(Reading time: 42 - 84 minutes)

என்னாச்சு அனி? கேட்டவனுக்கு புன் முறுவலால் ஒன்றுமில்லை என்பதாக அமைதியாக பதிலளித்தாள்.

தூக்கம் வரலியா? வா என்றழைத்தவனாய் அவள் கைப்பற்றி அழைத்துச் செல்ல தயங்கியே பின் தொடர்ந்தாள். அவள் கையோ அவள் மன நிலை பிரதிபலித்த விதமாய் பயத்தில் விரைத்து குளிர்ந்து கிடந்தது.விட்டால் நடுங்கி விடுவாளோ?. அறையின் உள்ளேச் சென்றவன் அலங்காரத்தை கவனியாதவன் போல வா நம்ம கிஃப்ட்ஸ் எல்லாம் திறந்து பார்ப்போமா? என்றழைக்க அவளும் உற்சாகமானாள்.

கதவை தாழிட்டவன் கையில் ஒரு கிஃப்ட் பார்சலோடு ஆர்வமாய் நின்றவளையே அவளறியாமல் கண்களால் பருகிக் கொண்டான். இன்னிக்கு இது மூணாவது ஸாரி. ஒவ்வொண்ணுல ஒவ்வொரு அழகா இருக்கா……என்றெண்ணிக் கொண்டிருந்தவனை ஏதேச்சையாக நிமிர்ந்து பார்த்தவள் அவன் பார்வையில் தடுமாறினாள்.

அருகே வந்தவனுக்கு இது என் ஃபிரண்ட்ஸ் கிஃப்ட் அத்தான், எனக் காண்பிக்க வெள்ளை கவுன், கருப்பு சூட் அணிந்த மணமக்கள் மேற்கத்திய நடனமாடும் ஷோ பீஸ் ஒன்று மிக அழகாய் இருக்க அதில் தன்னையும் ரூபனையும் பொருத்திப் பார்த்தவள் முகம் மலர, அதைப் பார்த்து

நாமும் டேன்ஸ் செய்யலாமா? என இவன் கேட்க,

வெட்கமாய் அவள் மறுத்தாள்.

பேச்சுக் கொடுத்துக் கொண்டே சில கிஃப்ட் பார்சல்கள் பிரிக்கப் பட மிரண்டுப் போய் இருந்தவள் இப்போது அவனுடன் சகஜமானாள்.

அப்போது அஷோக் தந்த கிஃப்ட் ஞாபகம் வரவே அதனை எடுத்து அவசரமாய் பிரிக்கலானான் ரூபன், தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொள்ளப் போவதை அறியாமல்…

தன் கையில் இருந்ததை தள்ளி வைத்தவள் அந்த பெரிய பார்சல் பிரிக்க அவனுக்கு உதவி செய்யலானாள். அது ஒரு மிக பெரிய போட்டோ பிரேம் என புரிய ஆரம்பித்தது. இதிலென்ன சர்ப்ரைஸ் இருக்க போகிறது என்று எண்ணியவனுக்கு நிஜமாகவே ஆனந்த அதிர்ச்சிதான்.

அதில் அவனும் அவளுமாக தீபன் திருமணத்தன்று 6 வருடங்களுக்கு முன்பாக எடுத்த புகைப்படம் என்லார்ஜ் செய்யப்பட்டு பிரேம் செய்யப் பட்டிருந்தது. அது ஜீவன் அவனது கேமெராவிலிருந்து அழித்த புகைப்படமல்லவா?

ஆவென ஆச்சரியத்தில் மகிழ்ச்சியில் திக்கு முக்காடிய அவனுக்கு உள்ளே இருந்த க்ரீட்டிங்க் கார்ட் ஒன்று கண்ணில் பட எடுத்து வாசித்தான்.

“நீ சொல்லாவிடினும் உன் காதலை நான் அன்றே அறிவேன் நண்பா. பின்னொரு நாள் உதவும் என்பதாலோ என்னவோ எனனுடைய கேமெராவில் சிக்கிய இந்த தருணத்தை நான் பத்திரப் படுத்தி வைத்திருந்தேன்.

உனக்கும், என் அன்புத் தங்கை அனிக்காவிற்க்கும் திருமண வாழ்த்துக்கள்” என்று எழுதியிருந்தது.

ஆனந்த அதிர்ச்சியில் இருந்தவன் அனிக்காவின் முகபாவனையை பார்க்க தவறினான்.

இந்த ஃபோட்டொ சூப்பரா இருக்குல்ல அனி, என் ஃபேவரைட் என்றவன் ஃபோட்டோவிலிருந்த அனிக்காவிற்க்கு முத்தம் ஒன்று வைக்க நிஜ அனிக்காவிற்கு பிரளயமே வெடித்து விட்டது.

நீங்க அன்னிக்கு என்னை ஏமாத்தி எடுத்த ஃபோட்டோ தான இது. எனக்கு அன்னிக்கே ரொம்ப கோபம் கோபமா வந்தது. இப்ப என்னன்னா அதுக்கு கிஸ் பண்ணுறீங்க” என்று பொரிந்தாள்.

அப்போதுதான் திரும்பி பார்த்தவன்,

உனக்கு இந்த விஷயம் தெரியுமா என, அவளும் தான் அறிந்த அத்தனையும் கூறினாள்.

நீங்க அன்னிக்கு எவ்வளவு ஃப்ராடா இருந்தா என் பக்கத்தில வந்து ஃபோட்டோ எடுத்திருப்பீங்க தன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு முறைத்துக் கொண்டு நின்றவளை என்னென்னவோ சொல்லி சமாதானப் படுத்தப் பார்த்தான். அவள் கேட்கிற மாதிரி இல்லை.

இங்க பாரு அனி, அப்ப நான் 2 வருஷம் வெளி நாட்டுக்கு வேலைக்கு போக புறப்பட்டு இருந்த டைம், உன்னை 2 வருஷம் கழிச்சு தான் பார்க்க முடியும்கிற சிச்சுவேஷன். நீ வேற அந்த ஸாரில ரொம்ப அழகா இருந்த, அதான் ஆசைல எடுத்துட்டேன், வேனும்னா எதுவும் பனிஷ்மெண்ட் கொடு, சண்டைப் போடாத .சும்மாவே ஒரே வேலை செஞ்சு டயர்டா இருக்கு என நடித்தான்.

ஓ அப்ப அதனால தான் அதே கலர் ஸாரி மேரேஜ்காக தேடிருக்காங்க என எண்ணியவள் அவன் டயர்டா இருக்கு என்றதும் இளகி விட்டாள்.    

சரி அப்ப நான் நாளைக்கு சண்டை போடுவேன்,

என்றதும் சண்டை தற்காலிகமாக ஒத்தி வைக்கப் பட்டது.இன்னைக்கோ நாளைக்கோ எப்போது இருந்தாலும் தான் என்ன ரூபனுக்கு இவளை ஏமாற்ற புது வழிகள் புலப்படாமலா போகும்?

என்னது நாலைக்கு சண்டை போடுவியா.........சரி போட்டுக்கோ….என்றவன்,

“ஏன் அனி ரொம்ப நேரமா நிக்கிறியே உனக்கு கால் வலிக்கலை என,

ஆமா வலிக்குது என்றவளை இடுப்பில் கைக் கொடுத்து தூக்கிக் கொண்டவன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே படுக்கை வரை தூக்கி வந்து கவனமாய் அவளையும் படுக்க வைத்து அவனும் படுக்க, இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி பேசிக் கொண்டிருக்க,

ஏதேச்சையாக உருண்டவள் கைகளில் கொத்தாக சிகப்பு நிற ரோஜா இதழ்கள் கிடைக்க அதைப் பார்த்து திருதிருத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.