(Reading time: 78 - 156 minutes)

வள் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் உணர்ந்தவனுக்கு பனிச்சாரல் தன் மேல் பொழிவது போல் இருக்க, அவனுக்கும் அவளை அணைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் பிறந்தது…

அவள் அவன் விழி அசைவுக்காக காத்திருக்க, அவன் தன் மனதை கட்டுப்படுத்திக்கொண்டு,

“லூசு… இது ரோடு… இங்க போய்… வா பேசாம… நேரமாச்சு… வீட்டுக்குப் போகலாம்…”

அவன் சொல்லிவிட்டு பைக்கை ஸ்டார்ட் செய்ய, அவள் அவனையே வெறித்துப்பார்த்தாள்…

பின் அவள் வராத்து கண்டு, திரும்பியவன், “நம்ம வீட்டுக்கு நீ என் மனைவியா வந்தபிறகு, நீ சொன்னதை செய்…. நான் மறுக்கமாட்டேன்… ஆனா இப்போதைக்கு வேண்டாம்…. ப்ளீஸ்… சகி… புரிஞ்சிக்கோ….”

அவன் கெஞ்சலுடன் கூற, எதுவும் பேசாது பைக்கில் வந்து அமர்ந்தாள்…

அதன் பின்னர், ஒரு மாதம் கழித்து, ரிசல்ட் வந்தது…

அனைவரும் எதிர்பார்த்தது போல் அவர்கள் இருவரும் தேர்ச்சி பெற்றிருக்க, அனைவரின் முகத்திலும் புன்னகை தவழ்ந்தது…

“இது போதும்மா… இது போதும்… இப்போ எனக்கு எப்படி இருக்கு தெரியுமா?... போதும்மா… அப்பாக்கு இது போதும்…” என்ற ஜானவியின் தந்தை, அவளின் கைகளைப் பிடித்துக்கொண்டு கூற, தகப்பனின் தோள் சாய்ந்திருந்தாள் அவள் கண்ணீருடன்…

“இன்னும் கல்யாணத்தை தள்ளிப்போட வேண்டாம் சம்மந்தி… அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வச்சிக்கலாம்…”

ஜானவியின் தந்தை அர்னவின் தந்தையிடன் கூற

“ஏன் இந்த அவசரம் சம்மந்தி… இண்டர்வியூ முடியட்டுமே…” என்றார் ரவீந்திரன்…

“இல்ல சம்மந்தி… மாப்பிள்ளை இதுவரை வெயிட் பண்ணதே போதும்… இன்னைக்கு ஜானவி பாஸ் பண்ணியிருக்கான்னா அதுக்கு முழு காரணம் மாப்பிள்ளை தான்… அவர் எனக்காக நிறைய உதவி செஞ்சிருக்கார்… அவருக்கு நான் இந்த ஒரு உதவியாவது செய்யணும்னு ஆசப்படுறேன்…”

“மாமா… அதெல்லாம் எதுவும் இல்லை… ஜானவிக்கு இண்டர்வியூவும் முடியட்டும்… அப்புறமா கல்யாணம் பண்ணி வைங்க…”

அவன் பிடிவாதமாக கூறிவிட, அவரும் அமைதியாக இருந்தார்….

அடுத்த சில வாரத்தில், அவளுக்கும், ஜனனிக்கும் இன்டர்வியூ வர, அர்னவ் அவர்களுக்கு உதவி செய்தான்…

என்னென்ன செய்ய வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று அவன் விளக்கம் கொடுக்க, அவள் விழி விரிய அவனையேப் பார்த்தாள்…

என்ன என அவன் புருவம் உயர்த்தி கேட்க, இல்லை என சிரித்தவண்ணம் தலையாட்டினாள் அவள்…

இண்டர்வியூக்கு அவர்களை உள்ளே அனுப்பி விட்டு, குட்டி போட்ட பூனை மாதிரி நடந்து கொண்டிருந்தான் அர்னவ்…

சில மணி நேரம் கழித்து அவள் முகமெங்கும் சந்தோஷத்துடன் வெளியே வந்த போது, அங்கே அவளுக்காக காத்திருந்தார் அவளின் தந்தை…

“அப்பா…”

“சொல்லும்மா… வேலை கிடைச்சிடுச்சு தான?...”

அவர் பெரும் தவிப்புடன் கேட்க, ஆம் என்றாள் அவள்…

“கடவுளே, என் வேண்டுதலை நிறைவேத்திட்டப்பா… நிறைவேத்திட்ட….”

அவர் கண்கள் கலங்க கூற, தகப்பனின் காலில் விழுந்து வணங்கினாள் அவள்…

“நல்லாயிரும்மா… நல்லாயிரு… உனக்கு ஒரு குறையும் வராது….” என்றவர் மகளை எழுப்பி நிற்க வைக்க, அவளின் விழிகள் அங்கும் இங்கும் தேடி அலைந்தது அர்னவினை…

அவள் தேடலை கண்டு கொண்டவர், “இங்க தான்மா நின்னுட்டிருந்தார்… ஒரு போன் வந்துச்சு… அதான் பேச போயிட்டார்… இப்போ வந்துடுவார்…” என சமாதானம் சொல்ல,

அவளுக்கு புரிந்து போனது அவனது செயல்… அன்று போலவே இன்றும் பெற்றவர்களின் உரிமையை அவன் நிலைநாட்டியதை எண்ணி பெருமைப்பட்டுக்கொண்டவள், அவன் வரும் நேரத்திற்காக காத்திருந்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.