறேன்… ஆனா உன் காதலுக்கு நான் தலைவணங்குறேன் கார்த்தி… நிஜமாவே சொல்லுறேன்… மனசு நிறைஞ்சிட்டு…”

அவள் தன மனதார கூற, அவனுக்கும் சற்றே நிம்மதியாய் இருந்த்து…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.