(Reading time: 78 - 156 minutes)

ன்ன மிரட்டுறீங்க?...”

“மிரட்டுறதா?... வர்ற கோபத்துக்கு அடிதான் வாங்கப்போற நீ…”

“அடியா?....”

அவள் தன் உதட்டைப் பிதுக்கி அங்கே கேட்பது அவனுக்கு இங்கே தெரியத்தான் செய்தது…

மெல்லிய புன்னகையுடன், “ஆமா, சொன்னது கேட்கலைன்னா அடிதான் விழும்… படிக்குறேன் படிக்குறேன்னு சொல்லி, இரண்டு பேரும் சும்மா தலைப்புக்கு கீழ இருக்குறதை மட்டும் படிச்சிட்டு விட்டுடுவீங்க போல… அதுக்குப் பின்னாடி இருக்குறதை எல்லாம் யார் படிப்பா?...”

“ம்ம்ம்ம்ம்…….”

“ம்ம்ம்… சொன்னதெல்லாம் போதும்… நோட்டை எடுன்னு சொன்னேன்… எடுத்தியா?...”

“எடுத்துட்டேன் சொல்லுங்க…”

“எழுது நான் சொல்லுறதை…” என்றவன், தான் முதலில் சொன்ன பாடல் வரிகளை சொல்லிவிட்டு அது தொல்காப்பிய நூல் என்றான்…

“ஓஹோ……”

“ஹ்ம்ம்… ஆமா அந்த நூல் தான்… வடமொழி எழுத்தையும், பிறமொழிக்கலப்பையும் தடுத்தது யார்ன்னு சொல்லு இப்போ?...”

“ம்ம்… தெரியலையே…”

“லூசு… கம்பர் தாண்டி…”

“ஓ… அவரா… சரி எழுதிட்டேன்…”

“ம்ம்… வட சொல்லைப் பயன்படுத்தும்போது வட எழுத்தை நீக்கித் தமிழ்ப் பயன்படுத்த வேண்டும் என்னும் தொல்காப்பிய இலக்கணப்படி ராமன், ஹனுமன், லஷ்மணன், விபீஷணன் என்னும் பெயர்களை இராமன், அனுமன், இலக்குவன், வீடணன் என நெறிப்படுத்திய தமிழ் வேந்தர் கம்பரே…..”

சொல்லியவன், “எழுதிட்டியா?....” எனக் கேட்க,

“ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்……..” என்றாள் அவள்…

“என்ன ம்ம்ம்ம் இவ்வளவு பெரிசா இருக்கு?... என்ன புரிஞ்சது சொல்லு…”

“தொல்காப்பிய நெறி நின்றவர் கம்பர்ன்னு புரிஞ்சது…”

“ரொம்ப சரி…. அப்புறம் இன்னொரு விஷயம் சொல்லுறேன்… அதையும் எழுதிக்கோ…”

“உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும், திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும், மீண்டும் அதனைப் புதுப்பித்து விடலாம்… இதை சொன்னது யாருன்னு சொல்லு?...”

“தெரியலைம்மா…”

“கால்டுவெல்….. சரியா?...”

“ம்ம்ம்ம்ம்ம்…… எழுதிட்டேன்….”

“எழுதினா மட்டும் போதாது… மனசுல பதிய வச்சிக்கோ… சரியா?...”

“கண்டிப்பாஆஆஆஆஆஆஆஆ………………..”

“ஏண்டி கத்துற?...”

“இல்லையே… நான் எங்க கத்தினேன்?...”

“எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு… எங்க எழுதினதெல்லாம் எனக்கு புகைப்படமா எடுத்து அனுப்பு…”

“ஹலோ… என்ன நக்கலா?.....”

“லூசு அப்படி எல்லாம் இல்லடி…”

“அப்புறம் எதுக்கு உங்களுக்கு அந்த புகை….ப்….படம்……?...”

“இப்போ அனுப்புவியா மாட்டியா?... அத மட்டும் சொல்லு….”

அவன் குரலில் ஒரு அழுத்தத்தோடு கேட்க, மேற்கொண்டு அவனோடு வாதிடாமல், அனுப்பி வைத்தாள் அவளும்…

“பார்த்தாச்சா?... நம்புறீங்களா இப்போ?... சந்தோஷமா?...”

அவள் அடுத்தடுத்து கேள்விகள் கேட்க, அவனோ சிரித்தான்…

“இப்போ எதுக்கு சிரிக்குறீங்க?...”

“உன் எழுத்து எப்படி இருக்குன்னு பார்க்குறதுக்குத்தான் கேட்டேன்… ஆனா நீ சந்தேகத்துல கேட்டதா நினைச்சிக்கிட்ட… ம்ம்… ரொம்ப அழகா இருக்கு உன் எழுத்து… எனக்கு பிடிச்சிருக்கு…”

“லூசு… லூசு….” அவள் அவனை செல்லமாய் திட்டினாள்…

“பிடிச்சிருக்குன்னு சொன்னா லூசா?...” அவன் போலி கோபத்தோடு கேட்க,

“ஆமா லூசு தான்…” என்றாள் அவளும்…

“அப்போ நீ தான் லூசு… அடிக்கடி பிடிச்சிருக்குன்னு நீ தான் எங்கிட்ட சொல்லுவ…. லூசு… லூசு…”

“ம்ம்ம்… ஹூம்ம்… போங்க…..”

“ம்ம்… போகவா?...”

“அய்யோ… லூசு… போதும்…”

“என் செல்ல லூசு… லூசு… ஹ்ம்ம்….”

கொஞ்சலாய் சொல்லிவிட்டு அவன் சிரிக்க, மறுமுனையில் அவள் முகத்திலோ வெட்கமும், இதழ்களிலோ புன்னகையும் தவழ்ந்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.